Aug 16, 2012

சுதந்திரம் பெற்றதும் கொடுத்ததும்- 1

        இந்தியா  சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 ல்  சிறப்பாக கொண்டாடியது .  இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமையாக இருந்திருகிறது .இதில் 200 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்து வைத்திருந்ததுஆனால் இங்கிலாந்து சுதந்திரத்தை கொடுத்ததா ? இல்லை  நாம் போராடி பெற்றோமா ? என்பதே.அதற்கு   முன் நம் இந்தியாவை பற்றி ஒரு பார்வை .
இந்தியா சுதந்திரம் அடைந்து  66 வருடங்கள் ஆகிறது.உலக வல்லரசு படியலில் & உலக நிலபரப்பில் ஏழாவது வரிசையில் இருக்கிறது.மக்கள் தொகையில் இரண்டவது இடம் ,பல செயற்கைக்கோள்களை  விண்வெளியில் ஏவி இருக்கிறோம் .தொழில் நுட்ப துறையிலும் , தொலை தொடர்ப்பு    துறையிலும் அமெரிக்காவே   வியக்கும் வண்ணம் முன்னேறி இருக்கிறோம் .உணவு உற்பத்தியில்  தனிறைவு அடைந்து விட்டோம் .உலக பணக்கார வரிசைகளில் இந்தியர்கள் பலர் உள்ளார்கள் .  மக்கள்  அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாக உயர்ந்து  உள்ளோம் . மக்களின் வாழ்க்கை தரமும் ,வசதிகளும்  நல்ல முன்னேற்றம் உயர்ந்து உள்ளது .


      மேல் கண்டவை சாதனைகளாக இருந்தாலும் இந்தியாவின் மறுபுறம் பசி ,உணவு  தட்டுப்பாடு ,தண்ணீர் ,வேலையில்லா திண்டாட்டம் ,வீடு ,கழிப்பறை ,சுற்றுப்புற மாசுகள் ,மற்றும் வகுப்புவாதம்  ,இனவாதம் ,தீவிரவாதம் என  பல பிரச்சினைகள்  மக்களை வாட்டுகிறது .நடு இரவில் கன்னி பெண்  தனி ஒருவளாக நகைகளை அணிந்து  செல்ல முடிகிறதோ அன்று தான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் என்று காந்தி சொன்னார் .இன்றுவரை அதற்கு சாத்தியமில்லை .

       இரண்டாவது  நூற்றாண்டு தொடக்கத்தில் ஐரோப்பாவில் பலவிதமான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. வியாபாரரத்தை  பெருக்க அளவில்லாமல் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்ததன் காரணமாக ,வியாபாரமாக சந்தைகளை தேடினர் .அப்படி வியாபாரம் செய்ய இந்தியாவிற்கும் வந்தனர்.அப்பொழுது இந்தியாவை மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டு இருந்தனர் .கி.பி .1744 ல் அப்படி வந்தவர்களில் ஒருவர்  தான் ராபர்ட் கிளைவ் ,வாறன் ஹசி பின் நாளில்  கிழக்கு இந்தியா கம்பெனி தொடங்கி  ,பிரிட்டன் ஆட்சிக்கு அடித்தளம் போட்டவர்கள்   (போர்துகிசியர் ,பிரெஞ்சு ,டச்சு படை  எல்லாம்  அண்ணனை  யாரும் அசைக்க முடியல ,ஒண்ணும் செய்ய முடியல,பின்னர் தான் இந்த ரிப்பன் பிரபு  தொடங்கி மவுண்ட்பேட்டன் பிரபு வரை ஆட்டம் போட்ட தெல்லாம்   ). மன்னர்களில் ஒற்றுமை இல்லாதையும் ,பழைய போர்க்கருவிகளை பயன் படுத்துவதையும் கண்டுகொண்டனர்.பல மன்னர்கள் அடிமையாக இருந்து  சுகவாசியாகவும் ,கப்பம் கட்டி  வாழந்து இருகிறார்கள் என்பதே கசப்பான உண்மை .
பீரங்கி படை 

              இந்தியா சுதந்திரதிற்க்கு போராடிய மன்னர்கள் என்று பார்த்தால் திப்புசுல்தான் ,ஜான்சிராணி ,தமிழ் நாட்டில்  கட்ட பொம்மன் ,உமைதுரை ,மருது சகோதர்கள் ,பூலித்தேவன்  ஆகியோரை குறிப்பிடலாம் .மற்றவர்கள்  பிரித்தானிய   ஆட்சியர்களுக்கு   அடிவருடிகளாவும் ,துதிபாடிகளாகவூம் இருந்திருகிறார்கள் .மன்னர்கள் போரிடும் போது நவீன கருவிகளை வியாபாரம் செய்வதுடன் ஆட்சியிலும் பங்கு பெற்று கடைசியில் இந்தியாவையும் அடிமைபடுதினர்.

சிப்பாய் படை
         ஐரோப்பியர்கள்  தங்கள் ஆட்சிக்கு உட்பட பகுதிகளை பிரித்து குறுநில மன்னர்களுக்கும் ,பிரபுக்களுக்கும் கொடுத்து கிடைக்கும் வரிபணத்தையும் ,இயற்கை  வளங்களையும்  தம் நாட்டிற்கு கொண்டு சென்றனர் .இந்தியா துணை கண்டத்தில் பல மொழிகளூம்,பல இனங்களும் இருந்ததால் மக்களை ஆட்சி செய்வது சிரமமாக இருந்தது ,அதனால் ஆங்கிலத்தையும் ,மத மாற்றதையும் மக்களிடம் திணிக்கப்பட்டது  . பிரிட்டன் ஆட்சியின் அடக்கு முறையில்  , மக்கள் உரிமை இழந்து   மிகுந்த  சிரமத்திகற்கு  உள்ளானர்.மக்களின் கல்வியறிவோ   இல்லை. உயர் குடும்பத்தில் பிறந்து  மக்கள் இங்கு தங்கி இருக்கும் பிரித்தானிய   ஆட்சியர்களுகாக உள்ள பள்ளில்  படித்து , பட்டம் பெற மேல் நாடு சென்றனர் .பின்னர் மக்களும் பிரிட்டானிய  படைவீரர்களா சேர்ந்தனர் . பிரிட்டானிய  படைவீரர்களூக்கு வழங்கப்பட்ட  சம்பளமும் ,சலுகைகளும் இந்தியா படைவீரர்களூக்கு கொடுக்கப்படவில்லை( வெளிநாடுகளில்  பணிபுரியும்   இந்தியர்களுக்கும் இது பொருந்தும் .எந்த துறையாக இருந்தாலும் அங்குள்ள  குடிமக்களுக்கும் ஒரே வேலை  ஊதியம்  வேறு, வேறு  என்று தான், ) . பிரிட்டானிய  படைவீரர்களாக இருந்த   முஸ்லிம்களை   பன்றி கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்கள் பயன்படுத்த சொன்னர். சீக்கியர்யர்களை மதம் மாற சொன்னர்.மேல் கண்ட காரணிங்க்களால் இந்தியா படைவீரர்கள் பிரித்தானிய   ஆட்சியர்களு எதிராக கிளரிச்சியில் ஈடுபட்டனர். இது முதல் சிப்பாய் கலக்கம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறது .இது தான் பிரித்தானிய   ஆட்சியர்களுக்கு  எதிரான முதல் போராட்டம்.

திலகர் 
     .கி .பி. 1885 ல் இந்தியாவின் முதல் சுதந்திர  போராட்ட குழு உருவானது ,அதில் பாலகங்கதிர திலகர் ,கோபால கிருஷ்ணா கோகலே ,தாதாபாய் நோரா ஜி ,லாலா லச்பத் ராய் ,அன்னிபெர்சென்ட் அம்மையார் ,பெபீன் சந்தர்பால் ,முஹமது அலி ஜின்னா ,வ .உ .சிதம்பரம்பிள்ளை  ஆகியோர் இருந்தனர்.முதலில் இந்த குழுவினர் ஆட்சி செய்து கொண்டிறிந்த இங்கிலாந்திடம்  ஆட்சியில் பங்கு பெறவே முயற்சி செய்தனர் .இதன் மூலம் மக்களின் கோரிக்கைகளையும் ,உரிமைகளையும் பெற முனைந்த்னர்  .அது சாத்தியமில்லாமல் போகவே போராட்டத்தை  தொடங்கினர் ,மக்களும் காலப்போக்கில் விழித்து தேசியவாதத்தை ஆதரித்தனர் .பின்னர், அது மிதவாத காங்கிரஸ் , தீவிரவாத காங்கிரஸாக மாறியது தனிக்கதை ."ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு  கொண்டாட்டம் " என்பதை போல ஆளும் பிரிட்டனுக்கு சாதகமாக இருந்தது .இதனால் அவர்களால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை .

      இரண்டவது போராட்டதை  அடுத்த பதிப்பில்  காண்போம்

    

2 comments:

  1. உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

    ReplyDelete
  2. india suthanthiram petrathu nam makkal poratathinal matum illay, irandam ulaga pore mudivuku pin ikya nadu sabai uruvanathu athil entha nadum matra natai adimayaga vaikakudathunu satam niravetra patathu athan adipadaiyel engalandu indaiaku 2 andukal kalithu suthanthirathi arivithathu

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !