Dec 31, 2016

நெருப்புநரி உலவிக்கு(Firefox) அருமையான தரவிறக்க மேலாளர் இணைப்பு நீட்சி(add-on)

இணையத்தில் உலவ கணிணிக்கு பல விதமான புகழ்பெற்ற சில உலவிகள் chrome, Firefox , opera, safari  இருக்கிறது .அதில்  கட்டற்ற இலவச மென்பொருளான நெருப்புநரி உலவிக்கு நீட்சிகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் நெருப்புநரி உலவிக்கு சில அவசியமான இணைப்பு நீட்சிகளை(add-on) பழைய பதிவில் எழுதி இருக்கிறேன். தரவுகளை  தரவிறக்கம்  செய்ய அருமையான தரவிறக்க மேலாளர் (Downloading manager)இணைப்பு நீட்சியைத் தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.


   கணிணிக்கு தரவிறக்க மேலாளர் பல இருந்தாலும் இணைய உலவியோடு இந்த நீட்சி சிறப்பாகவே செயல்படுகிறது.தரவிறக்கம் செய்ய வேண்டிய சுட்டி சொடுக்கினால் நெருப்புநரி உலவியின்  தரவிறக்க மேலாளர் எதை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சாளரம் திறக்கும். படத்தில் காட்டியது போல் முதல் இருப்பதை தேர்வு செய்தால் கணிணியில் எங்கு சேமிக்க வேண்டுமோ, அங்கு தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விடும்.

     இரண்டாவதை தேர்வு செய்தால்  படத்தில் காட்டியது போல் மற்றொரு சாளரம் திறக்கும் , அதில் நாம் எங்கு சேமிக்க வேண்டும் என்பதை நாம் மாற்றிக்கொள்ளலாம். இந்த இணைப்பு நீட்சி(add-on) இல் தரவிறக்க  நமக்கு தேவைப்படுவதை முதலில் தரவிறக்கம் செய்யலாம்.மேலும் இதில் ஒன்றிற்கு மேற்பட்டவரிசையாக இருந்தால் தரவிறக்க வேகத்தை மாற்றுவது , நிறுத்துவது , இணைய இணைப்பு விடுபட்டதை கூட கட்டாய தரவிறக்கம் செய்யலாம்.

     நெருப்புநரி உலவியை மூடினாலும் இந்த  இணைப்பு நீட்சி தொடர்ந்து தரவிறக்கம் செய்வது இதன் சிறப்பு.புதிதாக தேடுதல் வேண்டுவோர்க்கு இதில் தேடுதல் பட்டியல் இருக்கிறது.இன்னும் சில பயன்பாடுகளும் இருக்கிறது. இது கட்டற்ற மென்பொருள் என்பதால் பயமில்லாமல் பயன்படுத்தலாம் . திருப்தி இருந்தால் pay pal வழியாக வெகுமதி அளிக்கலாம்.😊
இந்த இணைப்பின் சுட்டி

    வருகின்ற புதிய வருடம் 2017சிறப்பாக அமையட்டும், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!😄😃😃

3 comments:

  1. நல்லதொரு நீட்சி......

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஜோதிஜி, வெங்கட் நாகராஜ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !