Nov 11, 2012

நாடோடிகளின் வாழ்க்கை

        இந்திய சுதந்திரம்  அடைந்து பல    65        வருடங்கள்  ஆகி விட்டன .  பல குடும்பங்கள்  சில கூடாரங்களுடன் பொது இடங்களில் தங்கி வாழ்ந்து வருவதை நான் சிறு வயதில் இருந்து பார்த்திருக்கிறேன்.விவசாய காலங்களில் மட்டுமே காண முடியும்.அவர்கள் பேசும் மொழி தெலுங்கு ஆனாலும் நாம் பேசும் தமிழ் மொழியை நன்றாக புரிந்து கொண்டு பதில் அளிப்பார்கள் .அவர்கள் பார்வையில் இருந்து பார்த்தல் தான்  இழந்தது எவ்வளவு  என்று  உண்மையான நிலைமை புரியும்..சொந்த நாட்டில் இரண்டாந்தர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்  ஆனால் நேரிலே பார்த்தபோது அவர்களுக்காகவும் அது போல உள்ள நாடோடி மக்களுக்கும்  இந்த பதிவு.
   இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி இருக்கும்  நம் தமிழ் மக்களை பார்க்கிறோம் .அவர்களின் நிலைமை எல்லாம் நாம் அறிந்ததே .எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் , அடிப்படை தேவைகளை மட்டும் அரசாங்கம் செய்து கொடுக்கிறது. மனிதனின் அடிப்படை தேவை  பசிக்கு உணவு, உடுத்த துணி ,  இருக்க வீடு ஆகியனவே .ஆனால் இந்த மக்களின் நிலைமை யோசிக்க வைக்கிறது.இந்திய மக்களின் அனைவருக்கும் குடும்ப அட்டை  மூலம் பல பொருட்கள் நியாய விலையிலும்,இலவசமாகவும்  வழங்க படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டும் அல்லாது நடுத்தர மக்களும் மிகுந்த பயனடைகிறார்கள் .

    இந்த நாடோடி மக்களுக்கு குடும்ப அட்டை இருப்பதில்லை  அதனால் எந்த விதமான சலுகையும் கிடைப்பதில்லை .காற்று ,மழை ,பனி எல்லாவற்றிக்குமே ஆதாரம் இந்த கூடாரமே ஆதரவு .கொசுக்கடி மற்றும் கொசுவினால் உண்டாகும் நோய்கள் எளிதில் தாக்க கூடிய அபாயம் .நிரந்தரமாக ஓர் இடத்தில தங்குவதில்லை குழந்தைகளின் படிப்பும் கேள்வி குறியே .இலவச கல்வியைக் கூட தொடர முடியாத நிலை.குடிநீர் ,குளியல் ,கழிவு நீக்கம் போன்ற இன்றியமையாத  தேவைகளுக்கு கூட தடுமாறுமாறுவதை என்ன வென்று சொல்ல .நடுத்தர கும்பத்தினரே விலை வாசி உயர்வை கண்டு தடுமாறும் பொழுது  இவர்களின் நிலைகவலைக்குரியது .


   இந்த மக்களின் அடிப்படை கைத்தொழில் ஈச்ச மரத்தின் இலைகளை தாங்கி நிற்கும் நடுவிலுள்ள தண்டை (ஈன்சு )வைத்து அழகான   நெல் ,சோறு  வடிகட்ட பயன்படும் கூடைகள்,  கோழிகளை அடைக்கும் கூடைகள் ,அர்ச்சனை கூடைகள்  போன்றவற்றை முடைந்து  வியாபாரம் செய்கிறார்கள் .சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த தொழிலை செய்கிறார்கள் .விவசாயகாலங்களில்  இவர்களின் தொழில் நன்றாக இருக்கும். இன்றுவிவசாயிகளே இன்று விவசாயத்தை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர் .அறுவடை காலத்திற்கு பிறகு வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள் .ஒரு சிலர் தற்போது இலவச வீட்டு மனை திட்டத்தின் வழி சிறு குடிசைகளை போட்டு வாழ்கிறார்கள். மாற்றங்கள் ஓன்று தான் மாறாதது என்பதை உணராவிட்டால் வாழ்க்கை  கேள்வி குறியே ?


பின்குறிப்பு :
                         மின்சாரம் தட்டு பாடு காரணமாக இன்று  மின்சாரம் 9 மணி நேரம் மட்டுமே இருந்தது .

2 comments:

  1. விரைவில் அவர்கள் வாழ்வு சீரடையட்டும் ..

    மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. விரைவில் அவர்கள் நிலை நல்லபடியாக மாற வேண்டும் என்று வேண்டுகிறேன்...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !