Jan 4, 2013

தண்டனைகள் மட்டும் தீர்வாகுமா ?

    இந்தியா முழுவதிலும் தற்போதைய பரபரப்பு செய்தியாகவும் , முக்கிய பிரச்சனையாகவும்  உள்ள உதவி மருத்துவ கல்லூரி மாணவி வன்புணர்ச்சிக்கு பலியானது மக்களை போராட்டம் செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது. போராட்டம் காவலர்  ஒருவரை பலி கொண்டு விட்டது.நிலைமையை சமாளிக்க மத்திய அரசும் வன்புணர்ச்சிக்கு தண்டனையாக  30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,ஆண்மையை நீக்க வழி வகுக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்ய பட உள்ளதாக அறிவித்துள்ளது .


   குற்றவாளிகள் அனைவரும் மனித உருவில் வாழும் மிருகங்கள்  நிச்சயம் தண்டிக்க பட கூடியவர்கள் ,அதில்  சந்தேகமேயில்லை .ஆனால் அதை நடைமுறை படுத்த எத்தனனை சிக்கல்கள் .இந்தியாவில் வருடந்தோறும்15,000 மேல் மானபங்கம் வழக்குகள் பதிவாகியுள்ளது.உள்ளுக்குள்ளே அழுது மூடி மறைத்து எத்தனையோ ?இத்தனை வழக்குகள் பதிவாகியும் கடைசியில் தண்டனை பெற்றவர் எத்தனை பேர்.இத்தனை பேர் வன்புணர்ச்சிக்கு ஆளான நிலையில் இந்த முறை மட்டும் மக்கள் கொதித்து எழுவதற்கு என்ன காரணம் ,பாதிக்க பட்டு இறந்தவர் உதவி மருத்துவ கல்லூரி மாணவி.மாணவர்கள் பிரச்சனை என்றவுடன் ஊடகமும் ,பத்திரிக்கை பெரிது படுத்தாவிட்டால்  இல்லையேல் இந்த வழக்கு அவ்வளவு முக்கியம் அடைந்து இருக்காது.

   அரபு நாடுகளாக இருந்தாலும் சரி ,மற்ற வளர்ந்த நாடுகளாக இருந்தாலும் சரி பாலியல் குற்றங்களுக்கு கசையடிகள் + சிறை  முதல் உறுப்புகள் துண்டிக்கும் கடுமையான சட்டம் உள்ளது.இருந்தும் குற்றங்கள்  குறைவே அன்றி குற்றங்கள் நிகழாமல் இருக்கவில்லை.சிங்கை ,மலேசிய நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் அவரளது நண்பகள் கைத்தொலை பேசிகளில் கசையடி கொடுக்கும் காட்சிகள் பார்த்து இருக்கலாம். அமெரிக்காவில் புகழ் பேற்ற குத்து சண்டை வீரர் மைக் டைசன் வன்புணர்சி வழக்கில் தண்டனை பெற்றது ,ஐரோப்பாவில் நோபல் பரிசு பெற்றவர் சிறுவருடன் பாலியல் குற்றம் புரிந்ததாக தண்டனை அடைந்தது குறிப்பிடதக்கது.இங்கு நிச்சயம் அது போல சட்டம் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்பார்க்க முடியாது.  இந்தியாவில் வழக்குகள் மெதுவாக ஆமை வேகத்தில் நகரும் அதற்குள் மக்களும் மறந்து விடுவார்கள் .வழக்கு தொடர்ந்தவர் கூட ஏன் வழக்கு தொடந்தோம் என்னும் நிலைக்கு வந்து விடுவார்கள் .அதுவும் சாட்சிகள் கை கொடுத்தால் வழக்குகள் குறிப்பிட்ட காலத்திற்க்குள் முடிக்க வேண்டும் என்றால் மட்டுமே சாத்தியம்.

   எதாவது ஒரு புது சட்டம் அமுலுக்கு வரும் போது அதில் கண்டிப்பாக ஓர் ஓட்டை நிச்சயம் இருக்கும்.இது தான் அரசியல் வா(வி)திகளின் நிலை .நற்குடி மக்கள் இந்த ஈன செயலை செய்ய மாட்டார்கள் .குழந்தை வளர்ப்பு என்பது மக்களுக்கு இன்று பெரிய சவால் .ஒவ்வொரு பெற்றோரும் நன்றாக படித்து நல்ல வேலையில் சேரவும் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்றும் தான் எண்ணுகிறார்க்கள் .குழந்தைகளின் ஒழுக்கம் பற்றி பெற்றோர்  பாதி பேர் கவலைப்படுவதில்லை.காக்கைக்கு தான் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள் அது போல அதற்க்காக  தம் குழந்தைகள் தவறு செய்யும் போது அடுத்தவர் கண்டிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை.
   
   பழிக்கு அஞ்சுவதே பெரும் புகழ் அதை விடுத்து புகழுக்கு ஆசை படும் போக்கு மக்கள் மனதில் அதிகரித்து விட்டது.மக்களில் பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்வது போல ஒரு வேளை சாப்பாட்டுகே தடுமாறும் மக்களும் இருக்கிறார்கள்.நம்மை சுற்றி இருப்போர்  கஷ்டபடும்போது ,நாம் மட்டும் உயர்வடைந்தால் மட்டும் போதாது.சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் ,சுய விரக்கம் , .மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது .  இது எத்தகைய தவறுகளையும் செய்ய தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

           மாலையில் சென்ற குடிமக்கள் இப்பொழுது அதிகாலையிலே சாராயக்கடையில் காண முடிகிறது .குடிக்காத மக்களை வேற்று கிரக வாசியை போல பார்க்கும் நிலை உருவாகி விட்டது.போதை தேவைப்படும்போது அதற்காக  எதையும் செய்யும் தியாகிகளை உருவாக்கி விட்டது.ஒவ்வொரு மனிதனும் வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள் தான் .சந்தர்பமும் சூழ்நிலைகளும் தான் மனிதனை மிருகமாக்கிவிடுகிறது .தவறு செய்கிறவர் எல்லோரும் அடுத்தவர் மனநிலையில் இருந்து எண்ணி பார்ப்பது இல்லை  .மக்கள் மனதில் மாறுதல்கள் வராதவரை தண்டனைகள் மட்டும் தீர்வாகாது .

 குழந்தைவளர்ப்பு பற்றி எ .ஜே .ஏசுதாஸ்  பாடிய ஒரு அருமையான பழைய பாடல்
          

   
        எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!             அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே ! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .கணனி ,தொலைதொடர்பில் பழுது ,தவிர்க்க முடியாத காரியம் காரணமாக பதிவை எழுதமுடியவில்லை.

No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !