Jan 20, 2017

நடைபெறட்டும் சல்லிக்கட்டு ...

பழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்கலைத் தொடர்ந்து தான் சல்லிக்கட்டு பரவலாக பல பகுதிகளில் நடைபெறும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.மாட்டின் கொம்புகளில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற உலோகத்திலான காசு மாலையாக கட்டி இருக்கும், கழுத்தில் சலங்கை மணியும் கட்டி இருக்கும் . மாடு பிடிப்பவர்களுக்கு இது  பரிசாக கிடைக்கும் அல்லது அதற்காக ஈடாக பணத்தை பெற்றுக்கொள்வர்.இது  நாளடைவில் ஏறுதழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்று மருவி விட்டது.


 தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை மிக முக்கியமானது.அதைப்போலவே  ஏறுதழுவுதல் முக்கியமான இந்த விளையாட்டு தொடர்ச்சியாக சில ஆண்டுகள் நீதிமன்றத்தின் தடை காரணமாக நடைபெறவில்லை. இது மக்கள் மனதில் மிகுந்த ஆத்திரத்தை  ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டும் இப்படித்தான் என்று மக்கள் எண்ணிய வேளையில்  மாணவர்கள் கையில் எடுத்த போராட்டம் 4 நாட்களாக  இன்னமும் தொடர்கிறது.அரசியல் கட்சிகளை மட்டும் நம்பினால் ஒன்றும் பயன் தராது என்று எண்ணியே இளைஞர்களும் அவர்களுக்கு துணையாக மக்களும் களத்தில் இறங்கி விட்டார்கள்.

  சமுகவலைத்தளங்களில் தகவல்கள் பரிமாற்றத்தின் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்ற கருத்தை தவிடு பொடியாக்கி இருக்கிறது இந்த போராட்டம். அரசியல் கலப்பில்லாத, வன்முறையில்லாத அறவழியில் நடைப்பெறும் இந்த போராட்டம் வெற்றி இலக்கை நோக்கி செல்வதையே காட்டுகிறது.தமிழகத்தின் பல பகுதிகளில் கல்லூரி இளைஞர்களின் போராட்டமானது ,திரைப்பட நடிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், பொதுமக்களையும் இந்த கடையடைப்புக்கு தூண்டியது என்றால் மிகையாகாது.

   மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. விவசாயிகளின் தொடர்ச்சியான மரணங்கள், காவேரி தமிழகத்தின் பிரச்சனை, மீனவர்களின் பிரச்சனை, என்று பல இருப்பதால் இதற்கு இசைந்தால் மற்ற எல்லாவற்றிற்கும் போராடுவார்கள் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.தமிழகத்தின் மாற்றத்தின் அறிகுறியாக இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.மாற்றங்கள் ஒன்றே மாறாதது.நடைபெறட்டும் மஞ்சுவிரட்டு மக்களின் எண்ணங்களைப்போல.

4 comments:

  1. இந்த அறப்போராட்டம் பல விசயங்களிலும் தொடர வேண்டும்...

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அறப்போராட்டம் முடிவில் வன்முறையுடன் தங்கள் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !