Dec 2, 2012

வங்கிகளின் சேவைகள் -வெளிநாடும் உள்நாடும்

   மனிதனுக்கு வாழ்வாதரமே    பணம் .பணம்  அதிகம் சம்பாதிப்பவர் யாரும்
பணக்காரர் ஆவதில்லை .அதிகமாக சேமிப்பவரே செல்வந்தர் ஆகமுடியும் .செல்வத்தின் மதிப்பினை வள்ளுவரும் செல்வந்தரை எல்லோரும் புகழ்வார் .இல்லாதவரை திறமைகள் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் .
 
                    இல்லாரை  எல்லோரும்  எள்ளுவர் செல்வரை 
                     எல்லோரும்  செய்வர்  சிறப்பு . 
   வெளிநாட்டு வங்கிகளுக்கும் நம் நாட்டு வங்கிகளுக்கும் உள்ள நிறை,குறை சேவைகளை  பற்றிய ஒரு ஒப்பிடு தான் இந்த பதிவு.          
       
             பத்து வருடங்களுக்கு முன் வங்கி கணக்கு இருந்தால் அது ஒரு மதிப்பு தான் .இன்று எல்லோரிடமும் வங்கி கணக்கு இருக்கிறது .நம் நாட்டில் உள்ள தேசியமயமான  வங்கிகளும் , மற்ற தனியார்  வங்கிகளும் புதிய பயனாளர் கணக்கை தொடங்கிய ஒரு வாரத்திற்குள்  தானியங்கி அட்டையையும்(ATMCard) ,வங்கி கணக்கு புத்தகத்தையும் (Bank passbook)  வழங்கி வருகிறது.வங்கி அட்டை தொலைந்தால் அல்லது குறைகளை பற்றி புகார் செய்ய , பல வழிகளில் எவ்வாறு அட்டையை பயன் படுத்தலாம் என்பது புதிய வங்கி அட்டையை வாங்கும் பயனாளர் வழிகாட்டி ஓன்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு விடும்.

   
 வங்கிகள்ரூபாய் 40,000 வரை வங்கி அட்டையை  வைத்து தானியங்கி (ATM)இயந்திரத்தில் பயன்படுத்துமாறு    அறிவுறுத்துகிறது . படித்தவர்கள்  வங்கி அட்டையை வைத்து  பணம் எடுப்பது முதல் பணம் பரிமாற்றம் ,இணையம் வழி பொருட்களை வாங்குதல் இன்னும் பல சேவைகளை மிக எளிதாக பயன்படுகிறார்கள் .ஆங்கிலம் தெரியாதவர்கள் பாடு திண்டாட்டம் தான் . முதன் முதலாக வங்கி அட்டையை பயன்படுத்தும் போது தயக்கம் வருவது இயற்கையையே  . பலருக்கு தமிழ் மொழி கணினியில் இருந்தும் பயன்படுத்த  தெரியாவிட்டால் அருகில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியின் உதவியை நாடலாம் .அது தெரியாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள் .ஆனால் வெளியில் பணம் எடுக்க காத்து கொண்டு இருப்போரைஎரிச்சல் பட வைக்கும் .

      இன்னும் சிலர் அந்த வங்கி அட்டையை அந்த வங்கியில் மட்டுமே பயன் படுத்துவர்.மற்ற வங்கிகளில்   தம்முடைய அட்டையை மாதத்திற்கு கட்டணம இல்லாமல்  ஐந்து முறை பயன்படுத்தலாம் என்பது சிலர்க்கு தெரிவதில்லை .பணம் தன் கணக்கில் போட வேண்டும் என்றாலும் வரிசையில் நிற்க வேண்டும்.     வங்கி கணக்கு புத்தகத்தை அச்சிட வேண்டும்என்றால்  அதற்கும் பெரிய வரிசையில் நிற்க வேண்டும்.இதற்கு என்று ஒரு அலுவலர் இருப்பார் .கணக்கு புத்தகத்தை வாங்கி கணனியின் அச்சு  இயந்திரத்தில் செலுத்தி அச்சிடப்பட்ட பின் கொடுப்பார்.இதில் ஒரு சிலர் பலருடைய கணக்கு அட்டையை எடுத்து வந்து தொல்லை கொடுப்போரும் உண்டு. இந்த சேவை இதெல்லாம் வங்கியின் வார நாட்களில் மட்டுமே தான் .


        வெளிநாட்டு வங்கிகளின் புத்தகத்தில்  நாம் கொடுக்கும் ரகசிய எண்ணையும்  கொடுக்கிறார்கள் .அதனால் சுயமாக செய்து கொள்ள முடிகிறது .ஒரு வங்கி அலுவரிடம் இந்த அச்சிடும் இயந்திரத்தை( passbook printer)வெளியில் வைத்தால் வாடிக்கையாளர் சுயமாகவே இந்த சேவையைசெய்து கொள்ளாமேஎன்றேன் .ஆனால் அவர் பாதுகாப்பு கருதி தான் இதை நாங்கள் செய்கிறோம் .இல்லையெனில் இதை போல போலியாகவே வங்கி அட்டைகள் தயாரித்து விடுவார்கள் என்று கூறி வயிற்றில் புளியை கரைத்தார்.காசோலை  (   Drop box) பெறும் பெட்டியும் வெளியில் தான் இருக்கிறது.தானியங்கி கண்காணிப்பு கருவி இருந்தும் ஏன் இந்த நிலை?


     இன்னுமும் சில வங்கி தன் மற்ற கிளையின் உள்ள பயனாளர்களுக்கு கணக்கு புத்தகத்தை அச்சிட்டு கொடுப்பதற்க்கு கூட எந்த கிளையில் கணக்கை திறந்திமோ அங்கே போக சொல்கிறார்கள் . வங்கிகள் அனைத்துமே எல்லாம் கணினி   மூலம் இணைக்க பட்டு இருக்கிறது.வங்கியின் அலுவலர்களும் வாடிக்கையாளரிடம்  ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை. வெளிநாட்டு வங்கிகளின் சேவைகளை  பார்த்து வியந்து இருக்கிறேன் .அடுத்த பதிவில் வெளிநாட்டு வங்கிகளின் சேவைகளை பற்றி விரைவில் ....

    .

7 comments:

  1. முதன் முதல் வங்கியிலிருந்து அட்டை மூலம் பணம் எடுப்பது நிறைய பேருக்கு பயம் தான்... சிலருக்கு பல முறை எடுத்தாலும் பயம்... ரூபாய் நோட்டுகள் வெளி வரும்போது பாய்ந்து எடுப்பார்கள்...

    ReplyDelete
  2. இப்போது பல இடங்களில் சரியான சமயத்தில் அட்டை மாட்டிக் கொள்கிறது (நாமமும்...)

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. பணம் வரவில்லை , நாம் தவற விட்டால் அடுத்தவர் கையில் போய்விடுமோ என்ற பயம் .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகராஜ் !

    ReplyDelete
  4. அட்டை மாட்டிக் கொண்டால் திரும்ப வாங்கி விடலாம் .பணம் தவறவிட்டால் !தனபாலன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  5. ஹரி ,சந்தோஷ் குமார் வலைத்தளத்தில் இணைந்ததற்கு நன்றி !தொடருந்து வாருங்கள் .

    ReplyDelete
  6. இன்னமும் சில வங்கிகள் தன் மற்ற கிளையின் பயனாளர்களுக்கு கணக்கு புத்தகத்தை அச்சிட்டு கொடுப்பதற்க்கு கூட, எந்த கிளையில் கணக்கை திறந்திருக்கிறோமோ அங்கேயே போக சொல்கிறார்கள். இல்லையென்றால் அதற்கு தனியாக காசு வாங்குகிறார்கள்.

    இது சரியான அக்கிரமம். அப்புறம் எதற்கு மல்டிசிட்டி செக் எல்லாம் கொடுக்கிறார்கள்?

    ReplyDelete
  7. அச்சடிக்கும் இயந்திரத்தை வெளியில் வைத்தால் அவரவர் சுயமாக அச்சிட்டு கொள்ளலாம் .மாற்றங்கள் வரும் என்று நம்புவோம் .ஐயா தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !