Dec 25, 2014

ERP எனும் தேசிய நெடுஞ்சாலை வரி உள்நாடும் வெளிநாடும்

        இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான வரியில் இருந்து வியாபார நோக்கமில்லாத சொந்த வாகனம் வைத்து பயணிப்போருக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஏன்  என்றால் போக்குவரத்து நெரிசலை  கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் , ஆனால் இந்த வரி இழப்பை பெட்ரோல் ,டீசல் விலையில் 1 ரூ உயர்த்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகள் வெளிநாடுகளில் உள்ளது போல இருக்கிறதா என்றால் இல்லை.வெளிநாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்று இனி பார்ப்போம்.

மின்னணு  கட்டண கருவி

    வளர்ந்த நாடுகளில் நெடுஞ்சாலைகளில் வழித்தடம் குறைந்தது நான்கிற்கு மேல் தான் இருக்கும். சாலைகளும் மழைக்காலத்தில் கூட 90 கி.மீ வேகத்தில் வாகனத்தை செலுத்தினாலும் நிறுத்தினால் அந்த இடத்திலே நிற்க கூடிய தரத்தில் இருக்கும்.வளர்ந்த நாடுகளில் வரிவசூல் செய்ய மையங்கள் எதுவுமில்லை . சாலைகளில் இதற்கு என்று மின்னணு  கட்டண கருவிகள்  (ERP)பொருத்தப்பட்ட இரும்பு வளைவுகள் இருக்கும். வாகனத்தை பதிவு செய்யும் போதே போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தின் பதிவு எண் கொண்ட மின்னணு கருவி கொடுப்பார்கள்.அதை வாகனத்தின் முன் பொருத்த வேண்டும்.அந்த மின்னணு கருவியில் பணம் நிரப்பட்ட பண அட்டையை(cash card) செருகப்பட்டு இருக்க வேண்டும்.

பண அட்டை
   இந்த பண அட்டையில்  தானியங்கி இயந்திரத்தின் மூலமாகவோ அல்லது சில கடைகளில் பணம் நிரப்பிக்கொள்ளலாம்.வாகனம் இந்த வளைவுகளை கடக்கும் போது பணம் மின்னணு கருவி மூலமாக தானாவே அரசுக்கு சென்று விடும். அட்டையில் பணமில்லாத போது வாகனத்தை செலுத்திச் சென்றால் $300  அபராதம் வீடு தேடி வரும்.இனி கட்டண விபரத்தை பார்ப்போம்.

   கட்டணங்கள் நம் நாட்டில் உள்ளது போல சாலைகளை பயன்படுத்துவதற்கு அல்ல ,போக்குவரத்தை நெறிப்படுத்த மட்டுமே. கட்டணம் சுறுசுறுப்பாக இருக்கும்  காலை 7.30 முதல் 9.30 வரையும் மாலை 5.30 முதல் 7.30 வரையும் மட்டுமே . மற்ற நேரங்களில் இல்லை.
வாகனங்களின் அளவை பொறுத்து, நேரத்தை பொறுத்து கட்டணம் மாறுபடும் . காலை 7.30 க்கு சாதாரண மகிழந்துவிற்கு (car) $0.50 தொடங்கி படிப்படியாக பெரிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்திற்கு (container lorry)$3.00 ஆக முடியும்.

    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் $0.50 கூடும்.இதே போலவே  தான் மாலையும் கட்டணம் இருக்கும்.முக்கியமான ஒன்று ஒவ்வொரு  ERP மின்னணு கருவி உள்ள இடத்திற்கும் முன்பு மாற்றுப்பாதை இருக்கும். விரைவாக செல்ல வேண்டாம் அல்லது கட்டணமில்லாது  என எண்ணுபவர்கள்  இந்த பாதையை பயன்படுத்தி கொள்ளலாம்.தேசிய விரைவுச்சாலைக்களில் மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் மாற்றுப்பாதைளில் 50 கி.மீ வேகத்திலும் தான் செல்ல முடியும்.

   நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் எல்லாப்பாதையையும் முட்டடைப்பாக  அடைத்து வைத்து எல்லா நேரங்களிலும் வரி வசூல் செய்து மொத்தமும் தனியார் கையில் சேருகிறது.அப்புறம் எப்படி புதிதாக சாலைகள் போடுவது.பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.மறுபடியும் உலக வங்கியை எதிர்பார்க்க வேண்டியது தான்.நம் நாட்டில் 10 வருடங்களில் இந்த தொழில்நுட்பம் வரும் என எதிர் பார்ப்போம்.

தொடர்பு உள்ள பதிவுகள் 


No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !