Jan 16, 2013

சிராவயல் மஞ்சுவிரட்டு புகைப்படங்களுடன் ஒரு பார்வை


கட்டுமாடு

        முதலில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி  .தமிழர்களின் முதன்மையான உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவர் திருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறோம் .பல நாடுகளில் இது அறுவடை திருநாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று நலிந்து வருகிற தொழில் இதுவும் ஓன்று.உழுதவர் கணக்கு பார்த்தால் கலப்பை கூட மிஞ்சாது  .உழவர்களுக்காக உதவிய காளைகளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மாட்டு பொங்கல் . ஆண்கள் வீரத்தை நிலை நாட்ட  களைகளை அடக்கி வீரத்தை வெளிபடுதுவேர் .அடக்கிய வீரர்களுக்கு பரிசும் பணமுடிப்பும் உண்டு .

Jan 6, 2013

கீழா நிலைக்கோட்டை - வரலாற்றின் எச்சங்கள்

கோட்டையின் முகப்பு உப்பரிகை
                கீழா நிலைக்கோட்டை புதுகோட்டை மாவட்டத்தின் எல்லையில் அறந்தாங்கியில் இருந்து புதுவயல் போகும் வழியில்  14 கி.மீ தொலைவில் இருக்கிறது.ஒரு சிலர் இந்த வழியாக பயணிக்கும் போது கண்டிப்பாக பார்வையில் படும்.பெரிய கோட்டை பல இடங்களில் இடிந்து சிதைந்து காணப்படுகிறது.பெரிய மன்னர்கள் வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடன் உள்ளே பயணிக்கும்போது கோட்டையின் வடிவமைப்பு ,மதில் சுவர்கள் ,காவல் சாவடிகள் எல்லாமே பிரமிக்க வைத்தது.

Jan 4, 2013

தண்டனைகள் மட்டும் தீர்வாகுமா ?

    இந்தியா முழுவதிலும் தற்போதைய பரபரப்பு செய்தியாகவும் , முக்கிய பிரச்சனையாகவும்  உள்ள உதவி மருத்துவ கல்லூரி மாணவி வன்புணர்ச்சிக்கு பலியானது மக்களை போராட்டம் செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது. போராட்டம் காவலர்  ஒருவரை பலி கொண்டு விட்டது.நிலைமையை சமாளிக்க மத்திய அரசும் வன்புணர்ச்சிக்கு தண்டனையாக  30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,ஆண்மையை நீக்க வழி வகுக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்ய பட உள்ளதாக அறிவித்துள்ளது .