இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ் என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை திருடுதல் ,கணியை முடக்குதல் என்று சைபர் குற்றங்கள் நீள்கிறது.
Dec 20, 2013
Nov 6, 2013
இணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அருமையான இணைப்பு நீட்சி (add -on)
இணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது நமக்கு தேவையானதுடன் மற்ற விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வைத்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.
Oct 27, 2013
முப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்
பொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d max,Rivet போன்ற மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது. cad வகைகள் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட மென் பொருட்கள் இருக்கிறது .இவை அனைத்தும் கட்டண மென் பொருட்கள்.இந்த மென் பொருட்கள் கணிணியில் இயங்க குறைந்த பட்சம் 2 GB தற்காலிக நினைவகமும் (ram ), 2 GB வன்தட்டில் (Hard disk)இடமும் வேண்டும்.விலையும் அதிகம் பெரிய நிறுவனங்கள் தான் விலை கொடுத்து வாங்க முடியும்.
.
.
Aug 31, 2013
vlc media player - க்கு புதுச்சட்டை போடுவது எப்படி !
கணிணியின் இயங்கு தளங்கள் பல இருந்தாலும் அது ஒவ்வொன்றுக்கும் பிரத்தியோகமான media player ஒன்று இருக்கும் . விண்டோவில் இயங்கு தளத்தில் window media player -ம் , மாக் இயங்கு தளத்தில் quick time player -ம் மற்றும் லினக்ஸ் பல இயங்கு தளங்களில் vlc media player - ம் இருக்கும் .vlc player ஆனது கற்றற்ற சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை நாம் கணிணியில் நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும் பார்க்க பயன்படுத்தி இருப்போம் .
Aug 20, 2013
தொடரும் விபத்துகளும் ,மனித தவறுகளும் !
ஒரு சில மாதத்திற்குள்ளாக இரண்டாவது முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் மேல் கூரை விழுந்து விட்டது .இதை கேள்விப்பட்டவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருப்பார்கள்.அப்படியானால் விமான நிலையத்தின் பாதுகாப்பு எப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை. இங்கு மேல் கூரை என்பது தளத்தை குறிக்காது , அதன் கீழ் உள்ள போலியான கூரை (false ceiling) அழகு படுத்துவதற்கு பயன்படும் கூரையை தான் குறிக்கும்.தண்ணீர் ஏன் இப்படி விழுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நீர் கசிவு தான் .
Aug 14, 2013
கைத்தொலைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு !
இரு நாட்களுக்கு முன்பு சந்தையில் ஒரு பெருங்கூட்டம் நடுவில் இளம்பெண் ஒருவர் அழுதுகொண்டே இருக்கிறார் . விசாரித்ததில் கைத்தொலைபேசி தொலைத்து விட்டார் . அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிந்தது . திருமண பரிசாக கணவர் ரூ 6,000 மதிப்பிலான நோக்கியா கைத்தொலைபேசி வாங்கி கொடுத்து இருக்கிறார்.அவரிடம் IMEI எண் ஏதும் தெரியுமா என்றால் , தெரியவில்லை . பலர் வந்து ஆறுதல் சொல்லியும் அழுகை நின்றபாடு இல்லை என்ன செய்வது.இதே போல மறுபகுதியில் மற்றும் ஒருவர் தொலைத்து விட்டார் .
Aug 10, 2013
புதுமையான தொழில்நுட்பம்
சிங்கையில் பணி செய்து கொண்டு இருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எடுத்து பேசினால் மறு முனையில் பெண் ஒருவர் .உங்களுக்கு அதிர்சட குலுக்கில் ஒரு மனை இடம் இந்தியாவில் ஒதுக்க பட்டுள்ளது .அதை பெற்றுக்கொள்ள நாளை மறுநாள் மாலை எங்கள் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள் என்றார்.அதிர்சடதின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லை . எப்படி எனக்கு இந்த மனை இடம் கிடைக்கிறது என்றதிற்க்கு ,கணிணி குலுக்கில்மூலம் தொலைபேசி எண்ணை தெரிந்தேடுத்தோம் என்றார்.
Aug 9, 2013
ஏமாறுவோர் இருக்கும் வரை ..........
இணையத்தில் பலருக்குஅதிருஷ்ட காற்று அடித்து இருப்பதாகவும் அதை அள்ளி கொண்டு போக உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மின் மடல் வந்ததாக படித்து இருப்போம் .அந்த காற்று என்பக்கமும் மின்மடல் மூலம் வீசியது.படித்து பார்த்தவுடன் நான் இன்ப அதிர்ச்சி அடைந்து விட்டேன்.ஒரு மின்மடலில் லோட்டேர்யில் 250 மில்லியன்(1மில்லியன் =10 லட்சம் )அமெரிக்க டாலர் ($2,500,000.00)அடித்து இருப்பதாகவும், அதை பெற உடனே இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் என்று இருந்தது.
Jul 20, 2013
நெருப்பு நரி(Fire fox) உலாவிக்கு தேவையான அருமையான இணைப்பு நீட்சிகள் (add-on)
இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக உலவி வேண்டும். விண்டோவில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் கண்டிப்பாக இருக்கும் .அதை தவிர புகழ்பெற்ற உலவிகள் (browsers)சில கூகிள் குரோம், நெருப்புநரி , ஒபேரா ,சபாரி . இதில் நெருப்புநரி உலவி (Fire fox) அருமையான , பாதுகாப்பான ,சுதந்திர இலவச மென்பொருள் ஆகும் . இதை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது .நெருப்பு நரி உலவிக்கு மட்டும் அதிகமான நீட்சி இணைப்பு தொகுப்பு (add-on) உள்ளது.அதில் சில மிக அவசியம் பயன்படும் இணைய நீட்சிகளை மட்டும் பார்க்கலாம் .
Jul 15, 2013
விண்டோவிற்கு மாற்றாக லினக்ஸ் இருக்க முடியுமா ? ஒரு சிறப்பு பார்வை !
நம் கணிணி இயங்க இயங்கும் மென்பொருள்(Operating System) தேவை , அது நிச்சயம் மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனத்தின் விண்டோ இயங்கும் மென்பொருளை(Window OS) நிறுவிஇருப்போம். அதை தவிர மாக் (mac OS x)நிறுவனத்தின் இயங்கும் மென்பொருள்ஆப்பிள் இருக்கிறது.இது இரண்டுமே கட்டண மென்பொருட்கள் .இதை தவிர லினக்ஸ்(Linux) இயங்கு தளம் இருக்கிறது.இது முற்றிலும் இலவசமான மென்பொருள் தொகுப்பு.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோ 8.1 (Window Blue)பழைய இடைமுகதொடு புதிய சோதனை பதிப்பு அண்மையில் வெளியிட்டது .கட்டண மென்பொருட்கள் எல்லாம் 3 மாதம் வரை தான் பயன்படுத்த முடியும்.ஆனால் இந்த முறை ஐந்து மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.லினக்ஸ் இலவசமான மென்பொருள் தொகுப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அசைத்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது .
Feb 20, 2013
பத்மநாதபுரம் அரண்மனை ஒரு சுற்றுலா பார்வை
பத்மநாதபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கி.மீ தொலைவில் தக்கலை என்ற இடத்தில் அருகே இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து நாகர்கோவில் 2 0 கி.மீ இருக்கிறது.திருவனந்தபுரம் 65 கி.மீ இருக்கிறது.இந்த அரண்மனையில் அப்படி என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும் . பத்மநாதபுரம் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு அறையிலும் புதையல் எடுத்தது பலருக்கு நினைவுக்கு வரலாம் .அரண்மனையில் சிறப்பு பற்றி பார்க்கும் முன்பு வரலாற்றை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
Feb 6, 2013
ISO image ஐ கணிணியில்எளிதாக நிறுவ உதவும் magic disc
ஒரு மென்பொருளை ஒரு முறை கணிணியில் நிறுவி விட்டால் மறுமுறை அதே மென்பொருளை கணிணியில் நிறுவ முடியாது.மறுபடியும் பயன்படுத்த கூடியதாக வேண்டும் என்றால் அந்த மென்பொருளை ISO image ஆக மாற்றினால் தான் முடியும.இந்த Magic ISO மென்பொருள் பிரத்தியோகமாக ISO image கோப்பாக உருவாக்க பயன்படுத்த படுகிறது .ஆனால் இந்த magic disc மென்பொருள் ISO image கோப்பை கூட DVD & pen
drive பயன்படுத்தாமலே boot-able DVDமாற்றிபயன்படுத்தமுடிகிறது.பெயருக்கு ஏற்ற மாதிரியே வேலை செய்கிறது. window 8 ஐ ISO image ஆக தரவிறக்கம் செய்தவர்களுக்கு பயன்படும் பதிவு .
Feb 2, 2013
இலவச மென்பொருட்கள் தரும் பிரச்னைகள்
கணினியை சொந்தமாக வாங்கி விட்டாலும் தேவைப்படும் மென்பொருள் எல்லாவற்றையும் விலை கொடுத்து எல்லோரும் விலை கொடுத்து வாங்க முடியாது.நமக்கு மென்பொருள் அவசியம் தேவைப்படும் போது 3 0 நாட்கள் மட்டும் பயன்படுத்த கூடிய அல்லது நண்பர்களின் பெற்றோ அல்லது இணையத்தில் இருந்து மாற்றம் செய்த மென்பொருளை( crack version) தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம் .தினம் தினம் புதிய மென்பொருள் உலகில் அறிமுகப்படுத்த படுகிறது . அது இலவசம் என்றவுடன் அதை பற்றி பெரிதும் யோசிப்பதில்லை , உடனே கணினியில் நிறுவி விடுகிறோம்.புதியவர்களுக்கு சொந்தமாக வைத்துஇருப்பவர்களுக்கு பயன்படும் இந்த பதிவு .
Jan 16, 2013
சிராவயல் மஞ்சுவிரட்டு புகைப்படங்களுடன் ஒரு பார்வை
![]() |
கட்டுமாடு |
முதலில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி .தமிழர்களின் முதன்மையான உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவர் திருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறோம் .பல நாடுகளில் இது அறுவடை திருநாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று நலிந்து வருகிற தொழில் இதுவும் ஓன்று.உழுதவர் கணக்கு பார்த்தால் கலப்பை கூட மிஞ்சாது .உழவர்களுக்காக உதவிய காளைகளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக மாட்டு பொங்கல் . ஆண்கள் வீரத்தை நிலை நாட்ட களைகளை அடக்கி வீரத்தை வெளிபடுதுவேர் .அடக்கிய வீரர்களுக்கு பரிசும் பணமுடிப்பும் உண்டு .
Jan 6, 2013
கீழா நிலைக்கோட்டை - வரலாற்றின் எச்சங்கள்
![]() |
கோட்டையின் முகப்பு உப்பரிகை |
Jan 4, 2013
தண்டனைகள் மட்டும் தீர்வாகுமா ?
இந்தியா முழுவதிலும் தற்போதைய பரபரப்பு செய்தியாகவும் , முக்கிய பிரச்சனையாகவும் உள்ள உதவி மருத்துவ கல்லூரி மாணவி வன்புணர்ச்சிக்கு பலியானது மக்களை போராட்டம் செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது. போராட்டம் காவலர் ஒருவரை பலி கொண்டு விட்டது.நிலைமையை சமாளிக்க மத்திய அரசும் வன்புணர்ச்சிக்கு தண்டனையாக 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,ஆண்மையை நீக்க வழி வகுக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்ய பட உள்ளதாக அறிவித்துள்ளது .
Subscribe to:
Posts (Atom)