Nov 23, 2012

குடிகார குப்பன்களும் பெண்ணியமும்

         விருந்து  உபசரிப்புகள்  ,நண்பர்களின் மகிழ்சியை பகிர ஆரம்பிக்கும் உற்சாக பானம் பீர்லில் தொடங்கி  கடைசியில் பிராந்தி ,விஸ்கி முடிகிறது.மனிதன் எதையுமே பத்து நாட்கள் தொடர்ந்து  செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது .கவலையை மறக்க ஆரம்பிக்கும் குடி பின் பழக்கமாக மாறிவிடுகிறது.குடிகாரர்களின் நண்பர்கள் வட்டமும் அப்படியே அமைந்து இருக்கும்.குடிக்க பணம் கிடைக்காத போது  கொடுக்காத மனைவியையும் ,தாயையும் அடிக்கவும் ,துன்புருத்துதவும் தயங்குவதில்லை .தினசரி பார்க்கின்ற காட்சியின் பிரதிபலிப்பு இந்த பதிவு .
   "மது உடலுக்கு , வீட்டுக்கு ,நாட்டுக்கு   கேடு " இது அறிவிப்பு ."குடிக்காதவன் வீடு விடியாது"  இது  குடிமக்களின் வாதம்.மதுவே  அனைத்து கெட்ட காரியங்களுக்கு துணையாக இருக்கும் , தனது பகைவனாலும் அஞ்சப்பட மாட்டார்  மாறாக தனது புகழையும் இழப்பர் என்பது வள்ளுவரின் வாக்கு  .
  
     உட்கப்படா  அர்  ஒளியிழப்பர்  எஞ்ஞான்றும்
      கட்காதல்  கொண்டொழுகு   வார் .

  தமிழகத்தில் சாராய கடை இல்லாத ஊர் இல்லை என்ற அளவிற்கு கடைகள் நீக்க மற நிறைந்து இருக்கிறது.தமிழக அரசின் சாதனையாக மது விற்பனை அளவு மாதம் 22௦௦ கோடிக்கு  மேல் கூடிகொண்டே இருக்க குடிகார மக்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.அன்று அரிதாக குடித்த இளையர்கள்  இன்று குடிக்காத மக்களை அவர்கள் மனித கணக்கில் எடுத்து கொள்வதில்லை .நண்பர்கள்  வேலை பதவி உயர்வு , திருமணம் ,பண்டிகைகள் ,வெளிநாடுகளில் பயணம் என்று மகிழ்சிக்கும் மது கேட்கிறார்கள் ,இறப்பு போன்ற நேரத்திலும் துக்கம் தொண்டையை அடைபதாக கூறி கேட்கிறார்கள் .புதுசட்டை , செருப்புக்கு கூட விருந்து கேட்கிறார்கள்.அவர்களுக்கு தேவையெல்லாம் கூடிப்பதற்கு  ஒரு காரணமே .

      நண்பரின் தந்தை இறப்புக்கு வேலை செய்யும் நபர்கள் கேட்பதெல்லாம் மதுவை தான் . சாராய கடையின் நிலை பார்த்தால் இன்னமும் மோசம் .அந்த நேர மதுவிற்கு கடையில்  எல்லாமே நிர்ணயிக்க பட்ட விலையை காட்டிலும் மூன்றில் இருந்து ஐந்து ரூபாய் விலை  அதிகம் . கொடுக்காவிட்டால் உள்ளே சரக்கை வைத்து விடுவாரோ என்ற பயம் .சரக்கை வாங்கி அதை பெரிய பொக்கிஷம் போல  பாது காப்பதை  பார்க்க வேண்டுமே  ! இதில் லாபம் பார்த்து கல்லா கட்டுவது எல்லாமே சாராய கடையின்இணைப்பாக இருக்கும் பார் தான் .காலையில் கடை திறக்க நேரம் ஆவதால் இங்கு 80ரூபாய் மதுவை  100ரூபாய் கொடுத்து வாங்கி அருந்துகிறார்கள் .

           காந்தி ஜெயந்தி  பிறந்த நாள் போன்ற கடையடைப்பு நாட்களில் இங்கு இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்குகிறார்கள் .காந்தி மது விலக்கு கோரினர் என்பதற்க்காக   அன்று மட்டும் குடிமக்கள் குடிக்காமல் இல்லை .     மதுவுக்கு அடிமையான  குடிமகன்கள்  விலையை பற்றி  கவலைப் படுவதில்லை .  மதுகூடத்தில் ஏன்  சீக்கிரம் திறப்பதில்லை என்று கவலை படும் குடிமக்களுக்கு பார் வைத்து இருப்போரின் பதில் "உங்களுக்கு  சேவை செய்ய தான் நாங்கள் இருக்கிறோம் காவல்துறை விட மாட்டேன் என்கிறது "   என்று அவர் கவலையை  கூறுகிறார் .குடித்துவிட்டு வாகனத்தை செலுத்தும்போது  பலர் சாலை விபத்துகளுக்கு உள்ளாகிறார்கள் .வருடந்தோறும் சாலை விபத்துகள்  அதிகரிப்பதற்க்கு  மது மிக முக்கியமான காரணம் .பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று ரத்தம் இழப்பு  ஏற்பட்டு உறவினர்கள் நண்பர்களையும் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.

     முழு குடுவை முழுவதையும் எதையுமே கலக்காமல் குடித்து விட்டு அமைதியாக  போவோரும்  உண்டு .  கொஞ்சம் குடித்துவிட்டு சலம்பல் செய்வோரும் உண்டு .வீட்டிற்க்கு வந்து மனைவியுடன் சண்டை போடும் குடிமகன்கள் அக்கம்பக்கம் இருப்போரை கருதுவதில்லை .வாயில்  வரும் ஆபசமான வார்த்தைகள் மற்றவரையும்  சினம் கொள்ள வைக்கிறது.அவர்கள்  தாயையும் தாரத்தையும் மகளையும்  பாகுபாடில்லாமல் திட்டும் போது அவர்கள் நிச்சயமாக மனித கணக்கில் வர மாட்டார்கள் .மனைவியை அடிக்கும்போது சமரசம்  செய்ய  யாராவது  வந்தால் அவர்களையும் என் மனைவியை  அடிக்கிறேன் உங்களுக்கு என்ன மீறி பேசினால் வரும் வார்த்தை "அவளுடன் உங்களுக்குஎன்ன தொடர்பு" .பிறகு  யார் வருவார் .

    மறுநாள் பார்க்கும்போது எதுவுமே  நடக்காதது போல நடந்து கொள்வதை  என்ன வென்று சொல்ல .பெண்களுக்கு   பாதுகாப்பு சட்டம் இருந்தும் அவர்கள் காவல் நிலையத்திற்கு போகவே  யோசிக்கிறார்கள்.குழந்தைகளின்  எதிர்காலம் ,பயம்எல்லாமேபெண்களையோசிக்கவைக்கிறது.தனித்து வாழ்வது சிங்கத்திடம் தப்பித்து நரிகளிடம் அகப்பட்ட கதை தான் .தினசரிசண்டை சச்சரவுகள் இருந்தாலும் அனுசரித்து வாழ்கையை  நடத்துகிறார்கள் .

       வெளிநாடுகளில்   கணவரும் ,மனைவியும்  சேர்ந்து புகைபிடிப்பது , மது அருந்துவது போன்ற காட்சிகளையும் பலமுறை கண்டுருக்கிறேன் .ஆனால்  அவர்களுக்குள் அடிதடி , சண்டை , சச்சரவுகள் என்றால் மணவிலக்கு கோர பெண் தயங்குவதில்லை .குழந்தைகளின்  எதிர்காலத்தை கூட கருதுவதில்லை,தனி மனிதசுதந்திரம் தான் பெரிது .பெண்களுக்கு  அந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது.பிடிக்காத  ஆளுடன் தொடர்ந்து  குப்பை  கொட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.

   அந்த வகையில் பார்க்கும் போது இந்திய பெண்கள் நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர்கள் .காலத்தின் மாற்றம் எல்லாமே மாறி வருகிறது , நகரங்களில்  உள்ள வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களின் மனநிலைமை மாறி வருகிறது. குடிமக்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்வி  குறியே?

பின்குறிப்பு :
                        மின்சாரம் நாள் ஒன்றுக்கு 8மணி   நேரம் இருப்பது சாதனையாக இருக்கிறது.மது கடை நிலை நண்பரின் தந்தை இறந்த போது அதிகாலையில் கண்ட காட்சிகள் தான் . படித்த பின் உங்கள் கருத்துகளை பின்னுட்டம்  இடுங்கள் .

படங்கள் :Google

6 comments:

 1. பல குடும்பங்கள் சீரழிவதே இதனால் தானே...

  இந்த மன நோயை தானாக மாற்றிக் கொள்ள(ல்ல) வேண்டும்...

  ReplyDelete
 2. சிறப்பான அலசல்.

  திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....

  அது போல் தான் இதுவும்! :(

  ReplyDelete
 3. உங்களுடைய இந்த சிறந்த பதிவு எனது வலைப்பூவிலும் இணைக்கப்பட்டுள்ளது நன்றியுடன்.....http://parithimuthurasan.blogspot.in/2012/11/eppadipirapalamaavathu.html

  ReplyDelete
 4. திண்டுகல் தனபாலன் ,வெங்கட் நாகராஜ் ,பரிதி முத்துராசன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 5. மரியாதைக்குரியவரே,வணக்கம்.போதையின் அபாயங்கள் மிக மோசமாக சென்றுகொண்டிருப்பதை கண்ணுற்ற நாங்கள்,''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''என ஒருவார விழிப்புணர்வு பிரச்சாரத்தை காந்தியடிகள் பிறந்த நாள்விழாவாக கிட்டத்தட்ட ஈரோடு மாவட்டம் முழுவதும் செய்தோம்.அதன் விவரம் http://consumerandroad.blogspot.com - வலைப்பக்கத்தில் காணலாம்.குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு அதுவும் பள்ளி பருவத்தினருக்கு சரியான எச்சரிக்கை விழிப்புணர்வு கொடுத்த காக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்!..போதை பற்றிய தங்களது பகிர்வுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்....என Parameswaran.c// konguthendral.blogspot.com.Erode Dt.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

   Delete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !