Nov 15, 2014

IDM க்கு மாற்றான இலவசமாக ஓரு தரவிறக்க மென்பொருள் Flareget

   இணையத்தில் இருந்து பாடல்கள் , படங்கள் , மென்பொருள்கள்  போன்று ஏதாவது ஒரு தேவைக்காக தரவிறக்கம் செய்ய வேண்டிவரும். சாதாரணமாக உலவியை வைத்து தரவிறக்கம்  செய்யும் போது  இணைப்பு துண்டிக்கப்பட்டால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டிய நிலை வரலாம்.இதை தவிர்கவே தரவிறக்க மேலாளர்  மென்பொருள் பயன்படுகிறது.



  இணையத்தில் தரவிறக்க மேலாளர்  மென்பொருள்    பல இருக்கிறது இதில் IDM மிகச்சிறந்த  கட்டண மென்பொருள் , இதை 1 மாதம் மட்டும்  இலவசமாக பயன்படுத்தலாம்.தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால்விலை கொடுத்து வாங்க வேண்டும் . சிலர் வழுஉள்ள  (crack )செய்யப்பட்ட மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது உண்டு.

    IDM   மென்பொருளை  பயன்படுத்தும் போது வேகமாக பல சிறுபகுதிகளாக மாற்றி  இணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கம்  செய்யும்.   IDM க்கு மாற்றான கட்டண மென்பொருள்கள் பல இருக்கிறது.ஆனால் அப்படி வசதியுள்ள மென்பொருள் இலவசமாக ஓரு  மென்பொருள் Flare get இங்கே கிடைக்கிறது.

   இந்த   மென்பொருள் விண்டோ , மாக் , லினக்சு பல இயங்குதளங்களில் இயங்க கூடிய மென்பொருள் .முன்பு எல்லா  வசதிகளும் இலவசமாக கிடைத்தது . இந்த மென்பொருளை   இலவசமாக தொடர்ந்து வைத்து பயன்படுத்தினால் ஓரு நாளைக்கு 10 முறை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும் .இப்பொழுது சில வசதிகளுக்கு முழுப்பயனையும் வேண்டுமானால் கட்டணம் கட்டி பெறலாம்.

No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !