இணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது நமக்கு தேவையானதுடன் மற்ற விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வைத்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.
Nov 6, 2013
Oct 27, 2013
முப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்
பொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d max,Rivet போன்ற மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது. cad வகைகள் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட மென் பொருட்கள் இருக்கிறது .இவை அனைத்தும் கட்டண மென் பொருட்கள்.இந்த மென் பொருட்கள் கணிணியில் இயங்க குறைந்த பட்சம் 2 GB தற்காலிக நினைவகமும் (ram ), 2 GB வன்தட்டில் (Hard disk)இடமும் வேண்டும்.விலையும் அதிகம் பெரிய நிறுவனங்கள் தான் விலை கொடுத்து வாங்க முடியும்.
.
.
Aug 31, 2013
vlc media player - க்கு புதுச்சட்டை போடுவது எப்படி !
கணிணியின் இயங்கு தளங்கள் பல இருந்தாலும் அது ஒவ்வொன்றுக்கும் பிரத்தியோகமான media player ஒன்று இருக்கும் . விண்டோவில் இயங்கு தளத்தில் window media player -ம் , மாக் இயங்கு தளத்தில் quick time player -ம் மற்றும் லினக்ஸ் பல இயங்கு தளங்களில் vlc media player - ம் இருக்கும் .vlc player ஆனது கற்றற்ற சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை நாம் கணிணியில் நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும் பார்க்க பயன்படுத்தி இருப்போம் .
Aug 20, 2013
தொடரும் விபத்துகளும் ,மனித தவறுகளும் !
ஒரு சில மாதத்திற்குள்ளாக இரண்டாவது முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் மேல் கூரை விழுந்து விட்டது .இதை கேள்விப்பட்டவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருப்பார்கள்.அப்படியானால் விமான நிலையத்தின் பாதுகாப்பு எப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை. இங்கு மேல் கூரை என்பது தளத்தை குறிக்காது , அதன் கீழ் உள்ள போலியான கூரை (false ceiling) அழகு படுத்துவதற்கு பயன்படும் கூரையை தான் குறிக்கும்.தண்ணீர் ஏன் இப்படி விழுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நீர் கசிவு தான் .
Aug 14, 2013
கைத்தொலைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு !
இரு நாட்களுக்கு முன்பு சந்தையில் ஒரு பெருங்கூட்டம் நடுவில் இளம்பெண் ஒருவர் அழுதுகொண்டே இருக்கிறார் . விசாரித்ததில் கைத்தொலைபேசி தொலைத்து விட்டார் . அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிந்தது . திருமண பரிசாக கணவர் ரூ 6,000 மதிப்பிலான நோக்கியா கைத்தொலைபேசி வாங்கி கொடுத்து இருக்கிறார்.அவரிடம் IMEI எண் ஏதும் தெரியுமா என்றால் , தெரியவில்லை . பலர் வந்து ஆறுதல் சொல்லியும் அழுகை நின்றபாடு இல்லை என்ன செய்வது.இதே போல மறுபகுதியில் மற்றும் ஒருவர் தொலைத்து விட்டார் .
Aug 10, 2013
புதுமையான தொழில்நுட்பம்
சிங்கையில் பணி செய்து கொண்டு இருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எடுத்து பேசினால் மறு முனையில் பெண் ஒருவர் .உங்களுக்கு அதிர்சட குலுக்கில் ஒரு மனை இடம் இந்தியாவில் ஒதுக்க பட்டுள்ளது .அதை பெற்றுக்கொள்ள நாளை மறுநாள் மாலை எங்கள் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள் என்றார்.அதிர்சடதின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லை . எப்படி எனக்கு இந்த மனை இடம் கிடைக்கிறது என்றதிற்க்கு ,கணிணி குலுக்கில்மூலம் தொலைபேசி எண்ணை தெரிந்தேடுத்தோம் என்றார்.
Aug 9, 2013
ஏமாறுவோர் இருக்கும் வரை ..........
இணையத்தில் பலருக்குஅதிருஷ்ட காற்று அடித்து இருப்பதாகவும் அதை அள்ளி கொண்டு போக உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மின் மடல் வந்ததாக படித்து இருப்போம் .அந்த காற்று என்பக்கமும் மின்மடல் மூலம் வீசியது.படித்து பார்த்தவுடன் நான் இன்ப அதிர்ச்சி அடைந்து விட்டேன்.ஒரு மின்மடலில் லோட்டேர்யில் 250 மில்லியன்(1மில்லியன் =10 லட்சம் )அமெரிக்க டாலர் ($2,500,000.00)அடித்து இருப்பதாகவும், அதை பெற உடனே இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் என்று இருந்தது.
Subscribe to:
Posts (Atom)

