Dec 25, 2014

ERP எனும் தேசிய நெடுஞ்சாலை வரி உள்நாடும் வெளிநாடும்

        இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான வரியில் இருந்து வியாபார நோக்கமில்லாத சொந்த வாகனம் வைத்து பயணிப்போருக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஏன்  என்றால் போக்குவரத்து நெரிசலை  கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் , ஆனால் இந்த வரி இழப்பை பெட்ரோல் ,டீசல் விலையில் 1 ரூ உயர்த்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகள் வெளிநாடுகளில் உள்ளது போல இருக்கிறதா என்றால் இல்லை.வெளிநாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்று இனி பார்ப்போம்.

மின்னணு  கட்டண கருவி

Nov 15, 2014

IDM க்கு மாற்றான இலவசமாக ஓரு தரவிறக்க மென்பொருள் Flareget

   இணையத்தில் இருந்து பாடல்கள் , படங்கள் , மென்பொருள்கள்  போன்று ஏதாவது ஒரு தேவைக்காக தரவிறக்கம் செய்ய வேண்டிவரும். சாதாரணமாக உலவியை வைத்து தரவிறக்கம்  செய்யும் போது  இணைப்பு துண்டிக்கப்பட்டால் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டிய நிலை வரலாம்.இதை தவிர்கவே தரவிறக்க மேலாளர்  மென்பொருள் பயன்படுகிறது.


Nov 5, 2014

தட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு

      உலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கண்ட அனைத்தும் தனித்தனியாக தம்  சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இவற்றை நீக்கி விட்டு பார்த்தால் மனித வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாக ஒன்றுமே எஞ்சி இருக்காது.
 தமிழர்களின் இசைக்கருவிகள்

Dec 20, 2013

கணிணியில் ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்து கொள்வது எப்படி ?

     இணையத்தை  பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து  உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ்  என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை  திருடுதல் ,கணியை  முடக்குதல் என்று சைபர்  குற்றங்கள் நீள்கிறது.

Nov 6, 2013

இணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அருமையான இணைப்பு நீட்சி (add -on)

  இணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது  நமக்கு தேவையானதுடன்  மற்ற  விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு  உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக  வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வைத்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.

Oct 27, 2013

முப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்

          பொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d max,Rivet போன்ற மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது. cad வகைகள் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட மென் பொருட்கள் இருக்கிறது .இவை அனைத்தும் கட்டண மென் பொருட்கள்.இந்த மென் பொருட்கள் கணிணியில் இயங்க குறைந்த பட்சம் 2 GB தற்காலிக நினைவகமும்  (ram ), 2 GB வன்தட்டில்  (Hard disk)இடமும் வேண்டும்.விலையும் அதிகம் பெரிய நிறுவனங்கள்  தான் விலை கொடுத்து வாங்க முடியும்.





  .

Aug 31, 2013

vlc media player - க்கு புதுச்சட்டை போடுவது எப்படி !

  கணிணியின் இயங்கு தளங்கள் பல இருந்தாலும் அது ஒவ்வொன்றுக்கும் பிரத்தியோகமான media player ஒன்று இருக்கும் . விண்டோவில் இயங்கு தளத்தில்  window media player  -ம் , மாக் இயங்கு தளத்தில் quick time player -ம்  மற்றும்  லினக்ஸ்  பல  இயங்கு தளங்களில் vlc media player - ம்  இருக்கும் .vlc player  ஆனது கற்றற்ற  சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை  நாம் கணிணியில்  நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player  வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும்  பார்க்க பயன்படுத்தி இருப்போம் .