Jan 20, 2017

நடைபெறட்டும் சல்லிக்கட்டு ...

பழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்கலைத் தொடர்ந்து தான் சல்லிக்கட்டு பரவலாக பல பகுதிகளில் நடைபெறும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.மாட்டின் கொம்புகளில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற உலோகத்திலான காசு மாலையாக கட்டி இருக்கும், கழுத்தில் சலங்கை மணியும் கட்டி இருக்கும் . மாடு பிடிப்பவர்களுக்கு இது  பரிசாக கிடைக்கும் அல்லது அதற்காக ஈடாக பணத்தை பெற்றுக்கொள்வர்.இது  நாளடைவில் ஏறுதழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்று மருவி விட்டது.

Dec 31, 2016

நெருப்புநரி உலவிக்கு(Firefox) அருமையான தரவிறக்க மேலாளர் இணைப்பு நீட்சி(add-on)

இணையத்தில் உலவ கணிணிக்கு பல விதமான புகழ்பெற்ற சில உலவிகள் chrome, Firefox , opera, safari  இருக்கிறது .அதில்  கட்டற்ற இலவச மென்பொருளான நெருப்புநரி உலவிக்கு நீட்சிகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் நெருப்புநரி உலவிக்கு சில அவசியமான இணைப்பு நீட்சிகளை(add-on) பழைய பதிவில் எழுதி இருக்கிறேன். தரவுகளை  தரவிறக்கம்  செய்ய அருமையான தரவிறக்க மேலாளர் (Downloading manager)இணைப்பு நீட்சியைத் தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

Jan 8, 2015

பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்

  இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட  நரிலதா மலர் கண்களில்  தென்பட்டது.மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது  கிடைத்த  செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த  நரிலதா மலர்  பூர்வீகம் இமயமலை  அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு ஒரு மட்டுமே பூக்கும் எனபதே ஆச்சிரியம்.


Dec 25, 2014

ERP எனும் தேசிய நெடுஞ்சாலை வரி உள்நாடும் வெளிநாடும்

        இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான வரியில் இருந்து வியாபார நோக்கமில்லாத சொந்த வாகனம் வைத்து பயணிப்போருக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஏன்  என்றால் போக்குவரத்து நெரிசலை  கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் , ஆனால் இந்த வரி இழப்பை பெட்ரோல் ,டீசல் விலையில் 1 ரூ உயர்த்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகள் வெளிநாடுகளில் உள்ளது போல இருக்கிறதா என்றால் இல்லை.வெளிநாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்று இனி பார்ப்போம்.

மின்னணு  கட்டண கருவி

Nov 15, 2014

IDM க்கு மாற்றான இலவசமாக ஓரு தரவிறக்க மென்பொருள் Flareget

   இணையத்தில் இருந்து பாடல்கள் , படங்கள் , மென்பொருள்கள்  போன்று ஏதாவது ஒரு தேவைக்காக தரவிறக்கம் செய்ய வேண்டிவரும். சாதாரணமாக உலவியை வைத்து தரவிறக்கம்  செய்யும் போது  இணைப்பு துண்டிக்கப்பட்டால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டிய நிலை வரலாம்.இதை தவிர்கவே தரவிறக்க மேலாளர்  மென்பொருள் பயன்படுகிறது.


Nov 5, 2014

தட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு

      உலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கண்ட அனைத்தும் தனித்தனியாக தம்  சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இவற்றை நீக்கி விட்டு பார்த்தால் மனித வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாக ஒன்றுமே எஞ்சி இருக்காது.
 தமிழர்களின் இசைக்கருவிகள்

Dec 20, 2013

கணிணியில் ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்து கொள்வது எப்படி ?

     இணையத்தை  பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து  உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ்  என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை  திருடுதல் ,கணியை  முடக்குதல் என்று சைபர்  குற்றங்கள் நீள்கிறது.