இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ் என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை திருடுதல் ,கணியை முடக்குதல் என்று சைபர் குற்றங்கள் நீள்கிறது.
அதே வேளை தனிநபர் பாதுகாப்பு, நிறுவனங்களின் பாதுகாப்பு வேண்டி ஏதோ ஒரு நிறுவனத்தின் ANTIVIRUS மென்பொருளை இலவசமாகவோ அல்லது கட்டணமாகவோ நிறுவி இருப்போம்.ஆனால் அந்த மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா என்ற சந்தேகமும் எழலாம்.அதை எப்படி கண்டு கொள்வது என்பதை பார்க்கலாம்.
1.முதலில் கணிணியில் notepad திறந்து கொள்ளவும் 2.கீழ்க்கண்ட வரியை பிரதி(copy) எடுத்து ஒட்டவும் (paste) .X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*3. பின்னர் கணினித்திரையில் eicar.com என்று பெயர் கொடுத்து file --> save as --> all files இல் சேமித்து விடவும்.அடுத்த சில நொடிகளில் உங்கள் ANTIVIRUS ஒரு எச்சரிக்கை கொண்ட சாளரம் திறக்கும் .அதில் வேண்டாத அல்லது தீங்கு விளைவிக்கும் கோப்பு உள்ளதாக எச்சரிக்கும் .இந்த எச்சரிக்கை கிடைத்தால் ANTIVIRUS மென்பொருள் நன்றாக வேலை செய்கிறது.இந்த எச்சரிக்கை வரவில்லை எனில் , அந்த கோப்பை திறக்கவும் .இப்போதும் எச்சரிக்கை இல்லையெனில் ANTIVIRUS மென்பொருளை மாற்றி விடுவது நல்லது.ANTIVIRUS மென்பொருள் தரும் எச்சரிக்கை கண்டு பயப்பட வேண்டாம் , European Institute for Computer Anti-Virus Research (EICAR).சோதனைக்கு உள்ள கோப்பு தான் அது.
செய்து பார்த்தேன்... ANTIVIRUS மென்பொருள் நன்றாகவே வேலை செய்கிறது... நன்றி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
Deleteதகவலுக்கு நன்றி ஸ்ரீனிவாசன். செய்து பார்த்தேன். வேலை செய்கிறது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
ReplyDeleteஅட... அருமையான, பயன்தரும் விஷயம! நன்றிங்க...!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி !
Delete