Oct 8, 2012

சாலை விபத்துகளும் பாதுகாப்பும் -1

 அன்றாடம் செய்திதாள்களில் அதிகரித்து வரும்  சாலை விபத்துகள் போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலான விபரமாகும் . இந்தியாவின் சாலை குறை பாடுகளும் ,மனித்தவறுகளும் மிக முக்கியமான ஒன்று .பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் மதிகிறார்களா ?வெளிநாடுகளின் விதிமுறைகளை  என்ன !இது  சாலை விபத்துகள் மக்களிடையே  விழிப்புணர்வுவை ஏற்படுத்தியுள்ளதா ? அதன் நிறை குறைகளை  பற்றிய ஒரு அலசல் .

இந்தியாவின் நெடுஞ்சாலைகளை தவிர மற்ற சாலைகள் எல்லாமே கூடிய விரைவில் பழுதாகி  குண்டும் குழியும் ஆகி விடும் .இதற்கு காரணம் குத்தகைதாரர் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதும் ,புதிய தொழில்நுட்ப கருவிகளை  பயன்படுத்தாதது ,தரமற்ற சாலை வடிவமைப்பு ,மலிந்துவிட்ட ஊழல்கள் ,அதிகாரிகளின் அலட்சிய போக்கு , அரசியல் தலையீடுகள் .ஏங்க இங்க சாலையே போடாமலே போட்டதாக கணக்கு காட்டி சுருடிவிட்டார்கள் என்று புலம்புவது கேட்கிறது.

சிங்கப்பூர்  போன்ற வெளிநாடுகளில்  சாலை வடிவமைப்பு (design) மிக முக்கியமான ஒன்று .சாலைகளின் இருபுறமும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய்கள்(channels) கட்டப்பட்டு ,மேல் புறம் கோங்கிர்ட் (conger-gate)கலவையினால் மூடப்பட்டு ,அதை பாதைசாரிகள்  பயன்படுத்தக்கூடிய வகையில்   இருக்கும் .சாலைகளும் மணிக்கு 100/கி.மீ  வேகத்தில்  வாகனங்கள் சென்றாலும் உடனே நிறுத்த கூடியதாவும் ,நேராகவும் ,தண்ணீர் தேங்காத வாரும் ,திருப்பங்கள் பல நூறு மீட்டர்கள் வரை சென்று திரும்பும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கும் .சாலைகளின் பிரிவுகளும் , சமிக்கை குறிகளும் ,தெருக்களின்    பெயர்களும்  வழிகாட்டும்  பலகைகள் நிறுவப்பட்டு இருக்கும்

       புதிய சாலை கட்டி முடித்தாலும் சோதனை செய்யும்  அரசு அதிகாரி சொல்லும் இடத்தில் துளையீட்டு எத்தனை இன்ச் என்பதை காண்பிக்க வேண்டும்.சாலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு இல்லாமல் சீக்கிரம் பழுதாகிவிட்டால் சரி செய்து கொடுக்க வேண்டும்.இதில் அதிகாரி முறையாக சோதனை செய்யாமல் அனுமதி வழங்கி இருந்தால் அவரும்  சிறை செல்ல வேண்டிவரும்.இல்லையெனில் மீறும் பட்சத்தில்  அபராதமும் சிறையும் ,மற்றும் புதிய தொழில் சன்றிதல்களும் ரத்து செய்யப்படும் .  போடப்படும் சாலைக்கான  பணம் முழுவதையும் உடனே கொடுத்து விடாமல் ஒப்பந்தம் முடியும்வரை 30% பணம் பாக்கி நிலுவையில் இருக்கும் .ஒப்பந்தம் என்பது சில வருடங்கள் முடியும்வரை , நம் பொருட்கள் வாங்கும் போது கிடைப்பது  போல.

   சில இடங்களில் போக்குவரத்தை சமாளிப்பதற்குகாக மேம்பாலங்களும், சுரங்க சாலைகளும் உண்டு .சாலைகளின் அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கருவிகள் (camera) மூலம் கண்காணித்து மக்களுக்கு சில பாதைகளில் உள்ள நெரிசல்களை குறைபதற்கும் , விதிகளை  மீறுவோர்களை தண்டிக்க உதவுகிறது.சாலைகள் பெரும்பாலும் ஒருவழி சாலையாகும்(one way) ,பல தடயங்களை (tracks)கொண்டதாவும் இருக்கும்.சாலைகள் நன்றாக இருப்பதால் மக்கள் வேகமாக ஒட்டு முற்படுவதுண்டு ,ஆனால் வேக கட்டுப்பட்டு கருவி(speed camera) மணிக்கு 80
கி.மீ  வேகத்தில்  வாகனங்கள் சென்றால் வாகனத்தின் எண் படம் பிடித்து போக்குவரத்து துறை  மூலம் அபராதமும் ,மூன்று புள்ளிகள் கழிக்கப்படும் .ஒவ்வொரு ஒட்டுநர் உரிமம் உள்ளவருக்கும் வருடத்திற்கு 12 புள்ளிகள் வழங்கப்படும் .

     நெடுஞ்சாலைகளை தவிர மற்ற பகுதிகளில் சில பகுதிகளில் வேகத்தடை (hump)இருக்கும் .இது 1மீ நீளமும் 1அடியாகவும்  இருக்கும் .இதனால் வாகனங்கள் மெதுவாகவே செல்ல முடியும் , வேகமாக சென்றால் குப்புற
கவிழ்ந்து தான் கிடக்கும்.100 மீ முன்பாகவே அதன் அறிவிப்புடன் வேகத்தடை மேல் மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் கொண்டு > வடிவில் பூசப்பட்டு இருக்கும்.நம் நாட்டில் முன் சக்கரம் ஏறிய பிறகே வேகத்தடை இருப்பது தெரியும் .வேகத்தடை அளவும் சிறிய அளவு அதனால் பேருந்துகள்  வேகத்தை குறைப்பதில்லை. சாலைகளின் குறுகிய திருப்பங்களில்  எதிரில் வட்ட கண்ணாடிகள் நிறுவப்பட்டு இருக்கும் .எதிரே வருபவர்கள் வாகனத்தை பார்த்து ஓட்டமுடியும்.நம்ம நாட்டில இடுகாட்டில் போட்டு இருக்கும் தகரத்தை கழட்டி கொண்டு போவர்கள் ,இதை விட்டு வைப்பார்களா ?

 மிக மிக்கியமான ஓன்று கழிவு நீர் , மின்சாரம்,தண்ணீர்,திரவ எரிவாயு ,தொலைத்தொடர்பு  அனைத்து முக்கியமான இணைப்புகள் சாலைகளின் அடியில் 1மீ அழத்தில் தான் இருக்கிறது.உலகம் தரம் வாய்ந்த சாலைகளை போடா பணம் பல மில்லியன் தேவைப்படும் ,ஆனால் பல வருடங்கள் அருமையாக இருக்குமே போடப்படும் சாலைகள் மூன்று மாதங்கள் கூட தாக்கு பிடிப்பதில்லை  .குறைந்த தொகையில் சாலைகள் கூடிய மண் அரிப்பினால் தான் பல சாலைகள் சீக்கிரம் பழுதாகிவிடும்.மீண்டும் மீண்டும் சாலைகளை போடுவதால் மக்கள் பணம் தான் விரயம் .


பொதுவாக வாகனங்களில் பயணம் செய்யும் போது நமக்கு நான்கு புறமும் ஓட்டுபவர்கள் புதிதானவர்கள் மட்டுமா? (முட்டாள்கள் )ஓட்டுகிறார்கள்  என்று  எண்ணி தான் ஓட்ட வேண்டும் .என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் .இந்தியா முழுவதும்  உலக தரம் மிக்க சாலைகளை உருவாக்க இன்னமும் 25வருடங்கள் ஆகும் என்று நம்புகிறேன் .  உங்களுடைய கருத்துகளை பொருத்து சாலை விபத்துகளும் பாதுகாப்பும்- 2 ,தவறுகளையும் விரைவில் அடுத்த பதிப்பில்.........




18 comments:

  1. எனது வலைத்தளத்திற்கு வந்து தமிழ் 10 மூலம்ஒட்டு அளித்ததற்கு நன்றி !!!

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல். அருமை.

    ReplyDelete
  3. நல்லதொரு தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  4. ஆர் .வி .ராஜி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  6. தற்போது உங்களின் சில இடுகைகளை நான் தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன். http://tamilmanam.net/tamil/blogger/Srini%20Vasan
    நீங்கள் feedburnerல் செய்துள்ள அமைப்புகளை யூகிக்க முடியவில்லை அதனால் blogger settings -> Other -> Post Feed Redirect URLல் feedburner முகவரியை நீக்கிவிடுங்கள்

    ReplyDelete
  7. கிருஷ் உங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  8. What if i created a blog with the same name as other blog accidentally? is that legal?

    ReplyDelete
  9. சிங்கையில் இருந்து இங்கு வந்து வாகனம் ஓட்டுபவர்கள் பாடு திண்டாட்டம் தான். தினம் ஒரு புலம்பல் திட்டல் தான். 25 வருடமா? உங்கள் பேரனோ பேத்தியோ பிறந்து என்று வேண்டுமானால் போட்டுக்கொள்ளவும்.
    விரைவு சாலையில் மாடுகள் கூட கடக்க அனுமதிக்கும் அரசாங்கம் இங்குள்ளது.

    ReplyDelete
  10. நம் நாட்டில் உள்ள நிலைமை இப்படி யோசிக்க வைக்கிறது .உலகம் ஓடும் வேகத்திற்கு ஈடு கொடுக்கா விட்டால் நம்மை( இந்தியாவை )புறம் தள்ளி விடும்.வடுவூர் குமார் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  11. Excellent post. You must continue to offer excellent resources and content like you have been offering. I will most likely stop by again in the future.

    ReplyDelete
  12. "பொதுவாக வாகனங்களில் பயணம் செய்யும் போது நமக்கு நான்கு புறமும் ஓட்டுபவர்கள் புதிதானவர்கள் மட்டுமா? (முட்டாள்கள் )ஓட்டுகிறார்கள் என்று எண்ணி தான் ஓட்ட வேண்டும்" மிகச்சரியான கருத்து எல்லோரும் இதனை மனதில் கொண்டு வாகனங்களை ஓட்ட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவை நாயகன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete

  13. நல்ல பகிர்வு.சாலை பாதுகாப்பை மக்கள் மதித்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  14. அருமையான விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  15. கோவை மு சரளா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !