Nov 8, 2012

விவசாயிகள் எனும் ஏமாளிகள்

    இந்திய நாடு  மற்ற ஐரோப்பிய நாடுகளை போல தொழில் புரட்சி   உள்ள நாடல்ல ,மாறாக 70 சதவிகிதம்  விவசாய நாடு .நாம் தற்போது விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தாலும் வளரும் இந்தியாவின் எதிர்காலம் உணவு பற்றாக்குறை கண்டிப்பாக வரகூடிய காலம் அதிக தூரமில்லை .வெளிநாடுகளுக்கு சென்று பல வருடங்களுக்கு பின்னர்  கிராமத்தை பார்க்கும் போது புறக்கணிக்கப்பட்ட விவசாயம் ,கிராமத்தின் சூழ்நிலை இந்த பதிவை எழுத துண்டியது.இது முழுக்க சிறு விவசாயிகள் பற்றி ஒரு சிலர் அறிந்து இருந்தாலும் பலர்க்கு தெரிய வாய்ப்பில்லை .
   பொய்யாமொழி புலவரின்   உழவர்க்கு என்று பத்து  குறள் எழுதி சிறப்பித்து இருக்கிறார் .
        உழுதுண்டு வாழ்வாரே  வாழ்வார் மற் றெல்லாம் 
        தொழுதுண்டு  பின்செல்  பவர் .  

உழவு செய்து அதனால்   கிடைத்ததை உண்டு வாழ்கிறவரே  உரிமையோடு
வாழ்கிறவர். மற்றவர் எல்லோரும் பிறரை தொழுது   உண்டு பின் செல்கின்றவரே.

  மோகன் தாஸ்  கரம் சந்த் காந்தியே இந்தியாவின் இருதயம் கிராமங்களில் இருக்கிறதுஎன்று  கூறினார்.கிராம மக்களின் வாழ்க்கை‌ 90 சதவிகிதம் விவசாயத்தை நம்பி தான் இருக்கிறது. கிராமமக்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில்கள் தெரியாது.பருவ மழை பொய்க்காமல் பெய்தால்  பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இல்லாவிட்டாலும் வருடத்திற்கு தேவை போக விற்கும் அளவுக்கு நெல் அறுவடை ஆகும். உழவன் கணக்கு பார்த்தல் உழுவதற்கு பயன் படும் ஏர் கூட மிஞ்சாது என்பார்கள் .உண்மையான நிலையும் அது தான் .

         ஆடி மாதம் விதை விதைத்து ,உழுவதற்கு ,களையெடுக்க ,உரம் ,அறுவை செய்ய என்று ஆகும் செலவிற்கு பெரிய பட்டியலே போடலாம் . கண்மாயில் தண்ணீர்  இல்லாவிட்டால் பற்றாகுறைக்கு நடு இரவில் கூட திறந்த பனி வெளியில் தண்ணீர் பாய்ச தூக்கம் கெட்டு , ஒரு மணி இவ்வளவு  ரூபாய் என்று செலவு செய்து மயில்  , எரும்பு, எலி , ஆடு ,மாடு தின்றது ,நெல்லை சீப்பு வைத்து திருடும் நுதன திருட்டு போக மிஞ்சும் நெல்லை  தை மாதம் அறுவை செய்யது  புது நெல் வீடு வர பெண்ணிற்கு பிரசவம் பார்த்த கதையாகி விடும்.பாடு பட்டு சேர்த்த நெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகளிடம்  அடிமாட்டு விலைக்கு கொடுத்து கிடைத்ததை வாங்குபவர்கள்  விவசாயிகள் .காய்கறிகள்  உற்பத்தி செய்யும் விவசாயிகள் நிலையும் இது தான் .
      
        பிரபல நிறுவங்கள் தயாரிக்கும் பொருளின் அடக்க விலை அதில் போடப்பட்டு இருக்கும் அதிக பட்ச விலையில்பாதி தான் இருக்கும் என்பது தெரிந்தும்பேசாமல் வாங்கி வருவோம்.விலை வாசி ஏற்றம் கண்டு அனைத்து பொருட்களின் விலை ஏறும் ஆனால் இறங்காது, அதையும் வாங்கி வருவோம் .காய்கறிகள் விலை ஆண்டுகளாக ஏற்றாமல் இருந்து சற்ற விலை ஏறினால் பேரம் பேசுகிறோம் .இந்த பொருளின் உற்பத்திக்காக  அவரின் உழைப்பை எத்தனை பேர் எண்ணி பார்த்து இருப்போம் .

     .உரங்களின் விலை மட்டும்  அரசு இரு மடங்காக ஏறி விட்டது.கிராம புரத்தின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ்  இரண்டு மணி நேரம் வேலை ,மற்ற எல்லா வேலைகளிலும் கடுமையான ஆட்கள் பற்றாகுறை ஏற்படுத்தி விட்டது. விவசாயமே இல்லை என்ற போது கண்மாய்களையும் வாய்க்கால்களையும் இந்த திட்டத்தின் மூலம் சரி செய்து என்ன பயன் ?நிலங்களை கூறு போடும் வியாபாரமும்(Real estate) நன்றாகக நடக்கிறது.வேலை செய்யும் நபர்கள் வேலை முடித்தவுடன் நெல் அல்லது பணத்தை பெற்று செல்வர் ,பிறகு நிலை மாறி பணத்துடன் குடிப்பதற்கு சீமை சாராயம் .இப்பொழுது அப்படி இருந்தும் ஆட்கள் வேலைக்கு வர தயாராக இல்லை.பெரிய நகரங்களின் முறையான கழிவு நீர் திட்டம்  வெளிநாடுகளில் போல இல்லாமல்  பாசன நீரில் கலக்கிறது. கடுமையான உர தட்டுப்பாடு ,வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை , நகரத்தின் கழிவு நீர் பசன நீரின் கலப்படம், போதிய விலை இல்லாமை ,வன விலங்குகளின் சீரழிப்பு போன்றவற்றால்   நடுத்தர விவசாயிகள்  விவசாயத்தை புறகணிக்க ஆரம்பித்து விட்டனர் .


    நன்செய் நிலங்கள் எல்லாம் களிர் நிலங்களாக மாறி விட்டது .கருவேல மரங்கள் முட்செடிகளும் ஆக மாறி விட்டது . கருவேல மரங்கள் டன்  ஒன்றுக்கு 2200   ரூபாய்    என்று  விலை போவதால் எந்த செலவும் செய்யாமல் வருவாய் பெரும் வழியை விவசாயிகள் பின் பற்ற ஆரம்பிக்கின்றனர் .கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயம்  செய்யாமல் விட்டு விட்டதால் ,இன்னும்  சிலஆண்டுகள் தொடர்ந்தால் விவசாயம் எப்படி செய்வது என்று அடுத்த தலை முறைக்கு தெரிய வாய்ப்பில்லை   .தலை முறை இடைவெளி என்பார்களே அது நடை பெறுமோ என்று அச்ச படவைக்கிறது.


      உழவு தொழிலை  மக்கள் பலரும் மதிப்பதில்லை  , அலுவலக வேலை செய்வதையும் ,பொறியாளராக ,கணினி அல்லது சொந்த தொழில் செய்வதை தான் மக்கள் பெருமையாக நினைகிறார்கள் .இன்னமும் பலர் வேலை வெள்ளை  சொள்ளையுமாய் செய்யாமல் அரசியலில் ஆதாயம் தேட நினைக்கிறார்கள் .உழைப்பையும் ,உழைப்பவர்களையும் மதிக்காத எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. 

         விவசாயிகள்  விவசாயத்தை புறகணித்தால் என்ன மோசம் போச்சு கடையில் காசு கொடுத்தால் வாங்கி விடபோகிறோம் . என்ன சரி தானே.?நிற்க ! முன்பு நகரங்களில் வாழ்பவர்கள் மட்டும் அரிசி வாங்கும் நிலை மாறி கிராம புரத்தில் வாழ்பவர்களும் வாங்க வேண்டிய நிலை வரும்.தஞ்சையும்  மூன்று போகம் விவசாயம் மாறி இரண்டு போகமாக மாறி கொண்டுகிறது.   இறக்கு மதி செய்ய வேண்டி வருவதுடன் விலை கண்டிப்பாகஏறி விடும்.நன்செய் நிலங்களை வெளி நாட்டு நிறுவங்கள்  விவசாய பண்ணைகள் நிறுவ வாங்கஆரம்பித்து விட்டனர் .பின்னர் வால்மார்ட் போல அவர்கள் நிர்ணயிக்கும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரலாம் .

    இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதித்த பொது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை மிக பரிதாபமானது .துபாய் நாட்டின்தடையற்ற ஒப்பந்தத்தின் பெயரில் அரிசி  துபாய் சென்று பின் சிங்கை வந்தடைதது.சிங்கையில் பொதுவாக புழுங்கல் அரிசி  $5  ($ 1வெள்ளி  =35 ரூபாய் ) கிலோ அரிசியின் விலை தான் .இக்கட்டான சூழ்நிலையில் புழுங்கல் அரிசி  $25  கிலோ வரை விற்க பட்டது.பச்சை அரிசி  விலை குறைவு  அதை வாங்கி விடலாம் தமிழர்கள் பச்சை அரிசி எத்தனை பேர் பயன் படுத்துகிறோம் .அந்நிலை இங்கு வர அதிக காலமில்லை என்றே தோன்றுகிறது.

    
 வயல் வெளியின் பசுமை ,காற்றில் அலைகளாக ஆடும்பயிர்கள் ,பெண்களின் பாட்டு சப்தம் ,  குயில்களின் கூவல்கள் ,சலசலத்து ஓடும் தண்ணீர்  , துள்ளி வரும்  மீன்கள் , கொக்குகளின் தவமிருப்பு , வயல்வெளியில் பனை மர இலை பட்டையில்உணவு ,இழந்தது இன்னும் பலகனத்த நினைவலைகளுடன் ...

     

2 comments:

  1. ஒவ்வொரு வரியும் உண்மை... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. @திண்டுக்கல் தனபாலன்
    மனம் வருந்தி தான் இந்த பதிவை எழுதினேன் நண்பரே !

    ReplyDelete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !