Sep 19, 2012

மனிதன் என்னும் போர்வையில்


        புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்தியாவின் பல நகரங்களில் கோலாகலமாக கொண்டப்படுகிறது .சிங்கையில்  ஒரு சில மக்களின் பண்பில்லாத அனுபவத்தை குறிப்பிடுகிறேன் .இப்படி பட்டகசப்பான அனுபவம் உங்கள் யாருகேனும் நடந்து  இருக்கலாம் .சிங்கப்பூரில் ஆங்கில புத்தாண்டு   கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் மிக்க சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.இதில் ஒர்சிட் சாலை தான்  புத்தாண்டு   கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் .இந்த ஒர்சிட் சாலை தான் சிங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ,இதில் தான் பல நாடுகளின் தூதரகங்களும் ,ஐந்து நட்சத்திர விடுதிகளும் ,கடை தொகுதிகளும் , உயர்ந்த கட்டிடங்களும் உள்ளது.
         புத்தாண்டு   தினத்தன்று ஐரோப்பியர்களும் ,உள்நாடு வாசிகளும்  பல்லாயிரகணக்கான மக்கள் கூடுவர்.இசை கட்சேரிகளும், பல இனிய காட்சிகளும்  ,ஒளிரும் பல மின்விளக்குகளும் இரவில் பார்பதற்கு அழகாக இருக்கும்  .இளையர்கள் முதல் பெண்கள் வரை கலந்து கொள்கிறார்கள் .நண்பர்களுடன் சில வருடங்கள் ஒர்சிட் சாலைக்கு சென்றது உண்டு .காலபோக்கில் மற்றவர்களை விட நம்மவர்களை தான் அதிகமாக கலந்து கொண்டனர்.நண்பர்கள் உடன் செல்லும் போது அவர்களின் நண்பர்களும் சேர்ந்து கொள்வது வழக்கம் .
 .
      புத்தாண்டு அன்று  சீனர்களும் , பல இளையர்கள் தம் நண்பர்களுடன் , தம் காதல் துணையுனும் வருவதுண்டு.பொதுவாகவே சீனப்பெண்கள் நமது இந்திய கனவு கதாநாயகி போல தான் உடை அணிந்து இருப்பார்கள் . சேலையை கட்டி பார்த்த  நம்ம மக்களுக்கு இது கிளுகிளுப்பை ஏற்படுத்திவிடும் . சிங்கை பெண்களுக்கு  முழு  உரிமையும் ,சுதந்திரமும்  உள்ள நாடு . நம்ம மக்கள் நண்பர்களுடன் செல்லும் போது மற்றவர்கள் மீதும் நுரை வரும் தெளிப்பானை (colour spray )தெளிப்பதுண்டு ,பதிலுக்கு மற்றவர்களும் தெளிப்பதுண்டு.அப்படி  தெளிக்கும் போது காதலர்கள் பிரச்னைக்கு வருவதுண்டு.

         நண்பர்  ஒருவர்   நுரை வரும் தெளிப்பானை சீனப்பெண் மீது  தெளிக்க பதிலுக்கு சீனப்பெண்களும்   தெளிக்க ,நமது  நண்பர்கள்   அனைவரும்  அழகாக இருந்த சீனப்பெண் ஒருவர் மீது தெளிக்க அந்த பெண் சோப்பு நுரையில் குளித்தவர் போல ஆகி விட்டார் .தன் நிலையை பார்த்த பெண் கோபம்கொண்டு அனைவரையும்  திட்டி ஆரம்பித்தார் . மற்ற நமது நண்பர்கள் தோல் கனமாக இருத்தால் நழுவி விட்டனர். நாம் அந்த பெண்ணிடம் நண்பர்கள் விளையாட்டாக செய்ததை பெரிது படுத்த வேண்டாம் ,எளிதாக எடுத்து கொள்ள வேண்டும் என்றேன்.  முகத்தில் உள்ள பாதி நுரையை என் முகத்தில் பூசிவிட்டு நீங்களும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். நாம் சரியாக இருந்தாலும் நம் கூட இருப்பவரும் சரியாக இருக்க வேண்டும் என்ற பாடம் கற்று கொண்டேன் என எண்ணி கொண்டு திரும்பும்போது மற்றும் ஒரு அதிர்ச்சி.!
   
     
         நம்மவர்  ஒருவரை சீனர்   விரட்டி வந்து கொண்டு இருந்தார் ,வேகமாக ஓடி வந்தவரை எதோ பிரச்சனை என எண்ணி பாதுகாப்புக்கு நின்ற காவலர் தடுக்க நம்மவர்  வேர் தடுக்கி விழுந்து விட்டார்  . அதற்குள் சீன ஆடவர் தனது காலனியை (shoe)கழட்டி விட்டார் அடிப்பதற்கு , ஆனால் காவலர் தடுத்து விட்டார்.பிறகு விசாரித்ததில் சீன ஆடவரின் காதலியின்  மார்பகத்தில் கை வைத்து விட்டார் என .ஏன் இந்த அவல  நிலை போதை  தலைக்கு ஏறி மானபங்கம் வரை வந்து விட்டது.வழக்கு தொடர்ந்தால்  மூன்று  வருடங்கள் மற்றும் மூன்று  கசையடியும் கிடைக்கும் .சென்னையில் தான் இந்த மாதிரி சம்பவம் பேருந்துகளில் நடைபெறும் என படித்திருக்கிறேன். நம்மவர்கள் வெளிநாடுகளுக்கு வரும் போது கூட  கீழான குணங்களையும் பழக்க ங்களையும் கொண்டு வந்து சிரமபடுவனேன் ?.

     பல வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் வெளிவந்த"நகரப்பேருந்துகளில் சில கதர்வேட்டி கட்டிய  பெருசுகள் பெண்களின் பின் நின்று புடவைகளை ஈரமாக்கி விட்டு போகிறார்கள் ,அந்த இடத்தை துவைக்கவே அருவெறுப்பாக  இருக்கிறது  என்ற "ஒரு சில பெண்களின் குமுறல்கள்  தான் நனைவுக்கு வந்தது

     பின் குறிப்பு : இப்போழுது இந்த நிகழ்சிகள் மெரினா பே -ல் நடைபெறுகிறது.  படித்து விட்டு மக்கள் பண்பு இல்லாதோர்  பற்றி உங்கள் கருத்தை குமுறிவிட்டு போகவும்   .     

2 comments:

  1. உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

    ReplyDelete
  2. This is what I have been searching in quite a few web pages and I ultimately identified it right here. Wonderful post. I am so impressed. Could under no circumstances imagine of these a point is attainable with it…I imagine you have a excellent information in particular while dealings with these kinds of topics.

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !