Aug 14, 2013

கைத்தொலைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு !

      இரு நாட்களுக்கு முன்பு  சந்தையில்  ஒரு  பெருங்கூட்டம் நடுவில் இளம்பெண்  ஒருவர்  அழுதுகொண்டே இருக்கிறார் . விசாரித்ததில்  கைத்தொலைபேசி  தொலைத்து  விட்டார் . அந்த எண்ணிற்கு தொடர்பு  கொண்டால் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிந்தது . திருமண பரிசாக கணவர் ரூ 6,000  மதிப்பிலான நோக்கியா கைத்தொலைபேசி  வாங்கி  கொடுத்து இருக்கிறார்.அவரிடம்  IMEI  எண் ஏதும் தெரியுமா என்றால் , தெரியவில்லை . பலர் வந்து ஆறுதல் சொல்லியும் அழுகை நின்றபாடு இல்லை என்ன  செய்வது.இதே போல மறுபகுதியில்  மற்றும் ஒருவர் தொலைத்து விட்டார் .

  கைத்தொலைபேசியானது   பல வருடங்களுக்கு முன்பு வைத்து இருந்தால் அது மதிப்பாக பார்க்க பட்டது .இன்று பெரும்பாலோரின் அவசியமான பொருள் ஆகிவிட்டது.முன்பு    கைத்தொலைபேசியானது மற்றவரோடு பேச மட்டும்  பயன் பட்டது.இன்று  புதுபுது மாதிரிகளில் பலவிதமான வசதிகளுடன்  பேசவும் பயன்படுகிறது .பெருமைக்காக பலர் அடிக்கடி மாற்றுவதும் உண்டு .எந்த பொருளையும் வாங்குவது பெரிதல்ல . அதை பயன்படுத்தவும் , பாதுகாக்கவும்  தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

      கைத்தொலைபேசியை  நமக்கு  மட்டுமே  பயன்படுத்த கூடிய வகையில்  ரகசிய எண்களை  வைத்து பூட்டி வைக்கலாம் .அதை பெரும்பாலானோர் செய்வதில்லை .இரண்டாவது    IMEI  எண் கண்டிப்பாக அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.  கைத்தொலைபேசி திருட்டு போனால் அதை எப்படி  கண்டு பிடிப்பதற்காகவே  இந்த  IMEI  எண்ணையும்    கைத்தொலைபேசியை தயாரிக்கும் நிறுவனம் வழங்குகிறது   .   அதை எப்படி பார்ப்பது  கைத்தொலைபேசியில்  உள்ள  *#06#  பொத்தான்களை  அழுத்தினால்  அந்த கைத்தொலைபேசிக்கு  உள்ள எண் கிடைக்கும்.புதிய கைத்தொலைபேசி வாங்கும்  போதே பார்த்து  , அந்த வாங்கிய  ரசீதுடுடன்  குறித்து வைத்து கொள்வது நல்லது.

   கைத்தொலைபேசியில் உள்ள  சிம்மையும்  பூட்டி வைக்கலாம் ஆனால் அதை எடுத்தவர் செய்யும் முதல் காரியம்   கைத்தொலைபேசியை  அணைத்து விட்டு  சிம்மை  தூக்கி எறிந்து விடுவது தான் .  கைத்தொலைபேசியை  ரகசிய எண்களை  வைத்து பூட்டி இருந்தால் ஒருவேளை கண்டு எடுத்தவர்  பயன்படுத்த  முடியாத நிலையில் திருப்பி கொடுப்பதற்கு  வாய்ப்பு இருக்கிறது.தொழிலில் கில்லாடிய உள்ளவர்கள் திருப்பி தரமாட்டார்கள் .அடுத்து கைத்தொலைபேசி  வாங்கிய ரசீதுடன்   IMEI  எண்ணையும்  கொடுத்து காவல் துறையில் புகார்  கொடுத்தால்  50 % கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

     சீன மாதிரி  கைத்தொலைபேசி (சைனா கைத்தொலைபேசி என்று யாரும் சொல்ல முடியாது.ஆப்பிள் நிறுவனத்தின் கைத்தொலைபேசிகள் ,மற்றும் பல முன்னணி கைத்தொலைபேசி நிறுவனங்கள்  இங்கே தான் தயாரிக்க படுகிறது .)மற்றும் சில மாதிரி கைத்தொலைபேசி உள்ளே உள்ள மின்கலனை  கழட்டி பார்த்தால் உள்ளே IMEI  எண் ஓட்ட பட்டு இருக்கும்.ஆப்பிள் நிறுவனத்தின் கைத்தொலைபேசிகளில் இந்த எண்ணை பயனீர் கணக்கில் பார்த்து கொள்ள முடியும்.வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்களே !கள்வான்  பெரிதா ? காப்பான்  பெரிதா ? என்பதை  நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

                    அனைவருக்கும் இந்திய  சுதந்திரதின  வாழ்த்துக்கள் !!!

4 comments:

  1. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.....

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    ReplyDelete
  3. பயணுள்ள தகவல்கள்..நன்றிகள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !