Oct 14, 2012

சாலை விபத்துகளும் பாதுகாப்பும்- 2

இரண்டு நாட்களுக்கு முன் நான் பார்த்த ஒரு நிகழ்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .சாலையின் சந்திப்பில்  ( four wey junction)வழக்கம் போல மின்சாரம் இல்லாததால் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவரும் இரண்டு காவலரும் நின்று போக்குவரத்தை  முறைப் படுத்தினர்.மூன்று  இளைஞர்கள்  இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தவர்கள் ,  போக்குவரத்து ஆய்வாளர் நிறுத்துமாறு சொன்னார் .அவர்கள் நிற்காமல்  பயந்து ஒரு வழி பாதையில்( one wey)வாகனத்தை ஒட்டினர் . எதிரே பேருந்து வந்ததால் வாகனத்தை வேகமாக ஓட்ட முடியவில்லை , இதற்குள் நாம் சொல்லியும் கேளலாமல்  சென்றதால் கோபம் கொண்டு பாய்ந்த காவலர் ஒடியே  பிடித்து விட்டார்.அந்த இடத்திலேயே தர்ம அடி கொடுத்தார்.அவர்கள் மூவரும்மே  கல்லுரி மாணவர்கள் போல இருந்தனர்.   இதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் முந்தையப் பதிவை இங்கு படித்து விட்டு தொடரவும்

அவர்கள் செய்தது தவறு என்ற போதும் அவர்களை அடித்தது சரியான செயல் அல்ல.தப்பிக்க  முயற்சி செய்து வேகமாக ஓட்டி இருந்தால் ஒரு விபத்து நடந்து இருக்கும்.ஒரு சில வினாடிகளில்  தான் பல  உலக சாதனைகள்  நிகழ்த்த படுகிறது .சாலையில்  அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. வாகனத்தை செலுத்துவோரும் போக்குவரத்து விதிகளை மதிப்தில்லை .இங்கே இரு பக்கங்களும் தவறுகள் .

சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் ஒட்டுநேர்  உரிமம் பெற முதலில் அடிப்படை  போக்குவரத்து விதிகளை ( basic theory)பற்றி ஒரு தேர்வும் , அதன் பிறகு இறுதி போக்குவரத்து விதிகளை (final theory) பற்றி ஒரு தேர்வும் எழுதி தேர்சியானவர்   மட்டுமே வாகனத்தை  ஓட்டி பழக  முடியும்.    போக்குவரத்து ஆய்வாளர்  முன்னிலையில் கணனியில்  (computer) தான் தேர்வு நடக்கும் .47/50 50 பது  வினாக்களுக்கு  மூன்றும் மட்டுமே தவறாக இருக்கலாம்.முடிவுகள்  உடனே சொல்லி விடும் .இதனால்  போக்குவரத்து விதிகள் அத்துபடியாகி விடும் .பலர் கஜினி முகமது போல சில வருடங்கள் வரை எழுதுவோரும் உண்டு.

    வாகன பயிற்சி பள்ளியானது  ( vihile  driving school) 6 ஏக்கர் நில பரப்பில் பல தடங்களையும் , வேகத்தடை , சமிக்கை விளக்குகள் ,மலை போன்ற பாதை எல்லாமே இருக்கும் .இதில் ஓட்டி பயற்சி பெற்று தேர்சியானவர் மட்டுமே வெளியில் உள்ள பொதுச்சாலைகளில் ஓட்ட அனுமதிக்க படுவர்.ஒரு வாகனத்தில் ஒரு பயிற்சி பெறுபவரும் , பயிற்றுநர்  ஒருவருமே  செல்ல வேண்டும்.அதன் பிறகே வாகனத்தை குறைந்தது வாகன பயிற்சி பள்ளியில்80 மணி நேரமாவது ஓட்டிஇருக்க வேண்டும்.அதன்பின்னர்  ஆய்வாளர் உடன் வாகனத்தைஒட்டி காண்பிக்க வேண்டும் .அவர் ஒவ்வொரு செயலுக்கும் மதிப்பெண் போடுவார் .பின்னர் தேர்ச்சி பெற்றால் அறிவிக்க படும் .

   புதிதாக ஒட்டுநர்  உரிமம் பெற்றவருக்கு 12  புள்ளிகள் வழங்கப்படும் வருடத்திற்கு 12  புள்ளிகள்  புதிதாக வழங்கப்படும் .ஒவ்வொரு முறையும் தவறு செய்கிற பொது தவறுகளை பொருத்து  3 புள்ளிகள் 12 புள்ளிகள்  வரை கழிக்கப்படும்.போக்குவரத்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கருவி கண்டிப்பாக பொருத்தப்பட்டுள்ளது .இதனால் வாகனத்தை செலுத்துவோரும் கவனமாகவும் பொறுப்புடனும் ஓட்டுவர்.இந்த மாதிரி சட்டம் நடைமுறையில் இருந்தால் அந்த இளையர்கள் போல பொறுப்பில்லாமல் ஓட்ட மாட்டர்கள் .வெளிநாடாக இருந்தால் ஒருவழி பாதையில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக வழக்கை சந்திக்க வேண்டி இருக்கும்கண்டிப்பாக உரிமம் ரத்து செய்யப்பதுவதுடன் , அபராதம்  அல்லது 3 சிறை செல்ல வேண்டும்.போக்குவரத்து அதிகாரிகளும் அடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சட்டம் கடமையை செய்யும் என்று இருந்து விடுவார்கள் .
வேக கண்காணிப்பு கருவி

  வெளி நாடுகளில் உலகளாவிய  ஒட்டுநர் உரிமம்(internation driving licence) பெற 80,000 ரூபாய் வரை செலவாகும் .அதை வைத்து  உலகின் எந்த நாடுகளில் வேணுமானாலும் வாகனத்தை ஓட்ட முடியும். நம் நாட்டில் 4,000 ரூபாய் வரை தான் செலவாகும் .மற்ற நாடுகளில் ஓட்ட விதிகளையும் ,தனியாக உலகளாவிய  ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்.ஆனால் இங்கு வாகன பயிற்சி பள்ளியானது ஒரு சதுரம்  அறை மட்டுமே .பழகுவது எல்லாம் பொது சாலைகளில் தான் , பழகும் வாகனத்தில் குறைந்தது 8 நபர்களாவது இருப்பார்கள் . சோதனையின் ஒட்டி காண்பிப்பது  எல்லாமே  பொது சாலைகளில் தான் .ஒட்டுநேர் உரிமமும்  பள்ளியின் தயவால் வெகு எளிதாக கிடைத்து விடும்.சாலை விதிகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை ,மேலும்  தவறாக ஒட்டி விட்டு அதை நியாப்படுத்துவது.

   வெளிநாடுகளில் போக்குவரத்து விதிகளும் ,தண்டனைகளும் பற்றி  பதிவின்  நீளம் கருதி அடுத்த பதிவில்    விரைவில்  .உங்களுடைய கருத்துகளை பினோட்டம் இடுங்கள் .

7 comments:

  1. உங்களது கருத்துகளை பின்னோட்டம் இடுங்கள் .

    ReplyDelete
  2. really good information
    continue

    ReplyDelete
  3. ஜான் வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  4. இங்கே தான் பணம் விளையாடுகிறதே...

    ReplyDelete
  5. அதனால் வந்த வினை தான் இன்னிலை ,திண்டுக்கல் தனபாலன் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  6. நல்ல பதிவு. தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. @பழனி.கந்தசாமி ஐயா தங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !