Jul 23, 2012

இரத்த தானம்

                           நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

        மனிதன் ஆரோக்கியமாக வாழ உடல் நலம் முக்கியமானது .அந்த  உடல் நலமாக இருக்க உடலில் உள்ள உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .அந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க ரத்தத்தின்  பங்கு முக்கியமானது .ரத்தம்  உடலில் உள்ள  அசுத்த ரத்தத்தை இருதயத்திற்கு  எடுத்து சென்று  நல்ல  ரத்தத்தை உடலில் உள்ள உறுப்புகளுக்கு கொடுக்கிறது இதனால் தான் நாம் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்க முடிகிறது  
.நாம் உண்ணும் உணவிலிருந்து குளுகோஸ் ஆகவும் ,கொழுப்பாகவும் சேமிக்கிறது .உடலுக்கு த்தேவையான கலோரியை இது கொடுக்கிறது .கடினமான உடல் உழைப்பால்  கொழுப்பும் எரிக்கப்படுகிறது .உடல் உழைப்பு இல்லாமல் அதிக கலோரி உள்ள உணவை  உண்ணும் போது சேரும் கொழுப்பு மாரடைப்புக்கு வழி  வகுக்கிறது.

       ரத்தத்தில்  A ,B ,AB , O ,  நான்கு பிரிவுகள் ஆகவும்  ,நேர் ,எதிர்  உட் பிரிவுகளாவும்  ( positive, negative) உள்ளது.இதில் ஒரு பிரிவு மற்ற பிரிவுக்கு பொருந்தாது .O பிரிவு மட்டும் மற்ற எல்லா ப்பிரிவுகளுக்கும்  பொருந்தும் .நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது .இதில் 4 லிட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும் .ரத்தம் ரத்த கொடையாளர்களால் தரப்பட்டு ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகிறது .ரத்தம் ஒருவரிடமிருந்து (1 unit) 350 மி .லி .மட்டுமே பெறப்படுகிறது .


     ரத்தத்தின் அருமை மற்றவரை விட விபத்தில் அடிபட்டு  அதிக ரத்த இழப்பினால் அல்லது அறுவை சிகிச்கிசை  செய்ய வேண்டிய நிலையில் உள்ளவரை விட அவர்களது அன்புக்குரியவர்களுக்கும்,  நண்பர்களுக்கும்  நன்கு தெரியும் .ரத்தம் தேவைப்படும் போது  நாம் நாடுவது  ரத்த வங்கிகளையே  ,சில நேரங்களில் ரத்த வங்கிகளும் கை விரிக்கும் போது  பெரிதும் எதிர் பார்ப்பது  நண்பர்களையும், உறவினர்களையும் தான் .பணஉதவி செய்ய  தயாராக இருக்கிறார்கள்   ஆனால் ,வெகு சிலரே  ரத்த தானம் செய்கிறார்கள் .பலர் ரத்த ப்பிரிவை மாற்றி சொல்கிறார்கள் .

    ரத்த தானம் செய்ய கருணை மனம் இருந்தால் செய்யலாம் ,பயம் கொள்ள த்தேவையில்லை .கொடுத்த ரத்தம் புதியதாக  சில நாட்களில் ஊறி விடும் ,ரத்த தானம் யாரும் செய்யலாம் .அதற்கு கீழ்க்கண்ட  சில விதி முறைகள் மட்டும் உண்டு .

1. வயது 18 முதல் 65க் குள்  இருக்க வேண்டும் .

2. எடை 45 கி. கி க்கு குறையாமல்  இருக்க வேண்டும் .

3. ரத்த அழுத்தம் 120/80 முதல் 130/85 க்குள்  இருக்க வேண்டும் .

4. 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே  கொடுக்க வேண்டும் .

5.நல்ல ஆரோக்கியமான  உடல் நலத்துடன் இருக்க வேண்டும் .

6.தோற்று நோய்கள் ( மலேரியா , டெங்கு ,தொழு நோய் ,)இல்லாதவராக இருக்க வேண்டும் .

7.மது அருந்தியிருக்கக்  கூடாது .

8.சர்க்கரை நோய் ,இருதய நோய் , உயர் ரத்த அழுத்தம்  மற்றும் சில நோய்கள் இருக்கக் கூடாது .

9.தடை செய்யப்பட்ட மருந்துகள் ,போதை ப்பொருட்கள் பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும் .

பின் குறிப்பு :
                         எங்கள் உறவினர் ஒருவருக்கு ரத்த தானம் தேவை ப்பட்டபோது
நான் ரத்த தானம் கொடுக்கும் போது கண்ட அனுபவம் .   ஒரு ரத்த வங்கி ரத்தம் கொடுத்து விட்டு மாற்றாக அதே அளவு ரத்தம் எந்தப்பிரிவாக இருந்தாலும் வேண்டும் என்று பெற்றுக்கொண்டது .அதுவும் ஒரு விதத்தில்  நல்லது  தான்.அடுத்த முறை யாருக்கும்  தேவைப்பட்டால் செய்வீர்கள் தானே!
         எனது வலைப்பூ எழுதத்தொடங்கி இருக்கிறேன். எனது நிறை, குறைகளை உங்கள்  கருத்துக்களாக   பின்னூட்டமாக  இடுங்கள். 
      

No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !