Feb 6, 2013

ISO image ஐ கணிணியில்எளிதாக நிறுவ உதவும் magic disc

    ஒரு மென்பொருளை ஒரு முறை கணிணியில் நிறுவி  விட்டால் மறுமுறை அதே மென்பொருளை கணிணியில் நிறுவ முடியாது.மறுபடியும் பயன்படுத்த கூடியதாக வேண்டும் என்றால் அந்த மென்பொருளை ISO  image ஆக மாற்றினால் தான் முடியும.இந்த Magic  ISO  மென்பொருள் பிரத்தியோகமாக ISO  image கோப்பாக உருவாக்க பயன்படுத்த படுகிறது .ஆனால் இந்த  magic disc மென்பொருள்  ISO  image கோப்பை  கூட  DVD & pen drive  பயன்படுத்தாமலே boot-able DVDமாற்றிபயன்படுத்தமுடிகிறது.பெயருக்கு ஏற்ற மாதிரியே  வேலை செய்கிறது. window 8  ஐ ISO  image ஆக தரவிறக்கம் செய்தவர்களுக்கு பயன்படும் பதிவு .
     இணையத்தில் இருந்து  window 8 , போட்டோ ஷாப்  போன்ற  பல மென்பொருள்கள்   முதல்  பாடல்கள் ,திரை படங்கள்  வரை  தரவிறக்கம் செய்கிறோம். பாடல்கள் ,திரை படங்கள்  இவற்றை கணினியில்   இருந்து  எங்கும் எதிலும் copy &paste  செய்து பயன்படுத்தலாம் . ஆனால் மென்பொருளை copy &paste  பயன் படுத்தினால் முழுமையாக வேலை செய்யாது  .  


   
      இணையத்தில் இருந்துமென்பொருளை   ISO  imageஆக  தரவிறக்கம் செய்தால்  அதை boot-able DVD அல்லது  pen drive  யாக மாற்றினால் தான் மென்பொருளை கணினியில் நிறுவ முடியும்.அதற்கு கணினியில்   DVD rw  ROM  ஆக இருந்தால் இருந்தால் மட்டுமே சாத்தியம்.அல்லது pen drive  4 GB  இடம் உள்ளதாக இருந்தால் boot-able pen drive  ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

           Magic  ISO  மென்பொருளை திறந்து tools > virtual CD/DVD   > I: no media  >  Mount என்பதை தேர்வு செய்யவும்.இப்பொழுது மென்பொருளின் முகப்பிற்கு சென்று  magic disc  தரவிறக்கம் செய்ய சொல்லும் .பின்னர் மீண்டும் ஒருமுறை
tools > virtual CD/DVD   > I: no media  >  Mount என்பதை செய்யவும்.இப்பொழுது ISO  image  கோப்பை நிறுவ வேண்டும் எங்கு இருக்கிறது என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

    இப்பொழுது  கணிணியில் புதியதாக ஒரு drive ஓன்று உருவாகி setup சாளரம் (pop up )கிடைக்கும் .அதை சுலளியை(mouse) சொடுக்கி மென்பொருளை  நிறுவ வேண்டியது தான்.Magic  ISO மென்பொருளைகீழேயுள்ள முகவரியில் சென்று உங்கள் இயங்கு தளம் எந்தவகையை என்பதை பார்த்து தரவிறக்கம்  செய்து நிறுவி கொள்ளுங்கள் . மென்பொருளை  எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த தளத்தில் விளக்கி சொல்லி இருக்கிறார்கள் .முந்தைய பதிவில் கூறிய படி  பார்த்து தேவை பட்டால் தரவிறக்கவும்.
முகவரி;

 http://www.magiciso.com/tutorials/miso-magicdisc-history.htm  

1 comment:

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !