Sep 21, 2012

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

         ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவாக அவர்களுடைய  நட்பு வட்டத்தை வைத்து தான் அவரை மதிப்பீடு செய்கிறார்கள். நட்பின் இலக்கணதிற்கு கோபெரும் சோழனும் ,பிசிராந்தையாரும் தான் நினைவுக்கு வருவார்கள் .பார்க்காமல் காதல் போல பார்க்காமலே நட்பு விசித்திரமான ஒன்று .நல்ல நண்பர்கள்  அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனலாம்.நல்ல நட்பின் வகைகளை இந்த பதிப்பில் பார்போம்  . இன்றும்  உங்கள் நட்பை பாராட்டும் நண்பர்கள் பலர் இருக்கலாம் .அதில் ஒரு சிலர் விதிவிலக்கு .நல்ல நண்பர்கள் கிடைதிருந்தால் என் நிலைமை நன்றாக இருந்திருக்குமே  என்று மனதினுள் சொல்பவர்க்கு இந்த பதிவு .
                           உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
                           இடுக்கண்  களைவதாம் நட்பு .

     நாம் அணிந்திருக்கும் உடை நழுவும் போது உடனே கை வந்து ஆடையை சரி செய்து  எப்படி மானத்தை காப்பாற்றுகிறதோ  அது போல நண்பன் என்பவன் துன்பம் வரும் போது அதை களைவது நட்பு .அப்படி பட்ட நட்பை தவறாக பயன்படுத்தி கொள்பவர்களும்  உண்டு.

      பலருக்கு திரைப்படங்களில் உள்ள நட்பு நினைவுக்கு வரலாம் படத்தின் கதாநாயகனுக்கு ஓன்று என்றால் நண்பன் தான் முதலில் நின்று கடைசியில் உயிரையும் கொடுப்பார்.கதாநாயகன் என்ன கொடுப்பார் ,ஒன்றும் இருக்காது. இப்படி பட்ட கதைகளை தான் நாம்  ரசிக்கிறோம் .திரைப்படம் பார்த்தவர்கள் வெளியே வரும் போதே அதை மறந்தால் நலம் .அதை விட்டு விட்டு  திரைப்பட கனவு உலோகதிலே   வாழ்ந்தால் எப்படி ?தவறு ,குற்றம் என்று தெரிந்தும் நண்பனுக்காக  தானே செய்தோம் என்ற பெருமிதத்தோடு வாழ்க்கையை தொலைத்தவர் பலர்.உயிரை கொடுத்த  சாமிக்கே மயிரை கொடுப்பவர்கள் நாம் மீண்டும் முளைத்து வந்து விடும் என்பதால்  கொடுக்கிறோம் .

    கண்ணதாசன் கூறியதை போல நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் .முதலாவது வகை பனை மரம் போன்றவர் .முன் பின் அறிமுகம்  இல்லாமலே உதவிகள் செய்யக்கூடியவர் .இப்படி பட்டவர்கள் கிடைப்பது அபூர்வம் .
  இரண்டாவது வகை தென்னை  மரம் போன்றவர்.  ஒரு சில நேரங்களில்  நாம் உதவிகள் செய்து இருப்போம் .அதனால் பல உதவிகள் செய்யக்கூடியவர் .
   மூன்றாவது வகை வாழை மரம் போன்றவர்.தினந்தோறும் நம்மிடம் உதவிகள் பெற்று மாறாக உதவிகள் செய்யக்கூடியவர்.

      ஒருவர் நல்லவர் என்று  எண்ணி தானே  நட்பு கொள்கிறோம் .அவர் நல்லவர் அல்ல என் தெரிந்தால் என்ன ஐயா செய்வது ? செல்லும் பாதை நேரானது அல்ல குறுக்கு வழி என்றால் என்ன செய்வது ?சொல்லி திருத்தி பார்க்கலாம்  ,எடுத்து கொள்ளவில்லை எனில் விலகுவது உத்தமம்.ஒரு சிலர் அவர் செய்வது எல்லாமே சரி என்று முகதிதி பாடி கடைசியில் படுகுழிக்குள் தள்ளி விடுவர்.இப்படி பட்டவரை நண்பராக  கொண்டவர்  தன் பொருள் ,செல்வம் ,மானம் எல்லாவற்றையும்   இழிந்து நிற்கதியாக போக வேண்டிய நிலை வரும்.அப்புறம் என்ன அற்ற குளத்து கதை தான் .சிலர் தன் நிழலையும்  கூட நம்பாதவர்க இருப்பர்.

    எதிரிகளை எப்போதும் எதிரே தான் வருபவர்கள் ,துரோகிகள் கூட இருந்தே பள்ளம் தோண்டுபவர் .  வாழ்க்கையில் அதிகம்  நன்றி கடன் பட்டவர்கள் தாம் அது மாதிரி துன்பம் வேறில்லை .உதவி செய்தவர் என்ன கேட்டாலும் செய்ய வேண்டிய நிர்பந்தம் துன்பத்திற்கு ஆளாக நேரிடும் .இன்னும் சிலர் தான் வாழ பிறரைஉறவாடிகெடுப்பதுண்டு.இந்த ரகம் கூட இருந்தே குழி பறிபவர்கள் .நல்ல நண்பர்கள் அமைய வேண்டும்என்று நினைபவர் தான் முதலில்  நாம் நல்ல நண்பராக,  மேன்மையான குணங்களை,   உடையவர்களாக முயற்சி (முடியாவிட்டாலும் )செய்பவராக இருக்க  வேண்டும். குறைகள்  உள்ளவனே மனிதன் பார்த்து சரி செய்து வாழ வேண்டிய அவசர உலகம் இது.

4 comments:

 1. குறளுடன் ஒப்பிட்டு நல்லதொரு பதிவு...

  Tamil 10 மூலம் உங்கள் தளத்திற்கு வருகை...

  சிந்திக்க வைக்கும் பகிர்வுகள்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. திண்டுகல் தனபாலன் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

  ReplyDelete
 3. அமர்களம் கருத்துக்களம் தங்களின் வருகைக்கு நன்றி !

  ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !