Jan 6, 2013

கீழா நிலைக்கோட்டை - வரலாற்றின் எச்சங்கள்

கோட்டையின் முகப்பு உப்பரிகை
                கீழா நிலைக்கோட்டை புதுகோட்டை மாவட்டத்தின் எல்லையில் அறந்தாங்கியில் இருந்து புதுவயல் போகும் வழியில்  14 கி.மீ தொலைவில் இருக்கிறது.ஒரு சிலர் இந்த வழியாக பயணிக்கும் போது கண்டிப்பாக பார்வையில் படும்.பெரிய கோட்டை பல இடங்களில் இடிந்து சிதைந்து காணப்படுகிறது.பெரிய மன்னர்கள் வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடன் உள்ளே பயணிக்கும்போது கோட்டையின் வடிவமைப்பு ,மதில் சுவர்கள் ,காவல் சாவடிகள் எல்லாமே பிரமிக்க வைத்தது.

மதில் சுவரின் மேல்  உள்ள பாதை
       சுதந்திரம் வாங்கும் முன் உள்ள இந்தியாவுக்கும் இன்றைய நவீன இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடை பார்த்தாலே தெரியும்.இன்று மக்கள் ஆட்சி ,மன்னர் ஆட்சியில் மக்கள்  எப்படி வாழ்ந்து இருப்பார்கள் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் பழைய சங்க காலமாக இருந்தால் சேர சோழ பாண்டியரும்  18 நுற்றாண்டு என்றால் வீரபாண்டிய கட்ட பொம்மனும் ,ஊமை  துரையும் , மருது சகோதர்களும் ,பூலித் தேவனும் தான்  நினைவுக்கு வருகிற்து . தமிழகத்தில் பலகுறு நில மன்னர்கள் இருந்தாலும் ஆங்கிலேயர்களின் அடி வருடிகளாக இருந்து வந்து இருக்கிறார்கள் .

    இந்த கோட்டை   கி.பி .1640 நூற்றாண்டுகளுக்கு  முன் கட்டப்பட்டுபாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் , அவர்களுக்கு பின் நாயகர்கள்  ஆண்டு இருக்கிறார்கள் . பாண்டிய  மன்னர்கள்  ஆட்சி  செய்தது  மக்கள் வாழ்ந்தது  எல்லாமே பெரிய கோட்டையில் தான் . கோட்டையை சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் அமைத்து அதில் பல தற்காப்பு அரண்களையும் , சில அகழிகளையும் , அவசர காலத்தில் தப்பிக்க சுரங்க வழிகளையும் அமைத்து இருக்கிறார்கள் . கோட்டைகளுக்கு பெரிய கதவுகளும் ,மதில் சுவர்களிலும் இரவிலும் காவல் செய்வதற்கு ஏற்ப மதிகளிலும்அமைத்து இருக்கிறார்கள் .

தீ பந்தம் செருகுவதற்கு உள்ள துவாரம்
                            சங்கரபதி கோட்டை (விசுவின் சிதம்பர ரகசியம் படத்தின் சில காட்சிகள் அமைத்து இருப்பார் ) ,திருமயம் கோட்டை என்று கோட்டைகள் பெரும்பாலும்  சிறிய நிலபரப்பில் தான் அமைந்து இருக்கிறது .ஆனால் இந்த கீழாநிலை கோட்டை சுமார் கி .மீ  1 சதுர பரப்பில் அமைத்து இருக்கிறார்கள் .கோட்டையின் வடிவமைப்பு எந்த எதிரியும் போருக்கு வந்தால்  தடுக்கும் வண்ணம் தற்காப்பு அரண் பலமான இருந்திருக்க வேண்டும்.சுவர்களின் உயரம் 30 அடிக்கு  குறையாமல் இருக்கிறது .அதன் நால்புறமும்  காவல் காக்கும் நிலைகள் உள்ளது.இன்னமும் மத்தியில் கொடி மரமும்  அதன் முன் ஒரு சிறிய பீரங்கி ஒன்றும் காணப்படுகிறது.இதற்கு  போகும் வழி சிதைந்து மேல் பகுதி படிக்கட்டுகள் மட்டுமே காணப்படுகிறது .கோட்டை சுவர்களின் அடிவாரம் 6 அடி முதல் மேல் பகுதி 3 அடிவரை இருக்கிறது.

சிதைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகள்
       கோட்டையின் முன் பகுதியில் உப்பரிகை காண முடிகிறது.கோட்டையின் மதில்  மேல் காவல் காக்கும் வீரர்கள் இரவில் சுற்றி வருவதற்க்கு  ஏதுவாக அடி சுற்று பாதைஇருக்கிறது .கோட்டையில் தீ பந்தம் சொருகி வைப்பதற்கு   கோட்டை சுவர்களின் குறுக்கு துவாரங்கள் உள்ளது. கோட்டையின் உள்ளே ஒரு குளம் இருக்கிறது.ஒரு காலத்தில் அந்தபுரமாக கூட இருந்திருக்கலாம் .பாண்டியர்களின் சின்னமான மீன் முத்திரை பல இடங்களில் காணப்படுவதாக கூறுகிறார்கள் .

  நிச்சயமாக ஆங்கிலேயர் உடன் போரிட்டு தோற்று பின் கோட்டை கைப்பற்று பட்டு இருக்க வேண்டும்.கோட்டை சுவர்கள் பல இடங்களில்   தனித்தனியாக உடைத்து கொண்டு முன்னேறி இருக்கவேண்டும்.இப்பொழுது கட்டும் கட்டிடம் எல்லாம்  40 வருடங்களுக்குள் விரிசல் விழுந்து பலகீனமாகி விடுகிறது.அந்த காலத்தில் கட்டிய கோட்டை எவ்வளவு பொருட் செலவு ,மக்களின் உழைப்பு எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் நிச்சயம் அந்த காலத்தில் பெரிய விசயம் .இது போல இப்போது கட்ட வேண்டும் என்றால் பெரிய பொருட் செலவு வேண்டும்.இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் உறுதியுடன் நிமிரிந்து நிற்கிறது.

உடைக்கப்பட்ட கோட்டையின் ஒரு பகுதி
   கோட்டையின் உள்ளே குறிப்பிட்ட இடங்களில்  கிராம மக்கள் பல குடியிருப்புகளும் , கோவில்களும் அமைத்து வசிக்கிறார்கள் . கோட்டை சுவருக்கு அருகில் செல்ல முடியாத அளவுக்கு புதர் காடாக இருக்கிறது.மக்களும் .சுவர்களில் எல்லாம் அரசமரம் முதல் பலவகை மரங்கள் முளைத்து நிற்கிறது . காலபோக்கில் கோட்டை இல்லாமல் போனாலும் ஆச்சிரியம் அடைவதற்கு இல்லை.இந்த கோட்டை பல மன்னர்களின் வரலாறு சொல்லும் ,ஆனால் அது வெறும் வரலாற்றின் எச்சமாக நிற்பது தான் மன வருத்தப்படுகிறது .தமிழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையும் , சுற்றுலா துறையும் கவனித்தால் நன்றாக இருக்கும். 
சுவற்றின் அகலம்



காவல் நிலை 


8 comments:


  1. வணக்கம்!

    முன்னைத் தமிழின் மாண்புகளை
    முற்றும் மறந்த தமிழகமே!
    பொன்னைப் பொருளைச் சோ்க்கின்றாய்!
    புகழைப் பொலிவை மறக்கின்றாய்!
    தன்னை வளா்க்க அலைகின்றாய்!
    தாயை மறந்து வாழ்கின்றாய்!
    உன்னைத் திருத்த என்போன்றோர்
    உயிரைக் கொடுத்தும் பயனென்ன?

    காலப் பதிவுகளைக் கற்றுணர, வரலாற்றுக்
    கோலப் பதிவுகளைக் கூட்டிடுக! - ஆல
    மரமாய்த் தழைத்திடுக! வன்சீனி வாசன்!நன்
    வரமாய்த் தமிழை வடித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  2. வணக்கம் கவிஞர் ஐயா,தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி !மிக்க நன்றி !மிக்க நன்றி !

    ReplyDelete
  3. தங்களின் இந்த பதவு என்னை அங்கேயே கூற்றி சென்றதுபோல் உள்ளது இவ்வளவு பழமையான கோட்டையை படம்பிடித்து விளக்கம் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. எந்த நவீனகருவிகள் இல்லாத அந்த காலத்தில் கட்டிய கோட்டை அமைப்பு ஒரு கணம் வியக்க வைக்கிறது .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  4. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் . நேரம் இருந்தால் வந்து பாருங்கள் நன்றி

    http://blogintamil.blogspot.com/2013/01/2517.html

    ReplyDelete
  5. அவை நாயகன் உங்களை இந்த தளம் வரவேற்கிறது !

    ReplyDelete
  6. கீழா நிலைக்கோட்டையை நன்கு சுற்றிப்ப் பார்த்தோம்.
    நன்றி.

    ReplyDelete
  7. கோமதி அரசு தங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !