இந்த தீவில் மக்கள் கி.பி .300 முதல் கி.பி.1100 வரை வாழ்ந்ததாக கணிக்கிடப்படுகிறது .இங்கு மக்களை ரப்பா என அழைக்கப்படுகிறார்கள் . கி.பி.400 இல் வழி தவறிய பொலினீசிய கப்பல்களில் வந்தவர்கள் திரும்ப முடியாமல் வாழ்ந்தனர் என நம்பப்படுகிறது. பொலினீசியத் தீவு அருகில் ஆயிரம் மைல் வரை வேறு தீவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
பல்லாயிரமாக இருந்த மக்கள் தொகை இன்று 4400 பேர் மட்டுமே வாழ்கிறார்கள் .இவர்களது தொழில் விவசாயமும் , மீன் பிடித்தலும் ஆகும் .
ஈஸ்ட்டர் தீவில் நீண்ட உருண்டையான மரங்கள் நிறைய இருந்திருகிறது.இந்த மரக்களை கட்டு மரக்களாகவும் ,படகுகள் செய்யவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் . டால்பின் மீன்கள் தான் இவர்களது விருப்பமான
உணவாக இருந்தது .இதை ருசிக்க வேட்டையாட ஆயிரம் கி.மி .வரை கட்டு மரத்தில் சென்றுள்ளனர் .
.
தீவிலுள்ள மரங்கள்யாவும் வெட்டபட்டதால் பறவை இனங்கள் அழிந்து போய் விட்டது .பறவை இனங்கள் இல்லாததால் மழை யின் அளவு குறைந்து விட விவசாயமும் போய் மக்களை பஞ்சம் வாட்டியது.மரங்களும் இல்லாததால் மீன் பிடிக்க முடியவில்லை .உணவுக்கு வழியின்றி மக்கள் ஒருவரயொருவர் அடித்து தின்று கடைசியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துகிறார்கள்.கடைசியில் ஜேகப் ரகவீன் எனும் இந்த மாலுமி வந்த பிறகு தான் வெளி உலகிற்கு தெரிந்தது .
No comments:
Post a Comment
கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !