Aug 20, 2013

தொடரும் விபத்துகளும் ,மனித தவறுகளும் !


                   ஒரு சில மாதத்திற்குள்ளாக இரண்டாவது முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் மேல் கூரை விழுந்து விட்டது .இதை கேள்விப்பட்டவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருப்பார்கள்.அப்படியானால் விமான நிலையத்தின்  பாதுகாப்பு எப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை. இங்கு  மேல்  கூரை  என்பது தளத்தை குறிக்காது , அதன்  கீழ் உள்ள போலியான கூரை (false ceiling) அழகு படுத்துவதற்கு பயன்படும் கூரையை தான் குறிக்கும்.தண்ணீர்  ஏன் இப்படி விழுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நீர் கசிவு தான் .




     இந்த போலியான  கூரை எதற்காக பயன்படுத்துகிறார்கள் . மேல் தளத்தின் உள்ள கழிப்பறை ,குளியல் அறை ,தண்ணீர் குழாய்கள் , மழைநீர்  வடிகால் குழாய்கள் போன்றவற்றின்  அடிபாகத்தை மறைக்கவும் ,மின் விளக்குகள் , மின்சார கடத்திகள் , கண்காணிப்பு புகைப்பட கருவிகள் , தீ அணைக்கும் குழாய்கள் , எச்சரிக்கை  மணி  ,குளிர்சாதன  பெட்டிகள் போன்ற பலதரப்பட்ட  பொருட்களை பொருத்தி  அழகு படுத்தவே  இந்த போலியான கூரைகள் பயன் படுத்தப்படுகிறது.

       மேல் தளத்தில் உள்ள  கழிப்பறை ,குளியல் அறைகளில்  தளத்தில் மட்டும் தண்ணீர் கீழே கசியாமல் இருக்க தார் (water proof) இருமுறை  பூசுவார்கள் .மறுநாள்  தண்ணீரை  பாத்தி கட்டி வைத்து  நீர் கசிவு இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.அதன் பிறகே கழிப்பறை ,குளியல் அறைகளில் உள்ள தளத்தில் மறுபடியும் சிமெண்ட் கலவை பூசி தரை கற்களை ஓட்டுவார்கள் .அதே போல  கூரையின் கீழே கொண்டு செல்லும் தண்ணீர் குழாய்களில் , தண்ணீர்  கசிவு இருக்கிறதா ! என்பதை பார்த்து தான்  போலியான  கூரையின் அட்டைகளை  பொருத்துவார்கள் .வளர்ந்த நாடுகளில் இந்த முறையை தான் பின் பற்றுகிறார்கள் .இங்கு எப்படி ?

      திரையரங்குகள் , விற்பனை  கூடங்கள் , நட்சத்திர  விடுதிகள் ,விமான நிலையங்கள் , கடை தொகுதிகள்  என்று பல  இடங்களில் இந்த போலியான கூரைகள் பயன் படுத்த படுகிறது.ஆனால்  பன்னாட்டு விமான நிலையம் என்ற  போது  பல நாட்டவர் வந்து போகும் இடம் .இங்கு  இது போல இரண்டாவது முறையாக  நடப்பது நகைப்பதற்க்கு மட்டுமில்லாமல் , பாதுகாப்புக்கு  உத்திரவாதம் இல்லாதையும் , அலட்சிய போக்கையும் தான் காட்டுகிறது.கூரை  தரையில் விழுந்ததில் யாருக்கேனும்  காயம் ஒன்றுமில்லை .  இதில்  வெளிநாட்டவர் காயம் பட்டால் இந்தியாவின் மானம் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கும் .

   நேற்று   பீகாரில்  நடந்த  தொடர்வண்டி விபத்தை பார்த்து  அதிர்சியாக  இருந்தது.ஒருவர்  அல்லது  பல மிருகங்கள்  அடிபட்டு  பார்த்து இருக்கிறோம். ஆனால் பெரியவர்கள் , குழந்தைகள் என 37  பேர் இறந்தது   தொடர்வண்டி நிர்வாகத்திற்கு  பெரிய இழுக்கு .மக்களின் பாதுகாப்பு  என்பது கேள்வி குறியாக நிற்கிறது. தொடர்வண்டியின்  தண்டவாளத்தை  கடப்பது என்பது முழுக்க நமது பொறுப்பு .ஆனால்  அதை  குறுக்கு வழிகளில் கடப்பவர்களுக்கு அதிக தொகை அபராதம்  விதித்தால்  குறையும்.மனித தவறுகள் ஒரு புறம் இருக்க , வண்டியை  நிறுத்த முடியவில்லை  என்று ஒட்டுநர் கூறுவது எப்படி ஏற்று கொள்ள முடியும்.

     நாட்டில் ஒடுக்கின்ற அனைத்து வண்டிகளும்  இதே நிலையில்  தான் இருக்கிறதா? அரசாங்கம்  தருகிற  இழப்பீடு அவர்களின் எதிர்காலத்தை  சீர்  செய்ய முடியுமா ?கொடுக்க படுகிற பணம்    எவ்வளவு  நாட்களுக்கு  தாக்கு பிடிக்கும். விபத்துகளின் தவறுகள்  தந்த பாடங்களை  வைத்து எதிர்காலத்திலாவது  இது மாதிரி நடக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
       

4 comments:

  1. ஒட்டுநர்களுக்கு கண் தெரியாதா...? நெஞ்சம் பதறுகிறது... கொடுமையான சம்பவம்...

    ReplyDelete
  2. காலம் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் .வுகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  3. ரயில் தண்டவாளத்தைக் கடப்பது என்பது மிகுந்த ஆபத்தானது. இந்த விபத்து பகல் நேரத்தில் நடந்திருக்கிறது. யாரைக் குறை கூறுவது என்று தெரியவில்லை. மக்கள் எப்போதும் குறுக்கு வழியை நாடுவதுதான் இதற்கு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  4. மக்களின் தவறு தான் ஒட்டுநேர் முயற்சி எடுத்து இருந்தால் தவிர்த்து இருக்கலாம் .ஐயா தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !