Dec 19, 2012

தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து

   தீ விபத்துகள் பெரும்பாலும் கவனக்குறைவாகவே     நிகழ்ந்து இருக்கிறது. தீ விபத்துகள் மின் கசிவு , சமையல் எரிவாயு குழாய் வெடிப்பு ,பட்டாசு வெடிப்பு,சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்திய தீ விபத்துகள் என்று பல நிகழ்வுகள் செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம் .ஆனால் தொ(ல்)லைகாட்சி பெட்டியினால் வந்த தீ விபத்து  பார்த்த போது கொஞ்சம் அதிர்சியாக இருந்தது.மனித தவறுகளில் தான் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் .எல்லோருக்கும் பயன்படுமே என்று தான் இந்த பதிவு.





எனது கைத்தொலைபேசிக்கு கணக்கில் பணம் நிரப்ப சென்ற போது அடுத்தடுத்த இருந்த வாடகை வீடுகளில் முதல் வீட்டில் இருந்து புகை மூட்டமாக தெரிந்தது. வீடு பூட்டி இருக்கிறது ஆனால் புகை அதிகமாக வர ஆரம்பித்தது .அதற்குள் ஒருவர் தீ அணைக்கும் துறைக்கு தகவல் தர  தீ அணைக்கும் வண்டி நிறுத்தும் இடம் அருகில் இருந்ததால் அடுத்த ஐந்து நிமிடத்தில்  அவர்கள் வந்து விட்டார்கள் .பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் .

   வீட்டில் உள்ள தொ(ல்)லைகாட்சி பெட்டி (Television)எரிந்து கொண்டு இருந்தது.தீ அணைக்கும் வீரர்கள் தீயை எளிதாக கட்டு படுத்தினார்கள் .வீட்டுக்கரா பெண்மணி விபரம்கேள்வி பட்டு அலறி அடித்து கொண்டு வந்து அழுகையுடன் வந்து சேர்ந்தார் .வீட்டின் நிலைமையை பார்த்த அவரால் பேச முடியவில்லை .வீட்டில் மின்சாரம் இருந்த போது தொ(ல்)லைகாட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்த்தவர் மின்சாரம் தடைப்பட்டுடன் நிறுத்தாமல் சென்று விட்டார்.மின்சாரம் அதிக அழுத்தத்தில் வந்தஉடன் தொ(ல்)லைகாட்சி பெட்டியில் உள்ள பட குழாய்(Picture tube) உடைந்து தீ பற்றி விட்டது.

    நல்ல வேலையாக   அதன்  அருகில் இருந்த சமையல் அறையில் திரவ எரிவாயு குழாய்க்கு(LP Gas hose) தீ பரவும் முன் அணைக்க பட்டு விட்டது.திரவ உருளை (LP Gas Cylinder) தீ பிடித்து இருந்தால் அடுத்தடுத்து இருத்த வீடுகளில் தீ பரவவுதுடன் பொருட் சேதம் அதிகமாக இருந்திருக்கும்.வீட்டுக்கார பெண்மணி தன் குழந்தைகள் வீட்டில் இருந்தால்  நிலைமை என்னவாகி இருக்கும் என்று எண்ணி புலம்ப ஆரம்பித்து விட்டார் . பொதுவாக எல்லோரும் மின் இணைப்பை தொலைக்காட்சி பெட்டியில் தான் மின் இணைப்பை நிறுத்துவார்கள் .மின்சாரம் வரும் பெட்டியில் உள்ள மின் இணைப்பை துண்டிப்பதில்லை .

   சிங்கையிலும் இதே  நிலையை  கண்டு இருக்கிறேன் .வீடுகளில் தங்கி இருக்கும் நண்பர்கள் சிலர் சமைப்பதற்கு  பொதுவாக மின் அடுப்பை பயன்படுத்துவர் .அதை உபயோகம் முடித்த பின்னர்  மின் இணைப்பை நிறுத்துவதில்லை .அதனால் தீ விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது.சிங்கையிலும் தீ அணைக்கும் கருவி யாரும் வீடுகளில் பயன்படுத்துவதில்லை .ஒரு சில   பணகார வீடுகளில் சிறிய அளவில் தீ அணைக்கும் கருவி (Fire extinguisher) சமையல் அறையில் மட்டும் இருக்கிறது.

தீ அணைப்பான்
   பொதுவாக எல்லா திரை அரங்குகளிலும் , வணிக வளாகத்தில் கண்டிப்பாக பார்வையில் படும்படி வைக்க பட்டு இருக்கும்.தண்ணீர் குழாய் இதற்க்கு என்று தனியாக பெரிய அளவில் இருக்கும்.நவீன படுத்தப்பட்ட  அணைத்து கட்டிடங்களிலும்  சிறிய தண்ணீர் குழாய் (singular pipe) கூரையின் கீழே பொருத்தப்பட்டு இருக்கும் . தீ பிடித்தவுடன் வெடித்து சிதறும்படி சிறிய கண்ணாடி குமிழ்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.நகரத்தில் உள்ள  வீடுகளில் தண்ணீர் கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான். 

     தீ பற்றி எரிந்தவுடன் எல்லோரும் தண்ணீரை எடுத்து ஊற்றுங்கள் என்று கத்துவார்கள் .ஆனால் எத்தனை பேர் முயற்சி செய்வார்கள் ,எத்தனை பேர் தண்ணீர் எடுத்து வருவார்கள் .நடைமுறையில் பார்க்கும்போது பலர் முயற்சி செய்தது சற்று ஆறுதலாக இருந்தது.அனுபவங்கள் அடுத்தவர்கள் செய்கையில் இருந்து  கற்று கொள்வது புத்திசாலித்தனம் .சொந்த  அனுபவங்கள் விலை சற்று அதிகமாக கொடுத்து இருப்போம் .இலவச தொலைகாட்சி பெட்டி என்றாலும் நம்மில் எத்தனை பேர் சரியாக மின் நிறுத்தம் செய்கிறோம் ?

3 comments:

  1. கணையாழி கண்ணாதாசன்,செந்தில்குமார் ,சந்தோஷ் குமார் இந்த வலைத்தளத்தில் இணைந்தற்க்கு நன்றி !தொடர்ந்து வாருங்கள் !

    ReplyDelete
  2. தேவையான பகிர்வு....

    நிச்சயம் வீட்டை விட்டு வெளியேறும்போது இவை எல்லாம் அணைத்துவிட்டோமா என உறுதி செய்துவிட்டே செல்ல வேண்டும்....

    ReplyDelete
  3. நல்லவேளை தொலைக்காட்சிப் பெட்டியோடு முடிந்தது....

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !