Nov 3, 2012

மருத்துவமனை அவலங்கள்

         மனிதர்களுக்கு நோய்  வராதவரை தான் நிம்மதி.வந்து விட்டால் காசு , உறவு , இருந்து நிம்மதி வரை எல்லாமே போய்விடும் .இல்லாதவர்கள் கூடநோய் வந்தால் உடனே நாம் நாடுவது தனியார் மருத்துவ மனைகளை தான் , ஏன் என்றால் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் இல்லாமையும் ,செவிலியர்களின்(nurse) அலட்சியமான கவனிப்பும் ,செயல் பாடுகளும் , மோசமான சுகாதாரமும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்றால்  மடியில் பெரிய பொட்டலமாக பணத்தை கட்டி கொண்டு தான் செல்ல வேண்டி இருக்கும்.ஒரு சில நல்ல மருத்துவமனைகளும் ,மருத்துவர்களும்  இதற்கு விதி விலக்கு.
    

         சிறிய அல்லது நடுத்தரமான மருத்துவமனைகளுக்கு  மருத்துவமனைகளுக்கு சென்றால் சாதரணமான  காய்சல்  இருந்தால் கூட கூட  மருத்துவ மனையில் சேர்க்க சொல்லி விடுகிறார்கள் .முதலில் ரத்தம் ,ஈஸிசி ,தைராய்டு என்று  பல விதமான சோதனைகளை மாதிரிகளை எடுக்க சொல்வார்கள்.சோதனை முடிவுகள்  மும்பையில் இருந்து வர நான்கு  நாட்கள் ஆகும் என்பார்கள்.முடிவில் ஒன்றும்இல்லை சாதாரண காய்சல் தான் என்று கூறுவார்கள்.மறுபடியும் பிரச்னை தீரவில்லை என்று வேறு  எந்த மருத்துவ மனைக்கு சென்றாலும் ஆரம்பத்தில் இருந்து மறுபடியும் சோதனைகளை எடுக்க சொல்வார்கள்.ஏற்கனவே பார்த்தது இருகிறதே என்றாலும் இப்போது எல்லாமே மாறி இருக்கும் என்பார்கள்.

      அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரத்தம் தேவைப்பட கூடிய நிலையில் நோயாளி இருந்தால்  அறுவை சிகிசையை விட மற்ற செலவுகள் கூடிவிடும்.இப்பொழுது எல்லாம் மருத்துவமனைக்குள்ளே  மருந்தகம் (medical), ஆய்வகம் (lab) .கருவிகள் எல்லாமே வைத்து இருக்கிறார்கள் .மருத்துவர்கள் எழுதும் மருந்து வெளியில் சென்று தேடினாலும் கிடைக்காது , அந்த மருத்துவமனையை தவிர.இதற்க்காக தானோ என்னவோ ஒவ்வொரு மருத்து தயாரிக்கும் நிறுவனகளின் விற்பனை முகவர் (medical ref)பலர் மருத்துவர்களை சந்தித்து அந்த நிறுவனத்தின் மருந்துகளை சிபாரிசும் செய்கிறார்கள்.விலை குறைந்த தரமான மருந்துகள் இருந்தாலும் கூட பல மருத்துவர்கள் மருந்து நிறுவனங்கள் தரும் அன்பளிப்புகாவும் , வெளிநாட்டு பயணதிற்காகவும் அந்த மருந்துகளை சிபாரிசு செய்கிறார்கள்.

      மருந்துகளின் விலையும் அதிகமாக இருக்கும்.அதை வாங்கி செவிலியர்களிடம் கொடுத்தால் காசு கொடுத்து வாங்கிய மருந்துகள் பாதி திரும்பவும் மருந்தகத்திற்கு சென்று விடும்.மருத்துவமனைகளில்  இருதயம் ,எலும்பு,நரம்பு, கண்   பல பிரிவுகளில்  திறமையான மருத்துவர்கள்  பகுதி நேரமாக வந்து சிகிச்சை செய்வர். நோயாளிக்கு இருதயத்தில் பிரச்சினை இல்லாத போதும் அந்த சிறப்பு மருத்துவர் வரும் போது சோதனை எடுத்து கொள்ள சொல்கிறார்கள் .அதற்க்கு தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

      இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள்  கண்டிப்பாக அதற்கான செவிலியர் படிப்பை (nursing course)முடித்திருக்க மாட்டார்கள் .ஒரு சில பயிற்சி செவிலியர்கள் சில மாதங்கள் மட்டும்  பயிற்சிகாக இருப்பர்.அதனால் இவர்களிடம் கனிவான அணுகுமுறை இருக்காது.இந்த செவிலியர்களுக்கு வழங்கப்படும்  சம்பளமும் மிக குறைவு .அதனால் அவர்களும் எதற்கு ஏற்ற படியும், மருத்துவர்களின் நன்மதிப்பை பெறவும் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஒரு  விபரத்தில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள்  நோயாளிகளின்  குடும்ப பின்னிணி , வசதி போன்றவற்றை மருத்துவரிடம் தெளிவாக போட்டு விடுகிறார்கள்.ஒரு சிலர் மருத்துவமனைக்கும் கைலி அணிந்து கண்டு தான் வருவர் .அதன் உண்மை இப்போது தான் புரிகிறது.

           ஆபத்தான நோயாளிகள் இருக்கும் அவசர பிரிவினுள் (I.C.U) சாதாரணமாக பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் .அந்த நோயாளிகளுக்கு சிறுநீர் கழிக்க , மலம் கழிக்க  செவிலியர்கள் உதவுவதில்லை.உறவினர்கள்  யாராவது  உதவினால் தான் உண்டு .ஆனால் சிங்கப்பூரில் உறவினர்களும் , நண்பர்களும்  மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு இருந்திருகிறார்கள் ,நானும் பார்த்திருக்கிறேன் .அங்கு செவிலியர்கள் பணி மிக கருணையுடனும் , அன்போடும்  நடந்து கொள்கிறார்கள்.அங்கு தினமும் கண்டிப்பாக குளிக்க வேண்டும் ,முடியாதவர்களுக்கு   செவிலியர்கள் தங்கள் உடன் பிறந்த சகோதிரியாக  நினைத்து கொண்டு நிர்வாணமாக நிற்க வைத்து  குளிப்பாட்டி  விடுகிறதை  வார்த்தைகளில் என்னவென்று  சொல்ல.

          இந்திய மருத்துவ கவுன்சிலின் பரித்துரையின் படி அனைத்து மருத்துவமனைகளும்  ஒரே கட்டமைப்பாக  இணைக்கப்பட்டால்  நோயாளிகளின் குறிப்புகள் அடுத்த மருதுவமனைகளில் சிகிசைக்கு செல்லும் போது அதை பயன்படுத்தினால் வீணாகும் காசும் மன உளைசலும் மிஞ்சும் .இதனால்  நோயாளிகள் எந்த புது மருத்துவமனைக்கு சென்றாலும் ஏற்கனவே சிகிச்சை  செய்த மருத்துவர் , கொடுத்த மருந்துகள் மருத்துவ குறிப்புகள் இருக்கும்.இது நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஒரு சில நோயாளிகளின் நோய் ரகசியமாக வைக்க பட வேண்டியவர்கள் இதற்கு விதிவிலக்கு அளிக்கலாம்
தவறான மருத்துவம் செய்தவரும் ,விலை  உ யர்ந்த  மருத்துகள் பயன்பாடும்  தெரிந்து விடும்.

பின்குறிப்பு :
                         நான் பல நண்பர்களின் ,உறவினர்களின்  நிலைமையையும் ,இறந்த சில பெரியவர்களையும்  பார்த்து தான் இந்த பதிவை எழுத்தி இருக்கிறேன் .உங்கள் கருத்துகளை பின்னுட்டம் இடுங்கள் .பதிவு பிடித்து இருந்தால் சமுக தளங்களில் பகிரலாமே அல்லது ஓட்டளிக்கலாம் .நுனிப்புல் மேயாமல் முழுதும் படித்தவர்களுக்கு நன்றி.!
        .

15 comments:

  1. நீங்கள் சொல்வதெல்லாம் முன்பு நடந்தது... (இப்போது சில மருத்துவமனைகளில்)

    முன்பு ஒரு சேவை... இன்று ஒரு தொழில்... (கல்வியைப் போல)

    நீங்கள் முடிவில் சொன்னது நடக்கட்டும்...

    நன்றி...

    ReplyDelete
  2. தனபாலன் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.!

    ReplyDelete
  3. இப்போது இந்த துறையே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது.... அதுவும் பெரிய நகரங்களில் ரொம்பவே சுரண்டுகிறார்கள்.....

    ReplyDelete
  4. வெங்கட் நாகராஜ் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.!

    ReplyDelete
  5. Arumaiyaana padhivu. Kaalaththin nidharsanaththai pottu udaiththirukkireergal. Mulumaiyaaga rasiththi vaasiththen.

    Pls visit my site: http://newsigaram.blogspot.com/2012/11/blogger-town-46-3.html

    ReplyDelete
  6. சிகரம் பாரதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ! தொடர்ந்து வாருங்கள் .

    ReplyDelete
  7. பணமிருந்தால்
    பிணவறை திறக்கும்
    இக்காலத்தில்

    அரசு கைவிட்டு
    அடிபொடிகள்
    பொறுப்பேற்ற

    மருத்துவமனைகள்
    மனிதம் கொன்ற
    மரண சாலைகளே

    ReplyDelete
  8. பணமிருந்தால்
    பிணவறை திறக்கும்
    இக்காலத்தில்

    அரசு கைவிட்டு
    அடிபொடிகள்
    பொறுப்பேற்ற

    மருத்துவமனைகள்
    மனிதம் கொன்ற
    மரண சாலைகளே

    ReplyDelete
  9. @அ. வேல்முருகன் வேல்முருகன் தங்கள் வருகைக்கு நன்றி !அருமையான கவிதையாக வடித்து விட்டீர்கள் , தொடர்ந்து வாருங்கள் !

    ReplyDelete
  10. பலவிடயங்களை வெளிப்டுத்தியுள்ளீர்கள்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  11. @Muruganandan M.K.தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி !

    ReplyDelete
  12. மருத்துவ சேவை செய்ய, பணிக்கு வந்த காலம் போய், காசு பார்க்கவே பலர் இங்கு வருகிறார்கள்... என்ன செய்ய. காலக் கொடுமை...

    ReplyDelete

  13. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  14. மருத்துவமனை, மருத்துவர்கள் என நாடிச் செல்லும் எல்லோருக்கும் மனதில் இருக்கும் உணர்வுகளை ஆழமாக, சுருக்கென தைத்து எடுத்து விட்டீர்கள்.

    காய்ச்சல் வந்து விட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவுடன் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட், சதா டாக்டர், ஸ்பெசல் டாக்டர் என்று பிட்டுகள் போடப்படும்போது உலகில் இல்லாத எல்லா நோய்களும் வந்து விட்டதாக மனம் எண்ணி சாதாரண காய்ச்சல் ஜன்னியாக மாறி விடுகிறது.

    நடுத்தர வயதில் உள்ள ஒருவர் திடீரென தனது வீட்டை விற்று விட்டார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு "ஒன்றுமில்லை.. ஒரு ஜெனரல் செக் அப்புக்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகப் போகின்றேன்" என்றாராம் அவர்.

    இன்றைய சமுக நலனுக்கு தேவையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ராஜராஜன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !