Oct 20, 2012

கொசுக்களும் ஒழிப்புமுறைகளும்

       மழை காலம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் பல நோய்கள்   மக்களை வழக்கம் போல தாக்க ஆரம்பித்துவிட்டன .அதில் புதிதகாக டெங்கு காய்ச்சல் சேர்ந்து கொண்டுள்ளது.மக்கள் முன்பு எல்லாம் உள்நாட்டின் உள்ள பகுதியில்  பயணம் செய்வதோடு சரி .அதனால் நோய்களும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை மட்டுமே பரவும்.இப்போது மக்கள்  பணம் சம்பாதிப்பதற்காகவும் , தொழில்  செய்வதற்க்காவும்   வெளிநாட்டு விமான பயணம் மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது . வெளி நாடுகளில் இருந்து வரும்போது சிலர் தொற்று நோயை  கொண்டு வந்து விடுகிறார்கள்.இந்த தொற்று நோய்கள்  கொசுக்கள் மூலமாகவும் மனிதர்களை தாக்குகிறது.    கொசுக்களை பற்றி முதலில் பார்த்துவிடுவோம் பிறகு தடுக்கும் முறைகளை பார்ப்போம்.


 .டெங்கு காய்ச்சலை பரப்பும் அடிஸ் (ads) கொசுக்கள்  சுத்தமான மழை நீர் தேங்கினால் மூன்று நாட்கள்  போதுமானது .கொசுக்களின் லார்வா உருவாகிவிடும்.பலர் அசுத்தமான சாக்கடையில் மட்டுமே வரும் என்று எண்ணுவதுண்டு .கொசுக்களின் ஆயுட்காலம்  நாட்கள் .கொசுகளில் ஆண் எல்லாம் சைவம், பெண் கொசுக்கள் மட்டுமே  அசைவம் .பெண் கொசுக்கள் தன் இன உற்பத்திக்காக ரத்தம் தேவைப்படுகிற போது மனிதர்களிடமோ அல்லது மிருகங்களிடமோ எடுத்து கொள்கிறது .கொசுக்கடியினால் மலேரியா , பிளேய்ரிய ,  மஞ்சள் காய்ச்சல்,டெங்கு காய்ச்சல், கொரிய காய்ச்சல்என்று பல நோய்களை பரப்புகிறது .கொசுக்கடித்தவுடன்  சிலருக்கு ஒவ்வாமை காரணமாக சிவந்து தடித்து விடும்.ஒரு சிலர்க்கு படர் தாமரை போல வந்துவிடும்.

     கொசுக்களை கட்டுப்படுத்த  அரசாங்கம் பல நடவடிக்களை எடுத்தாலும் நாம் நம்மை சுற்றி உள்ளஇடத்தை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்து கொள்ளவேண்டும்.டெங்கு காய்ச்சலுக்கு பிறகு கொஞ்சம் மக்களிடையே விழிப்புணர்வு வந்து இருப்பதாக தெரிகிறது . வாளி , வர்ணம் இருந்த பாத்திரங்கள் , தேவையில்லாத உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். வீட்டை சுற்றி தேங்கும் தண்ணீரை அப்புறபடுத்த முடியவிட்டாலும் நீர் மீது டீசல் ,மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ஏதோவொன்று சிறிது தெளிக்கலாம் .இதுவும் அதிக செலவு என்று எண்ணுபவர்கள் சோப்பு தண்ணீரை பயன்படுத்தலாம் .கிணறு போன்ற நீர் நிலைகளில் என்ன செய்யலாம் ? அதற்கு  இயற்கை தந்த தீர்வு மீன் வளர்ப்பது.

      வீட்டில் பூதொட்டிகள் இருக்கும் நீரை தினசரி மாற்ற வேண்டும் .இன்னமும் சுத்தமாக வைத்து கொள்ள விருபும்வோர் பூசெடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கலாம் . வசதியுள்ளவர்கள் சிறிய அளவில் வீட்டுக்காக கொசு மருந்தடிக்கும் இயந்திரம் உள்ளது.கொசு மருந்து திரவ கரைசலையும் ,வாயுவையும்  வாங்கி அதற்கான இயந்திரத்தில் இணைத்து  வீட்டை சுற்றிலும் பயன்படுத்தலாம் .இதையும் இயற்கையான முறையில் வேப்பபுண்ணாக்கையும்,சுண்ணாம்புக் கரைசலை பயன்படுத்தலாம் .மரக்கிளையில் இருக்கும்பொந்துகளில் மண் அல்லது சிமெண்ட் பூசி தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளலாம் .

    சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளில் டெங்கு காய்ச்சல் வந்து வருடந்தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மழைக் காலங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்வார்கள்.அதற்கு தனியாக ஒரு குழு உண்டு , இவர்கள் கொசுக்களின்  லார்வாவை  பிடித்து விட்டால் முதல் தடவை  20,000($500)ரூபாய்யும்,கட்டிட கட்டுமான தளமாக இருந்தால்  40,000($1000)ரூபாய்யும்,அடுத்தடுத்த முறைகளில் அபராதம் இரட்டிப்பாக உயர்ந்து கொண்டே போகும்.இதனால் தான் அங்கு மக்கள் சுகாதாரமாக வாழ்கிறார்கள்.சட்டம் கடுமையாக இருந்தும்,  இங்கு டெங்கு காய்ச்சல் வந்து வருடம்தோறும் நுற்றுக்கு மேல் இறக்கிறார்கள் .பின்னெப்படி  இறப்புக்கு சாத்தியம் ? இங்கு தட்பவெப்ப நிலை ஒரே சீராக இருப்பதால் கொசுக்களும் வருடந்தோறும் வாழ இயற்கை வழிவகுத்திருக்கிறது .நல்ல வேளையாக இந்தியாவில் மழைக்காலம் மூன்று மாதம் மட்டுமே .

       நம் நாட்டில் மக்கள் சட்டத்தையும் ,தனிமனித சுதந்திரத்தையும் மதிப்பதில்லை  .  நாம் சட்டத்தை கூடுமானவரை வளைக்கவே நினைக்கிறோம் .நாம் மட்டும் சுகாதாரமாக இருந்தால் மட்டும் போதாது ,நம்மை சுற்றியும் சுகாதாரமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.சிறிய அளவில் டெங்கு வந்தற்கே பல உயுர்களை பலி கொடுத்து விட்டோம் .வளர்ந்த நாடுகளே திணறுகிறது, நாம் எம்மாத்திரம்.கண் கெட்ட பின் சூரியனை பார்த்து என்ன பயன் ?

2 comments:

  1. நல்ல யோசனைகள்... முடிவில் உண்மையான கேள்வி...

    ReplyDelete
  2. சில பிரச்னைகள் யோசிக்க வைக்கிறது.திண்டுகல் தனபாலன் வருகை நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !