Oct 25, 2012

கொசுவிரட்டிகள் வரமா -சாபமா ?

 
        மழை காலம் வந்தாலே கொசுக்களின் தொந்தரவு தாங்க முடியாது.வீட்டில்கொசுக்களுடன் பெரிய போரட்டமே நடத்த வேண்டி இருக்கும். கொசுக்களின்  ஒழிப்பு முறை பற்றியும் ,அதனால் வரும் நோய்கள் பற்றியும்   இரத்த திருடர்கள்  முந்தைய பதிவில் எழுதி இருந்தேன் ,பார்க்காதவர்கள் படித்து விட்டு வரவும்.மக்கள் வீட்டில்உள்ள  கொசுக்களை விரட்ட சந்தைக்கு வந்திருக்கும் ஆல் அவுட் ,மார்டின் , டோர்டிசே பல நிறுவனங்களின் கொசு விரட்டிகளை பயன்படுத்தி வருகிறோம் .இந்த கொசு விரட்டிகளின் துண்டறிக்கை ஓன்று இருக்கும் .அதை நாம் எத்தனை  பேர் படித்து இருப்போம் .!சில பாதிக்க பட்டவர்களுக்காக இந்த பதிவு.
     சில நிறுவனங்களின்  துண்டறிக்கை கண்ணுக்கு தெரியாதவாறு அச்சிடப்பட்டு இருக்கும்.அந்த துண்டறிக்கை படிக்க தனியாக ஒரு உறுப் பெருக்கி கண்ணாடி வேண்டும்என்பது தனி விபரம் .கொசு விரட்டிகளின் துண்டறிக்கைஎல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும்.நிறுவனங்கள் எல்லாம் தான் உற்பத்தி பொருளின் நிறை குறைகளை முறை படி அறிவித்து விட்டார்கள் .அதற்கு பின் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்க மாட்டார்கள் .  அந்த அறிக்கையில் அப்படி என்ன தான் எழுதபட்டு இருக்கும் .அதன் சாரம் கீழே

   கொசுமருந்து இருக்கும் குடுவையை ,அதற்கான இயந்திரத்தில் பொருத்தி மின்னிணைப்பை ஏற்படுத்தவும்.வீட்டின் இருக்கும் சாளரம்(window ) ,கதவுகளை அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும் .பிறகு சாளரம் ,கதவுகளை திறந்து வைத்து காற்றாடியை சுழல விடவும்.இப்பொழுது கொசுக்களும் ,பூச்சிகளும் வீட்டை விட்டு ஓடி விடும்,பிறகு பழையபடி சாளரம் ,கதவுகளை மூடிவிட்டு  சுகமாக  உறங்கலாம் .இது நிறுவங்கள் கொடுத்து இருக்கும் செய்முறை விளக்கம் .

   சிந்தடிக் டி அலித்ரின் ,அக்டோ கிளோரோ டை ப்ரோஃபைல்  இந்த வேதியல்  பொருட்கள் தான் கொசுவை விரட்ட பயன்படுத்தபடுகிறது .கொசுவுக்காக வைக்க பட்ட கொசு மருந்து அறை முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ,கொசுக்கள் ஓடிவிடும் .ஆனால்  நாம் இரவில் உறங்கும் போது    இந்த மருந்து கலந்தகாற்றை தான் சுவாசிக்கிறோம் .இந்த மருந்து  மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோயையும் ,ஒவ்வாமையும் ,மூச்சுதிணறலையும்,கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தைக்கு பிரச்னைகளையும் , குழந்தைகளுக்கு  வலிப்பு நோயையும்  இன்னும் சில பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.ஒரு கொசுவர்த்திச்சுருள்   வெளியிடும் புகை ,புகைக்கும் பல சிகிரெட்களுக்கு  சமமானதாகும்.

மருந்தின் பின் குறிப்பு :
   கொசுமருந்து இருக்கும் குடுவை அல்லது அட்டையை குழந்தைகள் எடுக்க முடியாத இடத்தில வைக்கவும்.கொசுமருந்து இருக்கும் குடுவை அல்லது அட்டையை பயன்படுத்தி முடிந்தவுடன் மண்ணுக்குள் ஆழமாக குழி தோண்டி புதைத்து விடவும் .இந்த மருந்தால் பாதிக்க பட்டு தலைசுற்றல் ,மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.இந்தவிஷமருந்திற்கு  மாற்று மருந்து இல்லை.இது தான் நிறுவனங்கள்  செய்முறை விளக்கம்கொடுத்து இருக்கும்துண்டறிக்கை.    கொசுமருந்து இருக்கும் குடுவை அல்லது அட்டையை  எத்தனை பேர் முறையாக அழிக்கிறோம் .இந்த மருந்தை உபயோகம் முடித்ததும் குப்பையில் அல்லது வெளியிலோ தூக்கி எறிந்து விடுகிறோம். மழை பெய்யும் போது இந்த மருந்து தண்ணீரில் கலந்து  ,குளம் ,கண்மாய் போன்றவற்றில் வாழும் நீர் வாழ்  உயிரினங்களுக்கு  வேட்டு வைக்கிறது.பயிர்களுக்கு இந்த நீர் பயன்படுத்தும் போது நெல்லில் அதன் வீரியம்ஏறி விடுகிறது.உணவாகும் போது மறுசுழற்சியாகி நமக்கே வருகிறது.

    இந்த மருந்துகளை பயன்படுத்தாமல் கொசுக்களை விரட்ட என்ன வழி இருக்கிறது.குளிர் சாதனப்பெட்டி (air conditioner) வைத்து இருப்போருக்கு பிரச்னை இல்லை,கொசு அங்கே போகாது. மின்சாரத்தில் இயங்கும்  மட்டை(anti mosquito bat) , விளக்கு போன்றவற்றை பயன்படுத்தலாம் .பூச்சிகளையும் ,கொசுக்களையும்  கவர்ந்து இழுத்து கொல்லுவதற்க்காக சிறப்பாக செயல் படக்கூடிய விளக்குகள்(anti mosquito lamp) உள்ளது. பணம் கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் பலன் நிசயம் உண்டு .வெளிநாடுகளில் உள்ள பூங்காகளில் சூரிய ஒளியில் இயங்கும்  விளக்குகளை (solar anti mosquito lamp)காணலாம் .


இயற்கையான முறையில் கொசுக்கள் ,பூச்சிகளை விரட்ட வழி இருக்கிறது.காய்ந்த தேங்காய் உறித்த மட்டைகளை  அல்லது சுள்ளிகளை போட்டு புகை மூட்டம் போடலாம்.யுக்கலிப்டஸ் தைலம் மற்றும் சில தைலங்களையும் தேய்க்கலாம்.  என்ன இந்த வாசனை இருக்கும்வரை தான் , ஆனால் வேப்ப எண்ணெய்யை உடலில் பூசினால் எதுவும் கிட்ட நெருங்காது (மனையியும் தான் :) ).சிறந்த வழி சாளரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொசு வலை  சட்டம் போட்டு மாட்டி விடலாம்.இது செலவு அதிகம் என்று நினைபவர்களுக்கு நாம் படுத்து உறங்கும்  கட்டிலில் மட்டுமாவது கொசுவலைகளை பயன் படுத்தலாம்.
பின் குறிப்பு :
          நாம் தான் எந்த பொருளை வாங்கின்னாலும் கொடுக்கும் கையேடுவை கையோடு  தூக்கிப்போட்டு விடுவோமே .கண் கண்ணாடி போடாதவர்கள் துண்டறிக்கையை  படித்து பார்க்க முயற்சி செய்து பார்க்கவும்.கண்ணில் வலி வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது :) .

       வார்ப்புறு( template) மாற்றம் செய்யும் போது  rss feed   மூலம் சந்தாதாரர்களுக்கு  பதிவுகள் தடைப்பட்டதற்கு வருந்துகிறேன்.பதிவு பிடித்திருந்தால்  மற்றவர்களும் பயன்பெற சமுக தளங்களில்  பகிரலாமே .

படங்கள் :google நன்றி

7 comments:

 1. நல்ல அலசல்... என்ன கொஞ்சம் சிரமம் இருந்தாலும் கொசுவலை தான் நல்லது...

  Template நல்லா இருக்குங்க...

  நன்றி...

  ReplyDelete
 2. திண்டுக்கல் தனபாலன் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் ,பாராட்டுக்கும் நன்றி!!!

  ReplyDelete
 3. uklt abercrombie vpmdc doudoune moncler aqxvqk http://poloralphxlaurenmagasinns.webnode.fr/ y t l ni

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. ராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!!!

  ReplyDelete
 6. @அறித்யா அறிவழகன்தங்கள் வருகைக்கு நன்றி !

  ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !