Aug 10, 2013

புதுமையான தொழில்நுட்பம்


    சிங்கையில் பணி  செய்து கொண்டு இருந்த போது  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எடுத்து பேசினால் மறு முனையில் பெண் ஒருவர் .உங்களுக்கு அதிர்சட குலுக்கில் ஒரு மனை இடம் இந்தியாவில் ஒதுக்க பட்டுள்ளது .அதை பெற்றுக்கொள்ள நாளை மறுநாள்   மாலை எங்கள் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள் என்றார்.அதிர்சடதின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லை . எப்படி  எனக்கு இந்த மனை இடம் கிடைக்கிறது என்றதிற்க்கு  ,கணிணி குலுக்கில்மூலம் தொலைபேசி எண்ணை  தெரிந்தேடுத்தோம் என்றார்.

     இந்த இடத்தை  இலவசமாக எனக்கு  கொடுப்பதால் உங்களுக்கு என்ன பலன் என்றேன்.அதற்கு  எங்கள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்து நிலம் விற்பனை செய்து வருகிறது, போட்ட பணத்திற்கு மேல் லாபம் கிடைத்தது போக ஒரு சில இடங்களை இலவசமாக குழுக்கல் முறையில்  கொடுப்போம் என்றார்.மறுநாள்  காலையில் அதே பெண் , அழைப்பு   இன்று மாலை கண்டிப்பாக வர வேண்டும் என்றார். நாளைமாலை என்றவர் இப்போது இன்று மாலை என்றவுடன்கேட்டதிற்கு  இன்றோடு இந்த வாய்ப்பு முடிவடைகிறது  என்றார்.

      என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே ? என்ற எண்ணத்துடன் மாலை செவது என தீர்மானித்தேன் .அந்த அலுவலகம் செரன்கூன் சாலையில் கடை தொகுதியில் மேல் தளத்தில் இருந்தது. அலுவலகதில் வரவேற்பு அலுவலில் இருந்த பெண் அமருங்கள் , தனக்கு மேல் உள்ளவர் கொஞ்ச  நேரத்தில் வந்து விடுவார் என்றார் .அலுவலகத்தில் திருச்சியை சுற்றியுள்ள  பல நில வரைபடங்கள் இருந்தது.இந்த பெண் வந்தார்   முதலில் உங்கள் தொலைபேசியை அடைத்து வைத்து விடுங்கள் , பேசுவதற்கு  தொந்தரவாக இருக்கும் என்றார்.அவரிடம் தொழிலில் என்றாலே  பணம் சம்பாதிப்பதற்க்கு தான்  அதை எனக்கு கொடுப்பதானால் உங்களுக்கு என்ன லாபம் என்றேன் .அன்று கூறியதை காரணத்தை மீண்டும் கூறினார்.
  
           மூன்று  நில வரைபடங்களை காட்டி சில வசதிகளை சுட்டி காட்டி ,ஒரு சில இடம் மட்டும் உள்ளது என்றார், மேலும் இடம் தான் இலவசம் பத்திர பதிவு செய்ய நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.  மேலும் எங்கள் வழக்குரைநர்  எல்லாவற்றையும் சட்ட  முறை படி செய்து தருவர் என்கிறார் .பணம் முதலில் எவ்வளவு முடியுமோ அதை கட்டி இன்று  ஒரு ஒப்பந்தம் போட்டு விடலாம் ,அடுத்து  உங்கள் வங்கி மூலம் அடுத்தடுத்த மாத  தவணையாக கட்டலாம் என்றார்.பத்திர பதிவுக்கு  எவ்வளவுஎன்றேன் , ரூ 80000 இருந்து ரூ 100000 வரை என்றார்.உண்மையான நிலவரம் தெரிந்து விட்டது.இங்கு இலவசம் என்பது இல்லை ,நிலத்தில் விலையை தான் பத்திரத்தின் விலை என்கிறார்கள்.

      அந்தந்த நாட்டு சட்டம் அங்கு  மட்டுமே , அடுத்த நாட்டுக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது.திருச்சிக்கு அருகில்  எங்கோ ஒரு மனை இடம் கண்டிப்பாக  நகர எல்லைக்குள் இல்லை.கண்டிப்பாக  நமக்கு தேவைப்படாது என்ற முடிவுயுடன்  நாளை வந்து சொல்கிறேன் என்றேன் .இந்த சலுகை இன்று மட்டுமே என்றார்.தொலைபேசியை அடைத்து வைக்க சொன்னா  காரணம் எல்லாம் புரிந்தது ,புதுமையான தொழில்நுட்பம் வைத்து தான் தொழில் நடக்கிறது என்ற தெளிவுடன் இலவச மனை இடம்  வேண்டாம் என்றேன்.நீங்கள் செல்லாம் என்றார் ,கிளம்பும் முன்  இந்தஅறிக்கையில் உங்கள் நண்பர்கள் சிலர் பெயரையும் , தொலைபேசி  எண்ணையும் குறித்து வைத்து விட்டு போங்கள் என்றார்.முழுவதும் புரிந்தது  யாரோ தெரிந்தவர்  செய்த சில்மிசத்தின் விளைவு தான் நாம் இங்கு வந்தது , மற்றவர்  எவரையும் கோர்த்து விட மனமில்லாமல் வாசலை நோக்கி நடந்தேன் .இத்தனைக்கும்  ஒரு பெண் தான் நிர்வாகி என்ற போது  சற்று மலைப்பாக இருந்தது.

   

8 comments:

  1. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.....

    நல்ல வேளையில் இந்த வலையில் நீங்கள் சிக்க வில்லையே....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஆரம்பத்தில் இருந்து நம்பிக்கை இல்லை .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. புதுமையான தொழில்நுட்பம் தான் ஏமாற்றவும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  3. இது மாதிரி தொ(ல்)லைபேசி அழைப்புகள் இந்தியாவில் மட்டும்தான் என நினைத்துக் கொண்டு இருந்தேன். கட்டுப்பாடுகள் உள்ள நாடு என சொல்லப்படுகின்ற சிங்கப்பூரிலும் இதுபோன்று நடக்கின்றன என அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.எந்த நாடானாலும் ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பது சரிதான் போலும்.

    ReplyDelete
  4. உண்மையான நிலை அதுவே ,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  5. அதிர்ஷ்டம் என்று சொல்லி அலைகழிப்பவர்கள் இவர்கள். மனதை மயக்கி பணத்தைப் பிடுங்கும் நவீன பெருச்சாளிகள்...!
    விழிப்புணர்வுடன் இருப்பதே நல்லது..!

    ReplyDelete
  6. அவர்கள் நிலத்தின் விலையைத்தான் பத்திர விலை என்று சொல்லி இருக்கிறார்கள். பூனை வாங்கினால் யானை இலவசம்; அங்குசம் வாங்கினால் யானை இலவசம் கதைதான்.

    வெளிநாட்டில் இருப்பவர்களை விழிப்பாக இருக்கச் சொன்ன கட்டுரை.

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !