Sep 6, 2012

இலவசம் அனுதாபங்கள்

     தீப ஒளி  திருநாள் என்றாலே நாம் நினைவுக்கு வருவது இனிப்பு வகைகளும் ,புது துணிகளும் ,பட்டாசுகளும் தான் .சிறுவர்கள் அனைவருக்கும்   பட்டாசுகளை தவிர வேறு எதுவுமே வேண்டாம் .  உலக அளவில் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் இருந்து தான் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யபடுகிறது .சிவகாசி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் .ஒவ்வொரு வருடமும் நாம் பட்டாசு வங்கி வெடிகிறோமோ இல்லையோ பட்டாசு தயாரிக்கும் தொழில்சாலைகளில்  பட்டாசு வெடித்து பலர் இறப்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது .


     தற்சமயம் நாளிதழ்களில் பரபரப்பான செய்தி பட்டாசு தொழில்சாலையில்  வெடிவிபத்து ஏற்பட்டு 36  பேர்கள் மரணம் ,மற்றும் 55பேர்கள் வரை காயம் என்று படிக்கிறோம் .அந்த அளவிற்கு ஏற்றுமதி செய்யும் தொழில்சாலைகளில் வெடி விபத்து ஆண்டு தோறும் நடக்கிறது என்றால்  தொழில்சாலை பாதுகாப்பு குறைபாடும் , அரசு அலுவலர்களின்            அலட்சியமும் , கவனகுறைவும்  என்பதே கண்கூடு .அரசும் வழக்கம்போல இறந்தவர்களுக்கும் ,காயம்பட்டவர்களுக்கும் இழப் பீடு அறிவித்துள்ளது . அரசாங்கம் கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்களுக்கு கோடிகளில்அள்ளி கொடுகிறது, விபத்தில் இறந்தவர்களுக்கு கிள்ளித்தான் போடுகிறது 

      ஒவ்வொரு வெடிவிபத்து நிகழும் போது பரபரப்பாக பேசப்படும் .அதன்பின் வழக்கம் போல மறதியால் மக்கள் மறந்து விடுவோம் .இறந்தவர்களின் குடும்பங்களுக்கு  இழப் பீடு தொகை இரண்டு ஆண்டுகள் செலவுக்கு  கூட வராது .இதை முறைபடுத்தினால் பல உயிர்கள் இறப்பது தடுக்கப்படும்


  • . தொழில் சாலைகள் . கட்டி முடிக்கப்பட்டவுடன்   அரசு   சோதனை செய்து அதற்கு முறையான சான்றிதல் கொடுக்க வேண்டும் .
  • . தொழில் சாலைகள்  கண்டிப்பாக மக்கள் குடிறுப்பு பகுதிக்கு குறிபிட்ட தூரத்தில் உள்ளதை  உறுதி செய்ய வேண்டும் .
  • தொழில் சாலைகளில் அவசர வழிகளும் , தீயணைக்கும் வண்டிகள் செல்வற்க்கு  போதுமான பாதை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் 
  • தொழில் சாலைகளில் நவீனப்படுத்தி பட்டாசுகள் சேமிப்பு அறைகளை  தனிமை படுத்தி, தனி அலுவலர் நியமித்து கண்காணிக்க வேண்டும்  
  • முதலுதவி பொருட்கள் இருப்பதுடன்,முதலுதவி  பயிற்சி பெற்ற  அலுவலர் ஒருவர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் .
  • தொழில் சாலைக ளில் அனைத்து பகுதிகளுக்கும் தீ  அணைக்கும் குழாய்கள் (sprinkler pipe ) , அபாய எச்சரிகை மணியும் பொருத்தப்பட வேண்டும் 
  • வேலை செய்யும் தொழிலார்களுக்கு  முறையான பாதுகாப்பு பயிற்சி அளிக்க  பட வேண்டும் 
  • வேலை செய்யும் தொழிலார்களுக்கு    முறையான வைப்பு  ஆயுள் காப்பீடுசந்தா முதலாளிகளால்  செலுத்த  பட வேண்டும் 
  • தீயணைக்கும் கருவிகள்(fire extinguisher ) எல்லா இடங்களிலும்   பொருத்தப்பட வேண்டும் 
  • தீயணைப்பு படைக்கு வெளிநாடுகளை போல அடிக்கடி சிறந்த  ஒத்திகை பயிற்சிகள் அளிக்க வேண்டும் ( சென்னையில் நடந்த  தீ விபத்தில்  தீயணைப்பு படைவீரர்கள் 3பேர் இறந்தது, அவர்கள் பாதுகாப்புக்கு போதிய பயிற்சின்மையை காட்டுகிறது  .)
  • குறுக்குவழியில்  உரிமம் கொடுக்கும் அலுவலர்களை கண்டிப்பாக  விபத்துகளுக்கு பொருப்பேற்று   தண்டனை கொடுக்கப்பட வேண்டும்  
மேல் கண்டவற்றை  கடைப்பிடித்தால் விபத்துகள் வெகுவாக குறைந்து விடும்.மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து  குறைகளை அரசு  அலுவலகத்திற்கு புகார் செய்யலாம். அரசு   அலுவலர்கலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தால்   விபத்துகள் குறைந்து  விடும்.

1 comment:

  1. உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !