Nov 15, 2012

வியப்பை தரும் நூலகங்கள்

     "கற்றது கை மண் அளவு ,கல்லாதது உலக அளவு " என்ற ஔவையின் வாக்கு படி ,நம் கற்கும் கல்வி நூல் புத்தகத்தோடு நின்று விடாமல் அறிவை மேம்படுத்தி கொள்ளவும், உலகத்தின் பல திறன்களை கற்று கொள்ளவும்  உதவுவது நூல்களே.இன்று வாசிக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. தேவைப்படும் புத்தகத்தை  எல்லோரும் விலை கொடுத்து வாங்கிட இயலாது.நூலகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து  பிறகே நூல்களை இரவல் பெற முடியும் என்பது யாவரும் அறிந்ததே .நம் நாட்டின் நூலக சேவைகளுக்கும்  வெளி நாடுகளுக்கும் உள்ள நூலகதிற்கும்  ஒரு ஒப்பீடு தான் இந்த பதிவு .
   நூலக அமைப்பு :
                                          சிங்கப்பூரின் உள்ள நூலகங்கள் அனைத்தும்   ஒரே அமைப்பாக     தேசிய நூலக வாரியம் (National Library Board)இணைக்கப்பட்டு  இருக்கிறது. நூலகங்கள் அமைந்து இருக்கும் கட்டிடம் பரந்த இட பரப்புடன் வாகன நிறுத்துமிடம் , சிற்றுண்டி வசதியுடன் இருக்கிறது .முக்கிய கிளை நூலகங்கள் 100 (100,000 sqare feet)சதுரத்திற்க்கு  மேலும்  3 அடுக்கு மாடி வரையிலும் , சிறுவர்க்கு ,பெரியவர்க்கு , மாணவர்களுக்கு என்று ஒவ்வொரு தளமும் பிரிக்கப்பட்டு உள்ளது.  இங்கு நூலகத்தில்  உறுப்பினராக சேர்வதற்கு அடையாள அட்டை இருந்தால் போதும் .திரை படங்கள் ,கார்டூன் , மென் பொருட்கள் ,மொழிகள் பயிற்சி என்று ஒளி வட்டாக  (cd.dvd)பல  ஆயிரம் இருக்கும் .அப்படி என்ன சிறப்பு என்றால் சிங்கையில் ஒரு  நூலக கிளையில் புத்தகங்களை இரவல் பெற்றால்        சிங்கப்பூரின் எந்த நூலக கிளையிலும் திரும்ப  கொடுக்க முடியும்.ஒரு நபருக்கு 8 புத்தககங்கள் வரை இரவல் பெற முடியும். ஒளி வட்டாக  (cd.dvd)இருந்தால்4 வரை மற்றும்  4 புத்தகங்கள்  இரவல் பெற முடியும்

சேவைகள் :
                       சிங்கையின் இந்த ஒவ்வொரு நூலகத்திலும் நான்கு மொழிகளில்  (ஆங்கிலம் ,சீனம் ,மலாய் ,தமிழ் )நூல்கள்இருக்கும்.ஒவ்வொரு மொழியிலும் பல ஆயிரம் முதல் பல புத்தகங்கள் இருக்கும் .ஒரு சில கிளைகளில் தமிழ் மொழியில் மட்டும் லட்சம் புத்தகங்கள்  வரையில் இருக்கும்.ஆங்கிலம் மொழியில் மட்டும்  மற்ற மொழிகளை விட அதிகமாக இருக்கும். வருட சாந்தா $ 42 மட்டும் கட்டி புதுபிக்க வேண்டும்.சிங்கை குடிமக்களாக அல்லது நிரந்தர வாசியாக (PR) இருந்தால் சலுகை விலை$10.50  மட்டுமே.உறுப்பினர் ஆனவுடன் நூலகத்திற்கு என்று தனி கணினி அடையாள அட்டை வழங்கப்படும் .இந்த அட்டையை பயன்படுத்தி சிங்கப்பூரின் எந்த நூலகத்தின் நூலகளையும் இரவல் பெற முடியும்

                     புதிய  நூல்கள்  வரவு வந்து கொண்டே இருக்கும்.நூல்கள்   21 நாட்களும் , ஒளி வட்டாக  இருந்தால் 15 நாட்களும்  திரும்ப கொடுத்து விட வேண்டும் .தவறும் பட்சத்தில் நாள்  ஒன்றுக்கு   ஒரு புத்தகதிற்கு $0.20 ம்     ஒரு ஒளி வட்டுக்கு  $0.45 ம் அபராதம் கட்ட வேண்டும் .அபராதமும் தானியங்கி இயந்திரத்தில் கட்ட தனியாக இருக்கும் .வங்கி அட்டை (Bank card)அல்லது  காசு அட்டை(cash card) ,பயண அட்டை (ez -link)மூலமாக நாம் செலுத்தலாம்.
   சில முக்கிய கிளை நூலகங்கள் அங் -மோ -கியோ , தஞ்சோங்  காடோங் ,சென்ட்ரல் ,அல்ஜுநிஎட் ,ஒர்சிர்ட் .



வசதிகள் :

                 நூல்களையும்  திருப்பி கொடுக்க  தானியங்கி இயந்திரம்   (kiosk)உள்ளேயும் வெளியேயும் தனியாக இருக்கும்.வெளியே உள்ள இயந்திரத்தில்  24 மணி நேரமும்  இருப்பதால் எப்ப வேண்டுமானாலும் தூக்கி போட்டு விட்டு போகலாம் . நமக்கு   தேவைப்படும் புத்தகங்களை நாம் எடுத்து கொண்டு தானியங்கி இயந்திரத்தில் பதிவு செய்து கொண்டு போயி கொண்டு இருக்கலாம் .பதிவு செய்யாத   முடியாத அல்லது  புதுபிப்பு மற்ற சேவைக்காக மட்டும் அலுவலரை நாட வேண்டி இருக்கும். .  நூலகம் முழுக்க குளிருட்ட பட்டு அமைதியாக படிக்க சில அறைகளும் உண்டு.பாட்டும்  கேட்க தனி இடமும் ,  மடிகணினி , தொலை பேசி போன்றவற்றிக்கு மின்கலத்தில் தேவை படும் மின்சாரமும் பயன் படுத்தி கொள்ளலாம் .  ஒரே தலைப்பில் உள்ள  நூல்கள்  பல உண்டு  அதனால் பலரும் இரவல் பெற முடியும்.முக்கியமாக  நூலக கணினியில் நமக்கு தேவைப்படும் புத்தகத்தை எங்கு எந்த கிளை நூலகத்தில்சென்றால் எடுத்து கொள்ளலாம் என்பதை அறிய முடியும்.
          
    நம் நாட்டில் புத்தகத்தை வாசிப்போர் குறைவு .அதிலும்  நூலகத்திற்கு  சென்று படிப்போர் மிக குறைவு.நல்ல நூல்களை சுவாசிக்கும் அன்பர்கள் சொந்தமாக வீட்டில் நூலகம் வைத்து இருப்பார்கள் . இங்கு உள்ள நூலகம் பெரும்பாலும் வாடகை கட்டிடத்தில்  தான் இயங்குகிறது.நல்ல சில புரவரல்களால் நன்கொடை  பணமாகவோ அல்லது புத்தகமாகவோ அளிக்கப்பட்டு இயங்குகிறது. பல கட்டிடம் இடிந்து விழ கூடிய நிலையில் தான் இருக்கிறது .  நூலக கிராமங்களில் அரிதாகவே நூலகம் இருக்கும் .நூலகத்தில் உறுபினராக சேர்வதற்கு உள்ளூர் நகரவாசியாக இருந்தால் மட்டுமே சாத்தியம் .இல்லையேல்  வெளியூராக   இருந்தால் முக்கிய பிரமுகவரின் சிபாரிசு கடிதம் தேவை படுகிறது.

     புத்தகங்கள் பெரும்பாலும் பழையதாகவும்  ,ஆண்டுகளுக்கு  முன் உள்ளவையாக மட்டுமே இருக்கிறது.இரவல்  எடுத்த புத்தகத்தை திருப்பி தராத நல்லவர்களால் தான் இப்படி என்கிறார்கள்  நிர்வாகத்தினர் .மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றால்  மட்டுமே நாமமும் நாடும் முன்னேற முடியும் .நாமும்  எதிர் பார்போம்  கூடிய விரைவில் மாற்றம் வரும்  என்று.

படங்கள் : google
 
    அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் 

2 comments:

  1. அசர வைக்கும் படங்கள்... விளக்கமான தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !