Jul 20, 2013

நெருப்பு நரி(Fire fox) உலாவிக்கு தேவையான அருமையான இணைப்பு நீட்சிகள் (add-on)

        இணையத்தை  பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக   உலவி வேண்டும். விண்டோவில்  இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர்  கண்டிப்பாக இருக்கும் .அதை தவிர   புகழ்பெற்ற உலவிகள் (browsers)சில  கூகிள் குரோம், நெருப்புநரி , ஒபேரா ,சபாரி . இதில் நெருப்புநரி உலவி (Fire fox)   அருமையான , பாதுகாப்பான ,சுதந்திர இலவச மென்பொருள் ஆகும் .  இதை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது .நெருப்பு நரி உலவிக்கு மட்டும் அதிகமான நீட்சி இணைப்பு தொகுப்பு  (add-on) உள்ளது.அதில்  சில மிக அவசியம் பயன்படும் இணைய நீட்சிகளை  மட்டும் பார்க்கலாம் .



ABP ad block plus :
                    இணைய   தளத்தை பார்க்கும்  போது  நிச்சயம் விளம்பரங்கள் வரும் .சில  நேரங்களில் பக்கத்தை திறப்பது கூட தாமதமாகும்.சில விளம்பரங்களை  மூடுவதுக்கு முயன்றால் வேறு இணைய தளத்திற்கு செல்லும் .சில பக்கத்தை பார்க்க விடாமல் தொடருந்து வரும்.சில வேளைகளில் ஆபாச படங்களும் வருவதுண்டு .இந்த விளம்பரங்களை  தடுப்பதற்கு  பல இணைப்பு தொகுப்புகள்  உள்ளது .இந்தநீட்சி அருமையாக செயல்படுகிறது .

NO Script:
                இணைய   தளத்தை பார்க்கும்  போது  தானாக சில ஒலி  ,ஒளி  படக்  காட்சிகள் வரும்.தேவை இல்லாமல் ஜாவா நிரல்களும் இயங்கும் .இதை கட்டுபடுத்த இந்தநீட்சி பயன்படும் .

 Remember Passwords :
                                  நெருப்பு நரி உலவியில் நம்முடைய கடவு சொற்களை பாதுகாப்பாக  தளங்களில் உள்ளே நுழையும் போது மட்டும் பயன்படுத்தும்.

HTTPS Every where:
                                 இந்த நீட்சியானது இணையத்தில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்கவும் , மற்ற இணைய தளங்களில் பாதுகாப்பாக உலவவும்   பயன்படுத்த உதவுகிறது.

Net video Hunter :
                             நாம் பயன்படுத்தும் இணைய பக்கத்தில் உள்ள ஒளிப்படங்களை  பாதுகாப்பாக தரவிறக்கம் செய்ய உதவுகிறது .

Show IP:
             இந்தநீட்சியானது   நாம் பயன்படுத்தும் இணையதளத்தின்  முகவரி மற்றும் பல தகவல்களை   தெரிவிக்கும்.
Pocket: 
           ஒரு இணைய   தளத்தை பார்த்து கொண்டு இருப்போம் .அவசர வேலை காரணமாக வேறு தளத்திற்கு செல்வோம்  அல்லது மூடி விட்டு செல்வோம்.அந்த  இணைய   தளத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என  எண்ணுபவர்களுக்கு இந்த நீட்சி பயன்படும் .நெருப்பு நரியில் இணைத்து விட்டு பார்க்கவேண்டும் பொழுது ஒரு முறை சொடுக்கினால்  வேண்டிய பக்கத்தை  பார்க்கலாம்.
 Ghostery:
          உலவியானது  சில நேரங்களில் இழுத்து செல்லப்படுவதை தடுப்பதற்கு  இந்த நீட்சியானது பயன்படும்.

Thumbnail zoom plus:
                                  இந்த நீட்சியானது இணைய பக்கத்தில் உள்ள படங்களை பெரிது செய்து பார்க்க பயன்படும் .

G translate:
                   இந்த நீட்சியானது நாம் பார்க்கும் இணைய பக்கத்தை  எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழி பெயர்த்து படிக்க உதவும் .

 மேலே உள்ள நீட்சிகளை இணைப்புகளை சொடுக்கி நெருப்பு நரி உலவியில்  நிறுவி கொள்ளலாம் .நிறுவிய பிறகு வேண்டாம் என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது நிரந்தரமாக குப்பையில் போட்டு விடலாம் .


4 comments:

  1. அப்படியே Chrome-நீட்சிகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இவையெல்லாம் Chrome-லிலும் சரியாக செயல்படுமா...?

    ReplyDelete
  3. சில மட்டும் !அடுத்த பதிவிற்கு அடித்தளம் போட்டு விட்டீர்கள் ! வருகைக்கு நன்றி !!!

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்.... பயன்படும்!

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !