Dec 6, 2012

ஒரு தலை காதல் ஆபத்தானதா?

        காதல்  என்பது அனைவருக்கும் பருவ வயதில் வருவது தான் ,அதை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணின் விருப்பமே . ஒரு தலை   காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் சக மாணவியைபேருந்து நிலையத்தில் வைத்து  கத்தியால்  குத்திய அதிர்ச்சியான நிகழ்வை உறவினர் பார்த்திருக்கிறார்.முதுகலை பட்ட படிப்பை படித்து கொண்டிருக்கும் மாணவர்  இப்படி ஒரு  செயலை செய்திருப்பது  இளைய தலைமுறை எங்கே செல்கிறது கேள்வியை எழுப்புகிறது .ஒரு தலை காதல்   பற்றியதே இந்த பதிவு .
       மலரினும் மெல்லியது காதல் என்பார்கள்.பதின்ம வயதில் காதல் அனைவருக்கும் கண்டிப்பாக வரும் .அது பருவ வயதில் இனக்கவர்ச்சி .இருபதுகளில் வருவது காதல் தான் .காதலுக்கும் காமத்திற்கும்  இடைவெளி சிறிதளவே .காமத்தின் மறு வெளிப்பாடு என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் .காதல் முதலில் முக அழகையும் ,நிறத்தையும் வைத்து தான் வருகிறது.பின்னேர் காதல் நிலைத்து இருப்பது அன்பினால் மட்டுமே .இருவரும் காதலித்து திருமணம் வரை சென்றாலே அதுபெரிய விபரம்.கடைசிவரைக்கும் சேர்ந்து வாழ்வது என்பது இந்த அவசர காலத்தில் போற்றுதலுக்கு உரியது.இது  இருவருமே காதல் செய்தால் மட்டுமே சாத்தியம் .  

         திரைப்படமும் ,சின்னத்திரை  நிகழ்ச்சிகளும் மக்களை வெகுவாக பாதிக்கிறது.திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே திரை அரங்குகளை விட்டு வெளியில் வரும் போது  எல்லாத்தையும் விட்டு விட வேண்டும்.பெரும்பாலும் இந்திய திரைப்படங்களை பார்த்தால் காதலர்களை ஓன்று சேருவது தான் கதையாக இருக்கும்.கதாநாயகன் ,நாயகி  திருமணம் முடிந்த பின் உள்ளவாழ்க்கை கதையை யாரும் வெகுவாக எடுப்பதில்லை. பொதுவாக காதல் ஒரு முறையும்   பலருக்கு காதல் (காமம்) பல முறையும் வருவதுண்டு.  திரைபடத்தைபார்த்து காதல்உணர்வுகளை கற்பனைகளை உருவாக்கும் . திரைபடமும் யதார்த்த வாழ்க்கையும் ஒன்றாகாது .

        காதல் என்ற உணர்வு தன்னால்தனக்குள்  வருவது .அதை அடைய பலர் இரக்கத்தால் , பணத்தால் ,வீரதீர செயல்களால் , புகழால் இன்னும் பல வழிகளில் பெற முனைவதுண்டு.தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிய பிறகு வற்புறுத்துவது நல்ல செயல் அல்ல,தானாக கனிவதை தடியால் அடித்து கனிய வைப்பதற்கு ஒப்பாகும் .பலர் தற்கொலை செய்து கொள்வதாகக் மிரட்டுவது உண்டு.காதலை ஏற்றுக்கொள்ளததால்   தற்கொலைசெய்து கொள்வது அறியாமையாகும் .காதலுக்காக  செய்தோம் என்ற தவிர வேறு எதுவும் இல்லை.

    நாம் பிறந்த மண்ணுக்கு ,வீட்டுக்கு ,நாட்டுக்கு ,நன்றி கடன் பட்டவர்களுக்கு என்ன செய்தோம் என்று ஒரு கணம் யோசித்தால் இந்த திரிஷா இல்லாவிட்டால் திவ்யா என்ற மன நிலைமைக்கு வந்து விடுவார்கள் .  ஒரு தலை காதல் பெரும்பாலும் சொல்லாமல் இருந்து மனதிற்குள் வைத்து கொண்டு இருப்பதால் மன அழுத்தம் காரணமாக மனநலம் பாதிக்க பட்டுவிடும்.நல்ல நண்பர்கள் இருந்தால் எடுத்து சொல்லி பழைய நிலைமையை கொண்டு வரலாம் .அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் .கோபத்தின் அடுத்த நிலை வன்முறை .

     வளர்ந்த    வெளி நாடுகளில் காதல் முதல் காமம் வரை இது  பாவாமாகமோ ,குற்றமாகவோ  கருதுவதில்லை.அவரவர் துணையை அவர் தான் தேடி கொள்வர்.அந்த காதல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதற்கு தேவையான வசதிகளை  எல்லாம் சேர்த்த பிறகே திருமணம் செய்வர். பலர் நண்பர்களாக (கணவன் ,மனைவி போல )இருந்து வாழ்வோரும் அதிகம் உண்டு.இதற்கும் ஒரு ஒப்பந்தம் உண்டு.பிரிந்தாலும் இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை .இங்கு கவர்சியான உடைகளை பெண்கள் அணியும் நேரில் பார்த்தால் திரைபடத்தில் வரும் கனவுகன்னி நினைவுக்கு வர மாட்டார்கள்.வாழ்கையில் அழகு ஒரு அங்கம் .அது மட்டும் முழுமை ஆகிவிடாது.


புத்தியுள்ள மனிதர்  என்ற சந்திரபாபு  பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

      பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
          காதல் கொண்ட  அனைவருமே மணம் முடிப்பதில்லை
    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து  வாழ்வதில்லை
        சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து  போவதில்லை ! 





 
படம் உதவி :கூகுள்

 படித்த உங்கள் கருத்துகளை பின்னுடம் இடுங்கள் .பதிவுபிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !

5 comments:

  1. nalla alasal. chandrababu paadal enakku mikavum piditha paadal.

    ReplyDelete
  2. நல்ல தீர்க்கமான முடிவு...சந்திரபாபு பாடிய பாடலுடன்

    ReplyDelete
  3. ''கதாநாயகன் ,நாயகி திருமணம் முடிந்த பின் உள்ளவாழ்க்கை கதையை யாரும் வெகுவாக எடுப்பதில்லை. '' என்பதும் உண்மையே!
    ''மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை !''

    அருமையான பொருத்தமான வரிகள்

    ReplyDelete
  4. வெங்கட் நாகராஜ் ,பரிதி முத்துராசன் தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  5. அவை நாயகன் தங்கள் வருகைக்கு நன்றி ! தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !