Dec 22, 2012

ஆபத்தான வேலைகள் ஒரு பார்வை



             காணி நிலம் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று மட்டும் இருந்திருந்தால் காண நிலம் வேண்டும் பாடி இருப்பார்.மக்கள்  வசதிகளையும் ,தேவைகளையும்  பூர்த்தி செய்ய கிராமங்களை  விட்டு நகரை நோக்கி குடி பெயர தொடங்கி விட்டதால் நகரத்தில் இன்று இட  பற்றாக்குறை  தீர்வு அடுக்கு மாடி குடியருப்புகள் .புதியதாக  கட்ட பட்டு வரும் அடுக்கு மாடி குடியருப்பு அருகே  செல்லும் போது வர்ணம்(Painting) பூசி கொண்டு இருந்தார்கள் .மிக உயரத்தில் எந்த  பாதுகாப்பு  சாதனமும் இல்லாமல்  அவர்கள் (Painter) வேலை செய்து கொண்டு இருப்பதைமனம் வருத்தப்பட்டேன்  .அவர்கள் வேலை செய்வதை படம் பார்க்க .
     ஒற்றை கயிறு ஒன்றில் ஊஞ்சல் போல  கட்டி மிக உயர்ந்த இடத்தில் சிறு பலகையை மட்டுமே இருக்கையாக கொண்டு அவர் வர்ணம் பூசி கொண்டு இருக்கிறார். அவருடைய நண்பர் அந்த கயிறை பிடித்து கொண்டு இருக்கிறார்.உயரம் குறைய குறைய அவர் பிடித்து இருக்கும் கயிறை தளர்த்துவார் .சுருக்கமாக கூறினால் வர்ணம் பூசிக்கொண்டு இருபவர்களின் உயிர் நாடி இவர் கையில்.உயிர் காப்பிடு திட்டம் (Life insurance )இருந்தாலும் எத்தனை பேர் அதை எடுத்து  கட்டி வருகிறார்கள் .வருவாய் வருவதில் பாதி சீமை தண்ணீக்கு (சாராயத்திற்கு) போய் விடுமே !

   நன்கு வளர்ந்த நாடுகளின் அறிக்கையை பார்த்தால் கட்டிட கட்டுமானத்திலே  தான் அதிக விபத்துகள் நடை பெறுவதாக காணலாம் .அதிலும் உயரத்தில் இருந்து விழும் விபத்துகள் 80%  அதிகம் .அதனால் சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் எந்த வகையான வேலையானாலும் (அலுவலக வேலை நீங்கலாக )முதலில் பாதுகாப்பு வகுப்பு எடுக்கிறார்கள் தேர்வு வைத்து பாதுகாப்பு சான்றிதழ் (Safety certificate)கொடுக்கிறர்கள். இதில் கண்டிப்பாக பாதுகாப்பு சான்றிதழ்இருந்தால் தான் வேலை செய்ய முடியும்.இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாது.

     தனக்கு பாதுகாப்பு கருவிகள் கொடுக்கிறார்கள் .இதை  கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.இந்த பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்துகிறீர்களா இல்லை வேறு எந்த பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என்பதை கண்காணிக்க பாதுகாப்பு அதிகாரி(Safety supervisor) உண்டு . 20 தொழிளார்களுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி கண்டிப்பாக நிறுவனம் நியமித்து இருக்க வேண்டும்.இல்லையெனில் அதற்கு அபராதம் கட்ட வேண்டும்.விபத்துகள் நடந்தாலும் இந்த அதிகாரி தான் அதற்க்கு பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனமும்வேலை செய்யும் தொழிலாளருக்கு காப்பீடு (Insurance)கண்டிப்பாக செய்து இருக்கும் .

       அடுக்கு மாடி கட்டிட கட்டுமான தளத்தில் வேலை செய்யும் வர்ணம் பூசுவது , கண்ணாடி ,சாளரம்  (Window)பொருத்துவது போன்ற எந்த  உயரமான வெளிவேலையாக இருந்தாலும்இடுப்பில்  பாதுகாப்பு வார்பட்டை( Safety Belt) , தலைக்கு கவசம்( Safety Helmet) , கால்களுக்கு காலனி( Safety shoe) ,கண்ணுக்கு கண்ணாடி ( Safety goggles)கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும். இயந்திரம் பொருத்தப்பட்ட  இரும்பு கம்பி வடத்தில் தொங்கும் தளத்தில் (suspended platform )இருந்து தான் வேலை செய்ய வேண்டும்.அதுவும் இருவர் மட்டுமே நின்று பணி செய்யலாம் . இந்த தொங்கும் தளத்தில் இருந்து கொண்டுஇதைஇயக்கமுடியும்.
    
     இது (suspended platform )கட்டிடத்தின் மேல்பகுதியில்  உறுதியாக பொறுத்த பட்டு இருக்கும்.தனியாக ஒரு நல்ல கயிறு ஓன்று கட்டிடத்தின் மேல்பகுதியில் கட்டப்பட்டு வேலை செய்யும் நபரின்  இடுப்பில்   உள்ள பாதுகாப்பு வார்பட்டை உடன் இணைக்க பட்டு இருக்க வேண்டும்.ஒருவேளை தொங்கும் தளம் விழுந்தாலோ ,கவிழ்ந்தலோ  விபத்தில் இருந்து இந்த கயிறு  உயிர் காக்கும் .இதையும்மீறி  விபத்துகள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.நமது நாட்டில் சுதந்திரமாக வேலை செய்யலாம்.விபத்துகளுக்கு பின் அவரின் குடும்பத்திற்கு என்ன ஆதரவு .

    .பெரியஅளவில் பொருட்செலவு உள்ள   தொங்கும் தளத்தை அமைக்க முடியாத குத்தகைகார்கள்  மரத்திலான சாரத்தையாவது பயன் படுத்தவேண்டும்.தற்போது புதியதாக கட்டும் கட்டடத்தை சுற்றி தற்காலிகமாக தடுப்பு மறைப்பு வெளிநாடுக்களை போல அமைக்கிறார்கள் .இந்தியாவின் மற்ற நகரங்களில்  இந்த பாதுகாப்பு பற்றி பார்த்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.அரசாங்கம் கண்டிப்பாக கட்டிட கட்டுமான சட்டம்சீர்திருத்தம் கொண்டு வந்து நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே சாத்தியம்.ஒவ்வொரு வீட்டின் பின்னும் ஏதோவொரு சோககதை இருக்கலாம் .முகம் தெரியாத அந்தநபர்களை நம்மில் ஏத்தனை பேர் நினைத்து பார்த்து இருப்போம் .

2 comments:

  1. safety is the utmost need of the hour. but the contractors do not think anything about the safety of the poor laborers.

    ReplyDelete
  2. குத்தகைதாரர்கள் பைசா செலவில்லாமல் வேலை ஆனால் சரி .பாதுகாப்பை சட்டம் தான் இறுக்கி பிடிக்க வேண்டும்.வெங்கட் நாகராஜ் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !