Oct 28, 2012

நச்சு வாயுக்கள் ஒரு அறிமுகம்

     உலகத்தில் தயாரிக்கபடும் பொருள் அனைத்தும் இந்த பயன்பாட்டுக்கு என்று வடிவமைக்கப்படும் .நண்பர் இல்ல திருமணதிற்கு சென்றிருந்த போது திருமண மண்டபத்தில் காற்றாடி(blower fan) பார்த்த போது வெளிநாட்டினர் உபயோகத்தையும் ,இங்கு நாம் பயன் படுத்தும் விதமும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது(மேலேயுள்ள புகைப்படம் பார்க்க ).மாறுபட்ட கோணத்தில்  தான்  புதிய  கண்டுபிடிப்புகள் கண்டுப்பிடிக்கப்படுகிறது.இந்த காற்றாடியின் (blower fan) உண்மையான முழுப்பயன்  பற்றி இந்த பதிப்பில் குறிப்பிடுகிறேன்.
          வெளி நாடுகளில் மக்கள்  ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புவர்.இரயிலின் வேகமும் மணிக்கு வரை உள்ள இரயில்களும் உண்டு.இந்த பாதைகள் பெரும்பாலும்  நீண்ட சுரங்க பாதையாகவும் , ஆழமாகவும் இருக்கும்.இந்த சுரங்க பாதை இயந்திரங்களால் தோண்டப்பட்டு பின்னர் பாதை அமைக்கப்படும்  கீழ்பகுதியில்  தளத்தில் உள்ள காற்றில் பிராண வாயு  குறைவாக இருப்பதோடுஹைற்றோகேன்  சுல்பிடே(hydrogen sulfide) ,கார்பன் மோனோ ஒக்ஸ்ட்(carbon monoxide)போன்ற நச்சு வாயுக்கள் (toxic) இருக்கும்.  நச்சு வாயுக்களை கண்டறியும் கருவியை  (toxic gas detector)வைத்து சோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்தபின்னரே கீழே இறங்கி வேலை  செய்வர்.சுரங்க பாதையில் பயன்படுத்தும் மக்களுக்கு நல்ல காற்றோட்டம் தேவை .அதனால் இந்த பகுதிற்கு பூமியின் மேல் பகுதியில் உள்ள நல்ல காற்றை உள்ளே செலுத்துவதுடன் கீழ் இருக்கும் நச்சு வாயுக்களை வெளியேற்ற இந்த மிகப்பெரிய அளவிலான வெளி கற்றாடிகள்    (blower fan)  பயன்படுத்தப்படும்.
  
       வெளி நாடுகளில் கழிவு நீர் செல்லும் பாதை எல்லா வீடுகளையும் இணைத்து   பூமியின் அடியில் கொண்டு செல்லபட்டு கடலில் சென்று கலக்கும் . பாதையும் நீர் தேங்காமல் ஓடுமாறு நீர் மட்டம் பார்த்து அமைக்க பட்டு இருக்கும்.பாதாள கழிவு நீர் செல்லும் பாதை அமைக்க படும்போதும் , வழியில் அடைப்பு ஏற்பட்டு சுத்தம் செய்தும் போதும் நல்லசுகாதாரமான காற்று இருக்காது .இந்த நச்சு வாயுக்களை அளவிட கருவி உள்ளது.அங்கும் இந்த நச்சு வாயுக்களை வெளியேற்ற இந்த வகை கற்றாடிகள்  (blower fan) பயன்படுத்தப்படும். நம் நாட்டில்  கால்வாய்கள் தான்கழிவு நீர்செல்லும் , திறந்த வெளியில் இருப்பதுடன் எங்கும்கழிவு நீர் ஒடமுடியதவாறு  ஒரே  மட்டமாக கட்டப்பட்டு இருக்கும் .அப்புறம் எங்கும்  தண்ணீர் தேங்கி நிற்காமல் என்ன செய்யும்.

நச்சு காற்றை கண்டறியும் கருவி
      நச்சு வாயுக்கள் பூமியின் அடியில் மட்டுமே  இருக்கும் என்று என்ன கூடாது. நம் வீட்டில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் போதும், கழிவு நீர்த்தொட்டியை  சுத்தம் செய்யும் போதும்  சரி அதன் அடியிலும் இந்த நச்சு காற்றுகள் இருக்கும்.கிணற்றில்  இறங்கும் முன் சுத்தமான ஒசிகேன் (oxygen)இருகிறதா என்பதை உறுதி செய்யாவிட்டால் மனித உயிருக்கு ஆபத்து நிச்சயம். நம்மில் கருவிகள் இல்லையே என்ன செய்வது  ? எளிய வழி நிலத்தின் அடிபகுதிக்கு செல்லும் முன் விளக்கு  ,தீப்பந்தம் ஏற்றி  உள்ளே செலுத்தினால் தீ அணைந்து விட்டால் நிச்சயம்  நச்சு காற்றுகள் இருக்கும்.இந்த இடத்திலும் இந்த வெளிகாற்றாடிகளை பயன்படுத்தலாம்.

     ஒரு சில சொந்தமாக மகிழுந்து  வாகனம்( pleaser car)வைத்து இருப்பவர்கள் ,வாகனத்தில் உள்ளகுளிர்சாதனத்தை இயக்கிவிட்டு உறங்குவர்.புது வாகனம் என்றால் பரவாயில்லை , பழையது என்றால் தவிர்ப்பதுநல்லது .இங்கும் இந்த கார்பன் மோனோ ஒசிசிடே(carbon monoxide) குளிர்சாதனத்தில் இருந்து வெளியாகும்.வாகனத்தில்  பற்ற வைப்புகள் (welding)அல்லது திறப்புகள் முறையாக இல்லாமல்  இடைவெளி  இருந்தால் ஆபத்து வந்து விடும்.கண்ணாடிகள் எல்லா பக்கமும் ஏற்றப்பட்டு இருந்தாலும் ,ஒரு பக்கம் சிறிதளவு திறந்து வைப்பது நலம் .இயற்கையான காற்றுக்கு உடலுக்கு நல்லது தானே .

படங்கள் : கூகுள்

3 comments:

  1. மிக அருமையான பதிவு....

    ReplyDelete
  2. ஆட்டோ மொபைல் தங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு... பகிர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !