Nov 5, 2014

தட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு

      உலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கண்ட அனைத்தும் தனித்தனியாக தம்  சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இவற்றை நீக்கி விட்டு பார்த்தால் மனித வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாக ஒன்றுமே எஞ்சி இருக்காது.
 தமிழர்களின் இசைக்கருவிகள்

 தமிழர்களின் இசைக்கருவிகள் மிருதங்கம் , நாதசுவரம் , மேளம் , சுருதிப்பெட்டி , நாயின தாளம் இவற்றுடன் பல கருவிகள் வைத்து இசைக்கச்சேரி நடத்தி வந்தார்கள் . நடன ஆடலுக்கு ஏற்ப இசைக்கருவிகளை இசைத்து மக்களை மகிழ்விற்பதற்காக இசைக்கலைஞர்கள் இருந்தார்கள்.இசைக்கலைக்கு என்று சமுதாய மக்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.  தமிழர்களின் இசைக்கருவிகள் பல இருந்தாலும் நலிமந்து வரும் மேளக்கலைஞர்கள் பற்றி தான்.




   முன்பு அரசவைகளில் அலங்கரித்து மன்னர்களை மகிழ்வித்தவர்கள் , பின்பு நிழக்கிழார்களையும் , செல்வந்தர்களையும்   மகிழ்வித்தார்கள். கடைசியில்
இவர்கள்  கோவில் திருவிழாக்களிலும் , திருமணங்களிலும் மேளக்கச்சேரி இன்னிசையால் மக்களை மகிழ்வித்தார்கள். மேளக்கச்சேரி , நாதச்சுவர கச்சேரியையும் ரசித்த மக்கள் மாறுதலுக்காக கேரள செண்டை மேளத்தை வைத்து ரசிக்க ஆரம்பித்து வட்டார்கள். கோவில்களில் மட்டும் ரசித்த மக்கள் இன்று திருமணங்களிலும் கொண்டு வந்து விட்டார்கள்.


மேளக்கச்சேரிக்கு ஐந்து நபர்கள் கொண்டஇசைக்கலைஞர்கள் இன்று மூன்று நபர்களாகி விட்டார்கள்.வாழ்க்கையில் மாற்றங்கள் ஒன்று தான் மாறாதது. புதுமையை செய்கிறோம் என்று  நமது பாரம்பாரிய இசையை புறந்தள்ளல் கூடாது. இப்படியே போனால் வழக்கத்தில் இருந்து மறைந்து போகும் காலம் வெகுதொலைவில்லை. இந்த கலையை மட்டும் மக்கள் ஒதுக்கவில்லை , இந்த இசைக்கலைஞர்களையும் சேர்த்து தான் .பல இசைக்கருவிகள் மறைந்து ஏட்டளவில் மட்டுமே உள்ளது . தமிழர்களின் இசைக்கருவிகள் பட்டியலை இங்கு பார்க்கலாம் .

  you tube ல் தேடிய போது இந்த குழந்தைகளுக்கான குறும்படம் கண்ணில் தென்பட்டது   எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.


படங்கள் உதவி: கூகிள்

4 comments:

  1. பலதும் அழிந்தே விட்டன... ம்...

    காணொளிக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இருப்பதையாவது பாதுகாக்க வேண்டும் , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. நல்ல குறும்படம். பல இசைக்கருவிகளை இழந்து விட்டோம்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !