Oct 28, 2012

நச்சு வாயுக்கள் ஒரு அறிமுகம்

     உலகத்தில் தயாரிக்கபடும் பொருள் அனைத்தும் இந்த பயன்பாட்டுக்கு என்று வடிவமைக்கப்படும் .நண்பர் இல்ல திருமணதிற்கு சென்றிருந்த போது திருமண மண்டபத்தில் காற்றாடி(blower fan) பார்த்த போது வெளிநாட்டினர் உபயோகத்தையும் ,இங்கு நாம் பயன் படுத்தும் விதமும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது(மேலேயுள்ள புகைப்படம் பார்க்க ).மாறுபட்ட கோணத்தில்  தான்  புதிய  கண்டுபிடிப்புகள் கண்டுப்பிடிக்கப்படுகிறது.இந்த காற்றாடியின் (blower fan) உண்மையான முழுப்பயன்  பற்றி இந்த பதிப்பில் குறிப்பிடுகிறேன்.

Oct 25, 2012

கொசுவிரட்டிகள் வரமா -சாபமா ?

 
        மழை காலம் வந்தாலே கொசுக்களின் தொந்தரவு தாங்க முடியாது.வீட்டில்கொசுக்களுடன் பெரிய போரட்டமே நடத்த வேண்டி இருக்கும். கொசுக்களின்  ஒழிப்பு முறை பற்றியும் ,அதனால் வரும் நோய்கள் பற்றியும்   இரத்த திருடர்கள்  முந்தைய பதிவில் எழுதி இருந்தேன் ,பார்க்காதவர்கள் படித்து விட்டு வரவும்.மக்கள் வீட்டில்உள்ள  கொசுக்களை விரட்ட சந்தைக்கு வந்திருக்கும் ஆல் அவுட் ,மார்டின் , டோர்டிசே பல நிறுவனங்களின் கொசு விரட்டிகளை பயன்படுத்தி வருகிறோம் .இந்த கொசு விரட்டிகளின் துண்டறிக்கை ஓன்று இருக்கும் .அதை நாம் எத்தனை  பேர் படித்து இருப்போம் .!சில பாதிக்க பட்டவர்களுக்காக இந்த பதிவு.

Oct 20, 2012

கொசுக்களும் ஒழிப்புமுறைகளும்

       மழை காலம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் பல நோய்கள்   மக்களை வழக்கம் போல தாக்க ஆரம்பித்துவிட்டன .அதில் புதிதகாக டெங்கு காய்ச்சல் சேர்ந்து கொண்டுள்ளது.மக்கள் முன்பு எல்லாம் உள்நாட்டின் உள்ள பகுதியில்  பயணம் செய்வதோடு சரி .அதனால் நோய்களும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை மட்டுமே பரவும்.இப்போது மக்கள்  பணம் சம்பாதிப்பதற்காகவும் , தொழில்  செய்வதற்க்காவும்   வெளிநாட்டு விமான பயணம் மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது . வெளி நாடுகளில் இருந்து வரும்போது சிலர் தொற்று நோயை  கொண்டு வந்து விடுகிறார்கள்.இந்த தொற்று நோய்கள்  கொசுக்கள் மூலமாகவும் மனிதர்களை தாக்குகிறது.    கொசுக்களை பற்றி முதலில் பார்த்துவிடுவோம் பிறகு தடுக்கும் முறைகளை பார்ப்போம்.

Oct 17, 2012

பெண்களும் நகை திருட்டுகளும்

     பெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசை மட்டும் என்றுமே   குறையாது.  ஒரு சில பெண்கள் இதில் விதிவிலக்கு . அவர்கள்  திருமணத்திற்கு அல்லது முக்கிய நிகழ்சியின்   போது வீட்டில் உள்ள  நகைகளையும்   எல்லாம் அணிந்து கொண்டு மற்றவரிடத்தில் பெருமையையும் , செல்வம்  இருப்பதாய் காட்டி கொள்வதாக எண்ணுகிறார்கள்.இன்னும் சிலர் நகைக்கடை பொம்மை போல நகைகளை அணிந்து இருப்பர்.அதுவே ஆபத்தானது என்பதை உணர தவறி விடுகிறனர் .அதுவே திருடர்களுக்கு மிக சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடுகிறது.பாடுபட்டு சேர்த்த பணத்தில் கொண்டு வாங்கிய நகைகளை ஒரு சிலர் பாதுகாக்க தவறி விடுகிறார்கள் .தொடர்சியாக நடை பெற்ற திருட்டுகள் இப்படி ஒரு பதிவை எழுத துண்டியது.

Oct 14, 2012

சாலை விபத்துகளும் பாதுகாப்பும்- 2

இரண்டு நாட்களுக்கு முன் நான் பார்த்த ஒரு நிகழ்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .சாலையின் சந்திப்பில்  ( four wey junction)வழக்கம் போல மின்சாரம் இல்லாததால் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரும் இரண்டு காவலரும் நின்று போக்குவரத்தை  முறைப் படுத்தினர்.மூன்று  இளைஞர்கள்  இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தவர்கள் ,  போக்குவரத்து ஆய்வாளர் நிறுத்துமாறு சொன்னார் .அவர்கள் நிற்காமல்  பயந்து ஒரு வழி பாதையில்( one wey)வாகனத்தை ஒட்டினர் . எதிரே பேருந்து வந்ததால் வாகனத்தை வேகமாக ஓட்ட முடியவில்லை , இதற்குள் நாம் சொல்லியும் கேளலாமல்  சென்றதால் கோபம் கொண்டு பாய்ந்த காவலர் ஒடியே  பிடித்து விட்டார்.அந்த இடத்திலேயே தர்ம அடி கொடுத்தார்.அவர்கள் மூவரும்மே  கல்லுரி மாணவர்கள் போல இருந்தனர்.   இதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் முந்தையப் பதிவை இங்கு படித்து விட்டு தொடரவும்

Oct 8, 2012

சாலை விபத்துகளும் பாதுகாப்பும் -1

 அன்றாடம் செய்திதாள்களில் அதிகரித்து வரும்  சாலை விபத்துகள் போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலான விபரமாகும் . இந்தியாவின் சாலை குறை பாடுகளும் ,மனித்தவறுகளும் மிக முக்கியமான ஒன்று .பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் மதிகிறார்களா ?வெளிநாடுகளின் விதிமுறைகளை  என்ன !இது  சாலை விபத்துகள் மக்களிடையே  விழிப்புணர்வுவை ஏற்படுத்தியுள்ளதா ? அதன் நிறை குறைகளை  பற்றிய ஒரு அலசல் .