Dec 4, 2012

வெளிநாட்டு வங்கிகளின் சேவையும் , நண்பரின் வங்கிஅட்டை திருட்டும்

              வெளிநாடுகளில் உள்ளவங்கிகளின் சேவைகள் பற்றி வெளிநாட்டில் வசிக்கும்  நண்பர்களுக்குதெரிந்தது தான் இருந்தாலும் புதிய செய்திகள் இருந்தால் தெரிவிக்கவும் .உள்நாட்டில் உள்ள வங்கிகளின் சேவைகளை முதல்பகுதியில் பார்த்தோம் .பார்க்காதவர்கள்  விருப்பம் இருந்தால் பார்த்து விட்டு வரவும் .உறவுகளை விட நண்பர்களை தான் நாம் அதிகம் நம்புவோம் .நல்ல நண்பர்களில்  சில புல்லுருவிகள் இருப்பது எதிர் பாரத ஓன்று .



      வெளிநாடுகளில் வங்கி கணக்கு தொடங்க கடவு சீட்டும்(Passport) ,அடையாள அட்டையும் (Identity card)தேவை .வங்கி கொடுக்கும் கணக்கு புத்தகத்திலும் , வங்கி அட்டையிலும்  ஆறு இலக்க ரகசிய எண்ணை விருப்பம்போல் நாம் தான் கொடுக்க வேண்டும்.மீண்டும் ஒருமுறை  சரிபார்க்க அந்த எண்களை அழுத்த வேண்டும்.புதிய கணக்கை ஐந்து நிமிடத்திற்குள் முடிந்து விடும்.வங்கியின் தானியங்கி இயந்திரங்கள் (ATM Machines)தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளவசதியாக  நகரின்  அனைத்து பகுதிலும் இருக்கும் .இது எங்கும் உள்ளது தானேஅப்புறம் என்ன சிறப்பு ? தானியங்கி இயந்திரத்தில் ஒரே இடத்தில் பணம் எடுக்கவும் முடியும்.அதே இயந்திரத்தில் பணத்தை சேமிக்கவும் முடியும் .வங்கி கணக்கு அட்டையை அச்சிட்டு கொள்ள முடியும்.



  

     இந்த சேவைகள் 24 மணி நேரமும் இருப்பதால் பயனாளர் மிகுந்த பயனடைவர் .வங்கிகளுக்கு அதிக வேலை பளுவும் கிடையாது.கணக்கு தொடங்கும் போது ஒருநாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை நம்மிடம் கேட்டு பதிவு செய்து இருப்பதால் அதற்கு மேலே வேண்டும் என்றால் வங்கி கிளைகளை நாட வேண்டும்.அதிக பணம் சேமிப்பு கணக்கில் போடவேண்டும் என்றாலும் வங்கி கிளைகளை நாட வேண்டும்.வங்கியின் காசோலை பெட்டியில்   24 மணி நேரமும் போடலாம் .வங்கிஅட்டையை திருட்டு போனாலும் நிர்ணயிக்க பட்ட அளவை மட்டுமே எடுக்க முடியும்.கண்காணிப்பு கருவி செயல்பட்டு கொண்டு இருப்பதால்  24 மணி நேரத்திற்குள் திருடனை பிடித்து விடுவார்கள் .

     வங்கி அட்டையின் ரகசிய எண்ணை நாம் வேறு எவருக்கும் தெரியப்படுத்த கூடாது .ஒரு சிலர் அட்டை நம்மிடம் இருக்கும் போது என்ன செய்து விட முடியும் என்று எண்ணுவதுண்டு .என் நண்பரின் அனுபவத்தை எழுதுகிறேன் .ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஒரேஅறையில் தங்கி இருந்தனர். என் நண்பரின் வங்கி அட்டையை வைத்து அவருடைய நண்பர்   பணத்தைஎடுத்து கொண்டு அட்டையை  மீண்டும் எடுத்த இடத்திலே வைத்து விட்டார். பணத்தை கொடுத்து விட்டால் மன்னித்து விடுவதாக நண்பர் கேட்டு பார்த்தார்,அதற்க்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை .காவல்துறை  புகார் செய்தார் .நண்பர் பிடிபட்டு அவமானம் அடைந்தார் .

     அதன் பிறகு நண்பர் தன் நண்பருக்காக வழக்கு வேண்டாம் என்றால் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடரமுடியும் என்றார்கள்.வெளிநாட்டு வங்கிகளில்  கனிவான சேவை தான் இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது. வங்கிகளின் வெளியே  வாடிக்கையாளர்களை  வங்கி தரம் சேவை பற்றி ஆய்வு செய்து மேம்படுத்தி கொள்கிறார்கள் .நம் நாட்டிலும் உள்ள வங்கிகள் முயற்சி செய்தால் மேம்பட்ட சேவைகளை வழங்க  முடியும்.அந்நாளை விரைவில் எதிர்பார்ப்போம்


4 comments:

  1. தகவலுக்கு நன்றி......

    ReplyDelete
  2. நல்ல தகவல்... இங்கு வரும் காலம் எப்போதோ?

    ReplyDelete
  3. எதிர்பார்ப்போம். எதிர்பார்த்துக்கொண்டே இருப்போம். எதிர்பார்ப்புடனே மரிப்போம்.

    ReplyDelete
  4. வாழ்கையில் எதிர்பார்த்து பாதி போய்விட்டது .பத்து ஆண்டுகளுக்குள் வரும் என நம்புவோம்.தொழில்களம் ,வெங்கட் நாகராஜ் , ஆசிரியர் ஐயா தங்களது வருகைக்கு நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !