Nov 6, 2013

இணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அருமையான இணைப்பு நீட்சி (add -on)

  இணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது  நமக்கு தேவையானதுடன்  மற்ற  விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு  உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக  வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வைத்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.

      நாம் பார்க்கும் பக்கத்தின்  சாரத்தைமட்டும் பார்த்தால் எப்படி  இருக்கும் , நிச்சயம்  மகிழ்ச்சியை தரும் அல்லவா !ad block  நீட்சி உலவியில் நிறுவி இருப்பவர்களுக்கு விளம்பரம் தோன்றாது.ஆனால் மற்ற எல்லாவற்றையும் நிறுத்த முடியாது.அதற்கு  அருமையான  இணைப்பு நீட்சி  (Ever note clearly )ஓன்று இருக்கிறது. இதை உலவியில் இணைத்துகொண்டால்  நாம் பார்க்கும் பக்கத்தின் சாரத்தை மட்டும் காணலாம்.மற்ற  விளம்பரம் , சமூக தளங்கள் எதுவும்பக்கத்தில்  தோன்றாது.

    உலவியின் கருவி பட்டையில் இருக்கும் இந்த நீட்சியை பார்க்கவேண்டிய பக்கத்தில் சொடுக்கினால் பக்கம் நிறம் மாறும்.பக்கத்தில் உள்ள சில பகுதிகளை நிறங்களை மாற்றி கோடிட்டு காட்ட வேண்டும் என்றாலும் செய்து கொள்ளாலம் ,மீண்டும்  பழைய பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால்மேலே உள்ள அம்பு குறியை சொடுக்கினால் போதும்.


   இதனால்  பக்கம் எளிதாக மற்றும்மெதுவாக  இணைய இணைப்பு வைத்து இருப்பவர்களும் வேகமாக பக்கத்தை  வாசிக்க முடியும்.மேலும்  பக்கத்தின்
எழுத்துகளை  பெரிது படுத்தியும்,  நிறத்தையும்  பின்புற நிறத்தையும்  மாற்றி படிக்கலாம்.அச்சு பிரதி எடுக்க வேண்டும் என்றால் அடுத்து கொள்ளலாம். பிறகு  படிக்க சேமித்து வைக்க வேண்டும்  என்றாலும் வைத்து கொள்ளலாம். அதற்கு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


      மற்றொரு செய்தி  பிளாக்கர் மட்டுமே இப்படி படிக்க முடியும்.மேலும் பல வசதிகளுக்கு கட்டணம் செலுத்தி வேண்டுவோர் பெறலாம்.இந்த நீட்சி நெருப்பு நரி , குரோம் , ஒபேரா  உலவிகளில் சிறப்பாக செயல்படுகிறது.கீழே உள்ள இணைப்பை சொடுக்கினால் இணைத்து பயன் பெறலாம் .உலாவிகளின் add on தொகுப்புகளிலும்  தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

 முகவரி :Ever note clearly

 நெருப்பு நரி உலாவிக்கு தேவையான இணைப்பு நீட்சிகள்





No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !