பத்மநாதபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கி.மீ தொலைவில் தக்கலை என்ற இடத்தில் அருகே இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து நாகர்கோவில் 2 0 கி.மீ இருக்கிறது.திருவனந்தபுரம் 65 கி.மீ இருக்கிறது.இந்த அரண்மனையில் அப்படி என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும் . பத்மநாதபுரம் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு அறையிலும் புதையல் எடுத்தது பலருக்கு நினைவுக்கு வரலாம் .அரண்மனையில் சிறப்பு பற்றி பார்க்கும் முன்பு வரலாற்றை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
கி.பி 155௦ ல் இரவி வர்மா குலசேகர பெருமாள் என்ற சிற்றரசன் இந்த திருவாங்கூர் சமஸ்தானத்தை நிறுவி ஆண்டு வந்து இருக்கிறார் .அப்பொழுது இந்த பகுதிக்கு பத்மநாதபுரம் அரண்மனை தலை நகரமாக இருந்திருக்கிறது .அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த மகேந்திரவர்மன் சிறியதாக இருந்த இந்த அரண்மனையை பெரியதாக கட்டி தன் பகுதியை விரிவுபடுத்தி இருக்கிறார்.இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தாலும் இந்த பகுதி மட்டும் தன்னாட்சி பெற்று இருந்திருக்கிறது. காரணம் பிரஞ்சு , டச்சு நாட்டு காலனி ஆட்சியாளர்களுடன் கொண்டு இருந்த நட்பும் நல்லுறவும் தான்.
கி.பி 1750 ல் மகேந்திரவர்மன் தனது எல்கையை மற்ற சிற்றசுகளுடன் போரிட்டு வென்று விரிவுப்படுத்தி தலைநகரை பத்மநாதபுரதில் இருந்து திருவனந்தபுரதிற்கு மாற்றினார்.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்த திருவாங்கூர்சமஸ்தானம் தனியாட்சியாக இருந்து பின்னர் இந்தியதுணைகண்டத்துடன்இணைந்தது .பின்னர் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரி தமிழகத்துடனும் , திருவனந்தபுரம் கேரளா மாநிலத்துடனும் இணைக்கப்பட்டது .அதனால் இந்தபகுதி அதிகம் கேரள மண் வாசனை வீசும்.
இந்த அரண்மனை மேல் தளம் , கீழ் தளம் , முழுவதிலும் மரத்தில் ஆனது .ஆசியாவில் இது போல ஒரு சிற்ப கலைநயம் மிக்க அரண்மனை இல்லை என்பது இதன் சிறப்பு.அரண்மனை சுற்று மதில் சுவர்கள் 15 அடி உயரம் இருக்கிறது. பின்புறம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் இயற்கை அரணாக அமைந்துள்ளது .அரண்மனையின் உள்ளே அரசர் பயன்படுத்திய கேரள முழு மூலிகைகள் ஆனா கட்டில் , தொங்கும் பித்தளை சர விளக்கு , 300 வருடங்களுக்கு முன் உள்ள கடிகாரம் , சீன வணிகர்ககள் அன்பளிப்பாக கொடுத்த ஜாடிகள் , டச்சு கார்கள் வணிகர்ககள் அன்பளிப்பாக கொடுத்த ,மேசை , நாற்காலிகள் .மற்றும் கலைநயம் மிக்க உணவருந்தும் கூடம் மரசிற்பங்கள், கண்ணாடி வேலைப்பாடு நிறைத்த ஒப்பனை அறைகள் , மற்றும் குளியல் அறைஆகியன பார்க்க வேண்டியவை .
![]() |
நுழைவாயில் |
இந்த அரண்மனை முன்னைய கேரளா அரசின் தலைநகரமாக இருந்தது . இது முழுவதும் கேரளா அரசின் பராம்பரியம் நிறைந்தது அதனால் கேரளா அரசின் சுற்றுலா துறையினால் பராமரிக்க படுகிறது.காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறது .அரண்மனையில் உள்ளே மின்சார வசதிகள் இல்லாததால் இந்த நிலை.இந்த கோட்டைக்கு வெளியே சுற்றுலா பயணிகள் நல்ல கலை நயம்மிக்க கைவினை பொருள்களை வாங்கி செல்கிறார்கள் . இந்த பகுதியில் தான் திற்பரப்புஅருவி இருக்கிறது.வாய்ப்பு இருந்தால் சென்று குளித்து பாருங்கள் .
உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா...?
ReplyDeleteஅனுமதி உண்டு .வருகைக்கு நன்றி !
Deleteவிண்முகில் , ராயதுரை வருகைக்கு நன்றி!
ReplyDeleteஅரண்மனையின் 5வது வாசல் இன்னும் திரக்கவில்லை அதை திரக்க நான் தயார்
ReplyDelete