Feb 2, 2013

இலவச மென்பொருட்கள் தரும் பிரச்னைகள்

       கணினியை சொந்தமாக  வாங்கி விட்டாலும் தேவைப்படும்  மென்பொருள் எல்லாவற்றையும் விலை கொடுத்து  எல்லோரும் விலை கொடுத்து வாங்க முடியாது.நமக்கு மென்பொருள் அவசியம் தேவைப்படும் போது 3 0 நாட்கள் மட்டும் பயன்படுத்த கூடிய அல்லது   நண்பர்களின் பெற்றோ அல்லது இணையத்தில் இருந்து  மாற்றம் செய்த மென்பொருளை( crack version) தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம் .தினம் தினம் புதிய மென்பொருள்  உலகில் அறிமுகப்படுத்த படுகிறது . அது இலவசம் என்றவுடன் அதை பற்றி பெரிதும் யோசிப்பதில்லை , உடனே கணினியில் நிறுவி விடுகிறோம்.புதியவர்களுக்கு சொந்தமாக  வைத்துஇருப்பவர்களுக்கு  பயன்படும் இந்த பதிவு .
   கணினி தொழில்நுட்பம் பற்றி   பல பதிவர்கள் பலர்எழுதுகிறார்கள் .ஆனால்  அனைவரும் பரிசோதனை செய்து விட்டு தான் எழுதுகிறார்கள் என்று எதிர்பார்க்க முடியாது ஒரு சிலரை தவிர .எந்த மாற்றங்கள் செய்தாலும் ,புதிய மென்பொருள்  கணினியில்  நிறுவுவதும் அவசியமா என்று ஒருமுறை யோசித்து நலம்.புதியதாக இலவசமாக வருகிறதே என்று பல மென்பொருள்களை  நிறுவினால் கணினியின் வேகம் குறைந்து விடும்.

  மென்பொருள்  முதலில்   புதிய சோதனை பதிப்பாகத்தான் (alp a ,beta)வெளியாகும் .அது கணினி தொழில்நுட்ப  தெரிந்தவர்களுக்கு ஆன பதிப்பு .அதன் குறைகள் களையப்பட்டு எல்லோரும் பயன்படுத்தும்  இறுதி வடிவாக (stable)வெளியாகும் போது  நிறுவி கொள்ளலாம் . கட்டண  மென்பொருள் முளுப்பதிப்பாக (full version)நிறுவும் போது அருமையாக வேலை செய்யும் . அதை மாற்றம் செய்ததை( crack version)   நிறுவி பயன் படுத்தும்போது முதலில் நன்றாக வேலை செய்யும் பிறகு அதன் வேலையை காட்டி விடும்.சில நமது தனியுரிமைகளை தாரை வார்த்து  விடும்.இந்த பதிப்புகளை மீள்பதிப்பாக தரவிறக்கம் செய்தால் நிச்சயம் பதிவுகளில்( registry error ) தவறுகளை உண்டாக்கி விடும்.பிறகு  கணினியை புதியதாக நிறுவ வேண்டிய நிலை வரலாம் .

   இன்னும் சில தளங்களில்  ( cent, brother soft)தான் இலவச மென்பொருட்கள்  கிடைக்கும் .அதை தரவிறக்கம் செய்யும் போது இலவச இணைப்பாக சில தேடு பொறிகளையும் ( Babylon, music monkey  search engines)மென்பொருள் வேண்டாம் என்றாலும்  கூட வந்து விடும்.அதை நீக்க மறுபடியும் தலைவலியை கொண்டு வந்துவிடும்.மென்பொருள்  தரவிறக்கம் செய்ய மென்பொருள் முகப்பு தளத்திற்கு   சென்று பின்னுடத்தை பார்த்து ஏதும் குறைகள் இல்லையெனில் தரவிறக்கலாம் .மென்பொருள் தரவிறக்கம் செய்யும் போதுசிறிய பெட்டியில் குறியீடு இருந்தால் நீக்கிவிடுவது நலம் . இந்த தளத்தில் அந்த தொல்லை இல்லை.
தளத்தின் முகவரி :  : http://www.filehippo.com/

c cleaner
   சில கட்டண  மென்பொருள்கள்   குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை செய்யாது .விலை கொடுத்து வாங்க முடியாத இந்த வகையான மென்பொருள் களையும் , வேண்டாத   மாற்றம் செய்த மென்பொருள் களையும் கணினியில் இருந்து நீக்கம் செய்யும் போது சில தடயங்களையும் விட்டு விட்டு தான் செல்லும் .பதிவுகளை( registry error ) முறையாக அழிக்க வேண்டும்.இல்லாவிட்டால் கணினி இயங்கத்தில்  பிரச்சனையை உண்டாகி விடும்.இந்த வகையில் இந்த( c cleaner)மென்பொருள்  சிறப்பாக வேலை செய்கிறது .
தளத்தின் முகவரி :  http://www.piriform.com/ccleaner/download

   டோரென்ட் தளங்களில் கட்டண மென்பொருள்கள்  , திரைப்படங்கள் எல்லாமே  இலவசமாக கிடைக்கும்.இதில் மென்பொருளுடன்  வேவு பார்க்கும் பொருளும் (spy)இலவசமாக வரும்.  இதிலும் கவனம் தேவை . இந்த தளங்களில் குறிப்பிட்ட அளவு வரைமுறை திட்டம் உள்ளவர்கள் (limited plan)மென்பொருளை தரவிறக்கம் செய்த பின் நிறுத்த வேண்டும்.   இல்லாவிட்டால் மென்பொருள்  மேலேற்றம்  (upload)காரணமாக  கட்டணம் எகிறிவிடும்.அளவற்ற  திட்டம் (unlimited plan) உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை.
fire fox

   இணையத்தில்  உலவுவதற்கு உலவிகள் (browsers) பல உண்டு .மைக்ரோசாப்ட்  சாளரத்தின் (Microsoft window)உலவி அதன் இயங்கு தளத்துடன் இணைப்பாக இருக்கும் .இதில் சில  பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது.கூகிள் நிறுவனத்தின் உலவியில் (Google) மற்ற பல சிறப்புகள் இருந்தாலும் ஆரம்பத்தில் வேகமாக இருந்தும் , நாள்பட  அதன் வேகம் குறைந்து விடுகிறது. நெருப்பு நரி உலவி( Firefox)முற்றிலும் இலவசம்( open source)என்பதுடன் உலகின் தலை சிறந்த கணினி வல்லுநர்களால் உருவாக்க பட்டது.பல நூறு தொகுப்பு  இணைப்புகள் (add-on)ஒரு குறையாக இருந்தாலும் சிறந்த வேகம் ,மிக சிறந்த பாதுகாப்பு உள்ளஉலவி .தவறான, ஆபத்தான  தளத்திற்கு (malware ,fishing net)அழைத்து செல்லபட்டால் உடனே எச்சரிக்கை செய்யும் . இந்த உலவியில் இயங்கு தளம் போல மறு தொடக்கம்(restart) செய்ய முடியும்.
தளத்தின் முகவரி : http://www.mozilla.org/en-US/



எச்சரிக்கை காட்டும் நெருப்பு நரி உலவி 
   பலமுறை கணினியில் இலவச மென்பொருட்கள் நிறுவி சில முறை இயங்கு தளத்தை (operating system )நிறுவ வேண்டிய நிலை (crash)வந்தால்தான் இந்த பதிவு.மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன்  மென்பொருட்கள் அவசியம் வேண்டும் என்றால் மட்டும் நிறுவலாம்.யார் வேண்டுமானாலும் அவரவர் தளத்தில் எழுதி வைத்து விட்டு போகலாம்கணினியில் பழுது வந்தால் நாம் தான் சரி செய்ய வேண்டும் எனவே முடிவு எடுப்பது அவரவர் கையில் தான் இருக்கிறது.பல தவறுகளின் மூலம் நல்ல அனுபவம் நிச்சயம் கிடைக்கும் .

  

 

4 comments:

  1. குறிப்பிட்ட இரண்டை மட்டும் பயன்படுத்துகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளைக்கு பிறகு வந்து இருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  2. விண்டோஸ் உபயோகிக்கும்போது ஆபரேடிங்க் சிஸ்டம் மட்டுமாவது ஒரிஜினல் மென்பொருளாக இருப்பது அவசியம்.

    ReplyDelete
  3. விண்டோஸ் விலையை குறைத்து கொடுக்கலாம் அவர்கள் செய்ய மாட்டார்கள் .ஐயா தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !