Jul 20, 2012

மதுரை அன்றும் இன்றும்

          மதுரை என்றதுமே நினைவில் வருவது மீனாட்சியம்மன் கோவிலும் , திருமலை நாயக்கர்  மஹால், வண்டியூர் தெப்பகுளம், வைகை ஆறு ,அரசு பொது மருத்துவமனையும் தான் .தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை உள்ள நகரம் .

 உயர் அதித வசதிகள் கொண்டஇந்திய முன்னணி மருத்துவமனைகள் ,விமான நிலையம் , உச்ச நீதிமன்றம் ,கல்லூரிகள் , தொழில்சாலைகள்  ,சாலைகள் மற்றும் பல  இருந்தும் சுகாதாரம் கேள்விக் குறியாக இருக்கிறது.
      

                     சமீபத்தில் உறவினர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு சென்றபோது வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. பல அடுக்கு மருத்துவமனைள் புதியதாக ஒவ்வொரு தெருவில்லும் நிறைய கட்டப்பட்டு வருகிறது .ஆனால் அத்தனை மருத்துவமனையிலும் படுக்கை நிறைந்து தான் இருக்கிறது, அத்தனை நோயாளிகள் பார்க்கும் போதே அதிர்சியாக இருக்கிறது . 


          மக்களின் சுகாதாரம் மிக மோசமாக இருக்கிறது ,ஏழாவது  மாடியில் இருக்கும் நம்மை கடிக்கும் கொசுவை  கண்டிப்பாக பாராட்ட வேண்டும் , சுற்றி பார்க்கும் போது மருத்துவமனைகளை      சுற்றிலும் ஓடும் சாக்கடை நதி .மதுரையில் எல்லா இடங்களிலும் தேங்கிய  குட்டைகளை  காணலாம் .பல கிராமங்களை இணைத்து வீரிவுப்படுத்தும் அளவுக்கு வடிகால் இல்லாததால் இன்னிலை .

           டெங்கு , மலேரியா காயய்ச்சல் போன்ற ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது.  கொசுகளினால் பல வகை நோய்களை பரப்புகிறது என்பது நாம் அறிந்ததே , மழை நீர்  மூன்று நாட்கள் தேங்கினாலே கொசுவின் லார்வா உற்பத்தியாகி விடும்  என்பது  பலருக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.

          சிங்கப்பூர் போன்ற நாடுகளில்கொசுகளை   ஒழிப்புதற்க்காக  அரசு அதிகாரிகள்  உண்டு ,வீடு  வீடாக சென்று சோதனை செய்கிறார்கள் .ஒரு கொசு முட்டை  கண்டு பிடித்தாலும்  அபராதம் சுமார் ரூ 20,000  ($500) வசூலிக்கப்படும். அதனால் தான் மக்களுக்கு முழு சுகாதாரம்  கிடைக்கிறது .. 


அது போன்ற சுகாதாரமான நன்நாள் எந்நாளோ.???

      
          
       

No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !