Sep 24, 2012

இறந்தும் வாழ்பவர்கள்.

       மனிதன் பிறக்கும் போது மகிழ்சியாக கொண்டாடும் நாம் இறப்பு ஒன்றை எளிதில் ஏற்று கொள்வதில்லை .நாளையே மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் யாரிடத்திலும் இருப்பதில்லை .வாழ்கையில்  இன்று கடைசி நாளாக  நாம் எண்ணி வாழ்பவர்கள் தான் வாழ்க்கையின் முக்கியதுவத்தை அறிந்தவர் எத்தனை பேர்.பிறப்பு முதல் இறக்கும் வரை தான் எத்தனை ஆட்டம் ,பாட்டம் எல்லாம் .ஆடி அடங்கும் வாழ்க்கையட  ஆறடி நிலமே சொந்தமட என்ற பாடலுக்கு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால்  அதற்குள் மரணத்தில் பின்னால் அவர் ஏற்படுத்தி செல்லும் விளைவுகளை பற்றி ஒரு அலசல் .
      மனிதன் வாழும் போது சொல்லுகிற பேசுகிற ,புகழுரைகள் ,பேச்சுகள் நிலையானதல்ல ,அவர் மரணத்தின் பின்னால் பேசுகிற வார்த்தை தான் அவர்  எப்படி வாழ்ந்தார்  என்பதை உலகுக்கு தெரிவிக்கும் .அது தெரியாமல் எத்தனை  ஆசை ,சுயநலம் ,பொறமை ,கோப தாபங்கள்  தான் என்கிற அகங்காரம் .ஒருவர் இறந்ததும் இழப்பு குடும்பத்தினருக்கும் ,உறவினர்களுக்கும் .நண்பர்களுக்கும் தான் .இதற்கு விதி விலக்காக ஒரு சிலர் இருகிறார்கள் . ஊருக்கு ஒரு சாராயக்கடை இருப்பதால் முதலில் மகிழ்சியடையும்  குடிமகன்கள் பலர்.துக்ககரமான வீட்டில் துக்கம் தொண்டையை அடைபதாக கூறி அளவுக்கு மீறி  குடித்து விட்டு செய்கிற ரகளை சொல்லி மாளாது.இவர்களுக்காக குடிப்பதற்கு  ஒரு தொகையை தனியாக  தந்து தனியே அழ வேண்டும்.சாலை ஊர்வலத்தில் இவர்கள் செய்யும் சேட்டைகள் மக்களை முகம் சுளிக்க வைக்கும்.

     இறந்த பின் செய்கிற சடங்குகளும் ,சம்பிரதாயங்களும்  வந்தவர் போனவர் எல்லாம் வழிமுறை சொல்லி குழப்புவர்கள் பலர்.சடங்குகளும் ,சம்பிரதாயங்களும் நாம் தான் உருவாகி கொள்கிறோம். மரண செய்தியை  நேரடியாக தெரியப்படுத்த வில்லை என  போக்கு காட்டி தட்டி கழிக்கும்  நல்ல உறவினர் சிலர்.தம்  வீடுகளில் நல்ல , துக்கரமான  நிகழ்சிகளில் உதவிகள் செய்யவில்லை ,அதனால் தள்ளி  நின்று வேடிக்கை பார்க்கும் நல்ல நெஞ்சங்கள் பலர்.  விருந்து வீடானாலும் ,இறந்த வீடானாலும் சரி வந்து தலையை காட்டி விட்டு செல்வது, தமக்கு  என்றவுடன் ஒருவரும் நின்று செய்யவில்லையே  என புலம்புவது இந்த தவறை செய்வோர் பலர் இது பண்ணையார் வீட்டு கைதடி கதை  தான்.

         திருமண வீடாக இருந்தாலும் சரி, இறந்த வீடாக இருந்தாலும் சரி வெள்ளையும் ,சொள்ளையுமாக  இருந்து அதிகாரத்தை செலுத்தும் பெருசுகள் பலர்.எரிந்த வீட்டில் புடுங்குவதேல்லாம் ஆதாயம் என்பதை போல   மரண ஊர்தி , குளிர் சாதன பெட்டி  ஆகியவற்றுக்கு பணம்  கறக்கும் நிறுவனகள் .முன்பு எல்லாம் வயதான பெருசுகள் ஒப்பாரி பாட்டும் ,பெண்களின் அழுகையும் அனைவரையும் சோகமாக  மாற்றி விடும்.இப்பொழுது  அதற்கும்  சிரமம் படாமல்   ஒலி பெருக்கியை  அமைத்து  ஒப்பாரி படுவோர் குழு  தனியாக வந்து அழுகிறார்கள்.மரண அறிவிப்பையும் தேர்தல் வாக்கு பிரச்சாரம்  செய்வதை போல அறிவிக்கும் புதிய தொழில் முறை.

      நல்ல வேளையாக கங்கையில்  அடக்கம் செய்யும் நல்ல செயல்கள் தமிழ் நாட்டவரிடம் இல்லை .கங்கை ஏற்கனவே வெகு (அ )சுத்தமாக  இருக்கிறது (இணையத்தில் பார்த்தல் தெரியும் ).இறந்தவர் அடக்கம்செய்து மூன்று நாட்களிலே சொத்தை பங்கிட சொல்லும் நன்மக்கள் பலர்.எது நடந்தாலும் காரியமே கண்ணாக இருக்கும் சுயநல மீன்கள் பலர்.எல்லாவற்றையும் பார்த்து  பிரதி பலன் பாராது ,கடமை தவறாது செய்யும் நல்ல மக்கள் சிலர். மரங்கள் இருப்பதால் தான் மழை  பெய்யும் ,இந்த நன் மக்களினால் தான் மனித நேயத்தை பார்க்க முடிகிறது.
   நான்கு  பேருக்கு நன்றி !
  அந்த நான்கு  பேருக்கு நன்றி !
தாய்  தந்தை இல்லாத
அனாதைகெல்லாம்  , தோல்
கொடுத்து  தூக்கி  செல்லும்
அந்த நான்கு  பேருக்கு நன்றி !
 
என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. போற்றுவதும்  ,தூற்றுவதும்  அவரவர் செய்கையிலே  இருக்கிறது .தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைப்பவர்கள் இறந்தும் வாழ்பவர்கள்.தனக்கு மட்டும் என்று சுயநலத்தோடு வாழ்பவர்கள் ,வாழும் போதே இறந்தராவர். 


பின்குறிப்பு : பெண்களுக்கு இவ்வளவு கண்ணீர் வருகிறது .கோபத்தின் ஆற்றாமை வெளிப்பாடு கண்ணீர் பெண்களுக்கு அது பலம் . பல மக்களின் அணுகுமுறையின்  வெளிப்பாடு இந்த பதிவு ,இந்த பதிவின் கருத்துகளை கூறிவிட்டு  செல்லவும்.

No comments:

Post a Comment

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !